Type Here to Get Search Results !

வரலாறு | Part - 7 | 28 Questions

History in Tamil Part 7

பிம்பிசாரர் (அர்யங்க மரபு)

1. இவர் அர்யங்க மரபின் முதல் மன்னர், இம் மரபே பின் சிசுநாத வம்சமாக மாறியது.

2. இவர் இராஜகிருஹா என்ற தலை நகரை உருவாக்கினார்.

3. பிம்பிசாரர் தலைநகரை கிரிவிராஜா என்னும் இடத்திலிருந்து ராஜகிரகத்திற்கு மாற்றினார். ராஜகிருகத்தின் எஞ்சிய சிதைவுகளை பாட்னாவுக்கு அருகே ரெக்கிஸ் என்னும் இடத்தில் காணலாம்.

4. மகதத்தின் சிறப்பை ஏற்படுத்திய முதல் அரசர் இவர்

5. சமண இலக்கியங்கள் இவரை ஸ்ரேனிகா என்று குறிப்பிடுகின்றன

6. மகாவீரரும், கௌதமபுத்தரும் இவரின் உறவினர்கள்.

7. புத்தருக்கு விருந்து கொடுத்தார்

8. பிரம்ம தத்தாவை வென்று அங்க நாட்டை சேர்த்துக்கொண்டார்.

9. கோசல நாட்டு கோசலா தேவியை மணந்து கொண்டு காசியை திருமண பரிசாகப் பெற்றார்.

அஜாத சத்துரு:

10. இவர் தனது தந்தையை சிறையில் அடைத்து பின் கொன்று ஆட்சியை கைப்பற்றினார்.

11. இவருக்கு எதிராக லிச்சாவிகள், மல்லர்கள், பாலர்கள், சிராவசுதி மன்னர்கள் ஆகியோர் இணைந்தனர். இதுவே விரிஜி கூட்டிணைவு எனப்படும்.

12. இவர்கள் அனைவரையும் அஜாத சத்துரு வென்று விரிஜிகள் நாட்டை மகத நாட்டுடன் இணைத்தார்.

13. இந்த விரிஜி கூட்டிணைவுகள் பாடலி என்ற கிராமத்தில் கட்டிய கோட்டையே பிற்காலத்தில் பாடலிபுத்திரம் எனப்பட்டது.

14. இவர் போரில் இரண்டு புதிய ஆயுதங்களைக் கண்டு பிடித்தார். அவை 1. மகாசீலகண்டகா 2. ரதமுசாலா

15. இவர் புத்தரை பலமுறை சந்தித்தார்

16. இவர் முதல் புத்த சங்கத்தை இராசாகிருகத்தில் கூட்டினார்

17. இவர் ராஜகிருகத்தில் ஒரு ஸ்தூபியை கட்டினார்

18. இவரது மகன் உதயபத்திரன் கொலை செய்யப்பட்டு சிசுநாகர் ஆட்சியை கைப்பற்றினார்.

19. சிசுநாகர் வம்சத்திற்கு பிறகு நந்தவம்சம் ஆட்சிக்கு வந்தது.

 

நந்த வம்சம் கி.மு. 345 – கி.மு. 362

1. புராணங்கள் 9 நந்தர்கள் 100 ஆண்டு காலம் ஆட்சி செய்ததாக குறிப்பிடுகிறது.

2. முதல் நந்த அரசன் : மகாபத்ம நந்தன்

3. இவர் நாவிதர் என கிரேக்க ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

4. இவர் சத்திரிகளை அழித்தமையால் இரண்டாம் பரசுராமன் என்று அழைக்கப்படுகிறார்.

5. இவர் கலிங்க நாட்டை வென்றதை காரவேலரின் அதிகும்பா கல்வெட்டு மூலம் அறியலாம்.

6. இவர் மகதத்துடன் இணைத்த பிறநாடுகள்: பாஞ்சாலம், காசி, அசுமகா, மிதிலை, குரு மற்றும் சூரசேனா ஆகும்.

7. இந்தியாவின் முதல் முக்கிய பேரரசர் அவர் ஏக்ராட் என்னும் பட்டத்தை சூட்டிக் கொண்டார்.

8. நந்த வம்சத்தின் கடைசி அரசர்: தனநந்தர். இவர் அக்ரசேனர் என்று அழைக்கப்பட்டார்.

9. இவரிடமிருந்து ஆட்சியை மௌரிய வம்சத்தைச் சார்ந்த சந்திரகுப்த மௌரியர் கைப்பற்றினார்.