Type Here to Get Search Results !

வரலாறு | Part - 8 | 81 Questions

History in Tamil - Part  - 8

மௌரியப் பேரரசு

சான்றுகள்

1. கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம்

2. மெகஸ்தனிஸ் எழுதிய இண்டிகா

3. விசாகத்தரின் முத்திரா ராட்சசம்

4. இலங்கையின் புத்த சமண நூல்களாக தீபவம்சம், மகாவம்சம்

5. அசோகரின் கல்வெட்டுக்கள்

6. ருத்ரதாமன் என்பவரது கிர்னார் கல்வெட்டு

7. ஆரியன், புளுடார்க், பிளினி, ஜஸ்டின் போன்ற கிரேக்க அறிஞர்களின் படைப்புகள்

8. பிற சான்றுகளான மனுதர்மம், காமசூத்திரம், பஞ்சதந்திரம், கமண்டகம், தண்டியலங்காரம், வாயு புராணம், விஷ்ணு புராணம், மத்யச புராணம்

 

சந்திரகுப்த மௌரியர் (கி.மு. 321-291)

9. இவர் மௌரிய வம்சத்தை நிறுவியவர்.

10. இவரது தாய் முரா வம்சத்தை சார்ந்தவர் என்றும், இவர் மயில் வளர்ப்பவரின் மகன் என்றும் கூறப்படுகிறது.

11. செல்யூகஸ் நிகேடருடன் போர் - போரில் வெற்றி. செல்யூகஸ் தனது மகள் ஹெலனை சந்திரகுப்த மௌரியருக்கு திருமணம் செய்து வைத்தார். சந்திரகுப்தர் நினைவாக கட்டப்பட்ட பழைமையான கோவில் சந்தராபாஸ்டி

12. செல்யூகஸ் தூதுவர் மெகஸ்தனீஸ்

13. மெகஸ்தனீஸ் எழுதிய நூல் இண்டிகா

14. இண்டிகா நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை. கிரேக்க இலத்தீன் ஆசிரியர்களான ஸ்ட்ராபோ, அர்ரியன், பிளின் ஆகியோர் இண்டிகாவிலிருந்து மேற் கோள்களாக காட்டியுள்ள சிறுசிறு பகுதிகள் நமக்கு கிடைத்துள்ளன.

15. சந்திரகுப்த மௌரியர் அரச பதவியை துறந்து சமண மதத்தை தழுவி பத்ர பாகு தலைமையில் சிரவண பெலகோலாவில் சென்று கி.மு. 298ல் மரணமடைந்தார். சிரவணபெலகோலாவில் உள்ள கோமதீஸ்வரர் சிலை சாமுண்டியர்களால் கட்டப்பட்டது.

16. குஜராத் மாநிலம் கிர்நார் மாவட்டத்தில் புகழ்பெற்ற சுதர்சன ஏரி வெட்டினார்

பிந்து சாரா

17. சந்திரகுப்த மௌரியருக்குப்பின் ஆட்சிக்கு வந்தவர். கிரேக்கர்கள் இவரைஅமிர்ததகடா” (எதிரிகளை கொல்பவர்) என்றனர்.

18. மெகஸ்தனீசுக்கு பிறகுடெய்மேக்கஸ்” “டையோனீசியஸ்ஆகியவர்கள் கிரேக்க நாட்டின் தூதுவர்கள்

 

அசோகர் (கி.மு. 273 – 236)

19. கி. மு. 273ல் பிந்துசாரர் இறந்திருப்பார் என்று கருதப்படுகிறது

20. இதற்கு பின் பதவி ஏற்றவரை அசோகர் என மாஸ்கி கல்வெட்டு குறிப்பிடுகிறது

21. அசோகர் காலத்து கல்வெட்டு அவரை தேவானாம்பிய பியதசி என்று கூறுகிறது.

22. தேவானாம்பிய என்றால் கடவுளால் நேசிக்கப்படுபவர் என பொருள்படும்

23. பியதசி என்றால் கனிந்த பார்வையுடையவர் என பொருள்படும்

24. இவருடைய மனைவி தேவி. சிவனை வழிபட்ட இவரை புத்தமதத்திற்கு மாற்றியவர் திசா என்ற உபகுப்தர்

25. இந்தியாவை ஆண்ட மிக சிறந்த மன்னர்

26. ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் 13 ஆண்டுகள் போரில் காலம் கழித்தார்

27. கி.மு. 261ஆம் ஆண்டில் தற்போது ஒரிசா எனப்படும் கலிங்கத்தின் மீது போர் தொடுத்தார். போரில் 1,50,000 பேர் கைதிகளாகப் பிடிபட்டனர். பல இலட்சம் பேர் உயிர் துறந்தனர். எனவே இனி போரிடுவதில்லை என சபதம் எடுத்துக்கொண்டார்.

28. அசோகர் போரிட்ட கலிங்க மன்னனின் பெயர் தெரியவில்லை

29. போருக்குப்பின் திக் விஜயம் எனப்படும் சண்டையிடுதலை விட்டு விட்டு தர்ம விஜயம் என்ற அகிம்சையில் செல்ல துவங்கினார்

30. அசோகர் மூன்றாவது புத்த மாநாட்டினை பாடலிபுத்திரத்தில் கூட்டினார்

31. கல்ப சூத்ரா என்ற நூலை பத்திர பாகு எழுதியுள்ளார்.

32. அசோகரின் வேறு பெயர்கள்: தேவனாம்பிரியர், பிரியதர்ஷிணி

33. இவர் தனது போதனைகளை பரப்ப பாலி மொழியை பயன்படுத்தினர்

34. அசோகரின் மகன் மகேந்திரன் மற்றும் மகள் சங்கமித்திரை புத்த மதத்தினை பரப்ப இலங்கை சென்றனர்.

35. இவர் புத்த, தர்மா ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டு அதன் வழி நடந்ததால் அசோகர் மிகச் சிறந்தவர் எனக் கருதப்படுகிறார்

36. அசோகரின் பேரன் தசரதன் ஆவார். இவர் அசோகருக்கு பிறகு கிழக்குபுற மாகாணங்களை ஆட்சி செய்தார்.

அசோகரின் கல்வெட்டுகள் - வகைப்பாடுகள்

14 பாறை ஆணைகள்

37. பதிமூன்றாவது பாறை கல்வெட்டு கலிங்க வெற்றியை குறிப்பிடுகிறது

38. கிரேக்க நாடுகளுக்கு அசோகர் அனுப்பிய தூதுக்குழுக்களை குறிப்பிடுகிறது

39. அசோகரின் நன்னெறி மற்றும் கொள்கைகளை கூறுகிறது

இரு சிறு பாறை ஆணைகள்

40. முதல் சிறு பாறைக் கல்வெட்டு அசோகருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கூறுகிறது.

41. இரண்டாவது பாறைக் கல்வெட்டு அசோகரின் தர்மகொள்கைள் பற்றி கூறுகிறது.

இரு கலிங்கா பாறை ஆணைகள்

42. இவை பதிநான்கு பாறைக் கல்வெட்டுகளின் இணைப்பாகும்.

43. எல்லைப்புறங்களில் உள்ள பழங்குடி மக்களிடம் நடந்துகொள்ள வேண்டிய முறைகளை கூறுகிறது.

பாங்ரூ கல்வெட்டு ஆணை:

44. புத்த சமயக் கல்வெட்டுகளிலிருந்து ஏழு பகுதிகளை இக்கல்வெட்டுகள் குறிப்பிடுகிறது

45. பராபர் குகைக்கல்வெட்டுக்கள்:அசோகரின் பயணங்களை குறிப்பிடுகிறது

7 கற்றூண் ஆணைகள்

சிறு தூண் கல்வெட்டுகள்:

46. இவை மொத்தம் நான்கு தூண்களாகும்.1.சுராநாத் 2. சாஞ்சி 3.ரும்மிண்டி 4. அலகாபாத்

47. அசோகருடைய பெயரைக் குறிப்பிடும் ஒரே ஒரு கல்வெட்டு ஆணை மஸ்கி கல்வெட்டு ஆணை ஆகும்.

முக்கிய பாறைக் கல்வெட்டு ஆணைகள்

48. ஷாபாஸ் கார்கிபெஷாவருக்கு அருகில்

49. மான் செஹ்ரா - பெஷாவருக்கு அருகில்

50. கால்சிஉத்திரப்பிரதேசம்

51. கிர்னார் - கத்தியவார்

52. சோபாராமும்பைக்கு அருகில்

53. தௌவுலிஒரிசா

54. ஜௌகடாசென்னைக்கு அருகில்

55. பெய்ராத் - ஜெய்ப்பூர்

56. சகஸ்ராம் - வங்காளம்

57. மஸ்கிஹைதராபாத் அருகில்

அசோகரின் தூண் கல்வெட்டாணகைள்

58. ரும்மிண்டிநேபாளம்

59. பாரநாத் - பனாரசு

60. லௌரியா நந்தன கர் - பீகார்

61. தோபராஅம்பாலா

62. சாந்திபோபால்

63. இக்கல்வெட்டுகள் பெரும்பாலும் பிராமி எழுத்துக்களே

சாணக்கியர்

64. இவரின் பூர்வீகம் கேரளா

65. இவரின் வேறு பெயர் : கௌடில்யர், விஷ்ணு குப்தர்

66. இவர் எழுதிய ஆட்சி நூல்: அர்த்த சாஸ்திரம் இந்த நூல் மௌரியர்களின் அரசியல், (States craft) சமுதாயம், சமயம் மற்றும் பொருளாதாரம் குறித்து அறிய உதவுகிறது. இது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது.

67. விற்பனை வரியை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்

68. இவரை இத்தாலியின் மேக்கிவல்லி என்ற அரசியல் சிந்தனையாளருடன் ஒப்பிடுகின்றனர். (மேக்கிவல்லி எழுதிய நூல் பிரின்ஸ்) இவர் சந்திரகுப்தர் மற்றும் பிந்துசாரரிடம் முதன்மை அமைச்சராக பணியாற்றினார்.

69. விசாகதத்தர்

இவர் மகாராஜா பாஸ்கரதத்தாவின் மகன் ஆவார்.

இவர் மூன்று நாடகங்களை எழுதியுள்ளார்:

1.. முத்ரா ராட்சகம்

2. தேவி சந்திரகுப்தம்

 3. Abisarika Vancitaka

மௌரியர்களின் நிர்வாகம்

70. மௌரியர்கள் தங்களது நிர்வாகத்தை 7 வகையாக பிரித்தனர்

a. மைய அரசு

b. மாகாண அரசு

c. உள்ளாட்சி அரசு

d. நீதித்துறை

e. வருவாய்த்துறை

f. இராணுவத்துறை

g. ஓற்றர் படை

71. மௌரிய அரசருக்கு நிருவாகத்தில் உதவி செய்ய மந்திரி பரீஷத் என்ற குழு இருந்தது.

72. ஒவ்வொரு கிராமமும் கிராமணி மேற்பார்வையிலும், பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் ஸ்தானிகர் கீழும், நான்கு முதல் பத்து கிராமங்கள் கோபர்கள் கீழும், நகரங்கள் நகரர்கள் கீழும் இருந்து வந்தது.

73. மௌரிய அரசு தாயுள்ளத்தோடு நிர்வாகம் செய்த அரசாகும். இதனால்தான் அசோகர் தனது கல்வெட்டுக்களில் அனைத்து மனிதப் பிறவிகளும் தனது குழந்தைகள் என்று கூறுகிறார்.

74. முக்கியமான அமைச்சர்கள் மந்திரிகள் எனப்படுவர். இவர்களை பிறர் சச்சிவா () ஆமேத்யா என்று கூறுவர்

75. தர்ம மகா மாத்திரர்கள் - மத போதகர், இவர்கள் தர்மத்தை போதிப்பவர்கள்

76. பிரதேசிகர்கள் - நிலவரி, கர்வல்

77. ராஜீகர்கள் - நிலங்களை அளப்பது

78. அந்த மகா மாத்திரர்களைஎல்லைப்புற காவலர்கள்

79. மௌரிய வம்சத்தின் கடைசி மன்னன் பிரகதாரா

80. மௌரியப் பேரரசும், சுங்க வம்சமும் வீழ்ச்சியுற்ற பின் யவனர்கள், சகர்கள், பகலவர்கள், குஷாணர்கள் ஆகியோர் இந்தியாவை ஆண்டனர்.

81. இவர்களுக்கு பாக்டிரியர்களும் பார்த்தியர்களும் இந்திய கிரேக்கர்கள் என்று அழைக்கப்படுகின்றன