Type Here to Get Search Results !

வரலாறு | Part - 6 | 62 Questions

History in Tamil | Part - 6 

அலெக்சாண்டரின் இந்தியப் படையெடுப்பு:

1. அலெக்சாண்டரின் இந்தியப் படையெடுப்பு குறித்து இந்தியச் சான்றுகள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

2. அலெக்சாண்டர் மாசிடோனியா நாட்டு மன்னன் இரண்டாம் பிலிப் என்பவரின் மகன்

3. இவரின் ஆசிரியர்: தத்துவஞானி அரிஸ்டாட்டில்.

4. இவரின் ஆசை: உலகம் முழுவதையும் ஒரே குடையின் கீழ் ஆள வேண்டும்

5. இந்தியாவை கிழக்கு மாசிடோனியா என அலெக்சாண்டர் நினைத்திருந்தார்

முதலாம் சைரஸ்

6. பாரசீகத்தில் அகமேனிய வம்ச ஆட்சியை நிறுவியவர்

7. கி. மு. 558-530ல் இந்தியா மீது படையெடுக்க முயற்சி செய்தார். பாக்டிரியா, காந்தாரம் ஆகிய பகுதிகளை வென்றார்.

முதலாம் டோரிசு கி. மு. 522-486

8. பாரசீகத்தின் மூன்றாவது அரசர்.

9. சிந்து மாநிலத்தை வென்று பாரசீகத்துடன் இணைத்தவர்.

10. அரிபெல்லா போர்: கி. மு. 330

11. மூன்றாம் டோரிசு காலத்தில் பாரசீக நாட்டின் மீது அலெக்சாண்டர் போர் தொடுத்தார்.

12. மூன்றாம் டோரிசு கொல்லப்பட்டார்.

13. அலெக்சாண்டர் இந்தியாவிற்குள் நுழைந்தார்.

14. அலெக்சாண்டர் சரணடைந்த முதல் மன்னன் தட்சசீலத்தை ஆண்டு வந்த அம்பி ஆவார்.

15. அலெக்சாண்டர் சிந்து நதியை கடக்க உதவி செய்தவர்.

16. அலெக்சாண்டருக்கு சரணடைய மறுத்தவர் போரஸ் என்ற புருஷோத்தமன். இவர் ஆண்ட பகுதி ஜீலத்திற்கும் சீனாப்பிற்கும் இடையே உள்ள பகுதி

17. போரஸ் மன்னன் தன்னை போர் கைதியாக நடத்தாமல் மன்னனாக நடத்த விருப்பம் தெரிவித்தார்.

18. போரஸ் மன்னனை மதித்து அலெக்சாண்டர் அவர் நாட்டினை திருப்பி அளித்தார்.

19. அலெக்சாண்டர் இறந்த ஆண்டு கி. மு. 323

20. இறந்த இடம் பாபிலோன்

21. அலெக்சாண்டர் படையெடுப்பு பற்றி அறிய உதவுவது அவரின் நண்பர் நியார்ச என்பவரின் குறிப்புகள் ஆகும்

22. பியாசு நதிக்கரையில் 12 பலிப்பீடங்களை நிறுவினார்.

23. அலெக்சாண்டரின் படையெடுப்புகள் விளைவாக பாக்டிரியா, பார்தியா போன்ற கிரேக்க குடியேற்றங்கள் ஏற்பட்டன

24. கிரேக்கபாக்டிரிய சிற்பிகள் காந்தாரத்திற்கு வந்தனர். அவர்கள் கனிஷ்கர், புத்தர், போதிசத்துவர் சிலைகளை செய்தனர். காந்தாரக்கலை எனப்படும் இந்தோகிரேக்க (பாரசீக) கலை உருவாயிற்று

25. இந்தியாவில் வானவியல், கலை, நாணயமுறை தோன்றியது.

மகாஜனபதாக்கள்:

1. புத்தரது காலத்தில் அதாவது 6-ம் நூற்றாண்டில் இந்தியாவில் பல்வேறு நிலம் சார்ந்த அரசுகள் தோன்றின.

2. அரசியல் ரீதியில் இது ஒரு முக்கியமான திருப்புமனை ஆகும். நிலம் சார்ந்த அரசுகள் உருவானது முதன் முதலாக கி. மு. 6-ம் நூற்றாண்டில் ஆகும்.

3. புத்த சமயத்தைச் சார்ந்த அங்குதார நிக்காயா நூல், ஜாதக இலக்கியங்கள் மற்றும் சமண நூலாகிய பகவதி சூத்திரம் ஆகியவை அடிப்டையில் ரைஸ் டேவிஸ் என்ற ஆங்கிலேயே வரலாற்று ஆசிரியர் கி.மு. 6-ம் நூற்றாண்டில் 16 நிலம் சார்ந்த நாடுகள் இருந்ததாக கூறுகிறார். இந்த நிலம் சார்நத நாடுகள்  சொலச மகாஜனபதாக்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

4. இந்நிலப் பரப்புகள் காபூல் பள்ளத்தாக்கில் இருந்து கோதாவரி நதிக்கரை வரை பரவியிருந்தது. இவை

5. அங்கா: இது பிம்பிசாரர் காலத்தில் மகதத்துடன் இணைக்கப்பட்டது. இது தற்போதுள்ள கிழக்கு பீகார் பகுதியாகும்.

6. முகதா:  பிருகரதா என்பவர் இதனை தோற்றுவித்தவர் ஆவார். நான்கு நாடுகள் சேர்ந்ததால் இது முதன்மை பெற்றது. இது தற்போதுள்ள பாட்னா, கயா பகுதிகள் அடங்கிய தெற்கு பீகார் பகுதியாகும்.

7. வாஜி : லிச்சாவி, வித்தேகர்கள் போன்ற 8 கலத்தவர் இதனை நிறுவினர்.

8. மல்லா : இது ஒரு பிரிவாக பிரிக்கப்பட்டது

9. காசி:  வருண் மற்றும் அசி என்ற இருநதிகள் ஓடுகிறது. பல போர்களுக்கு பிறகு கோசலாத்துட ன் இணைந்தது.

10. கோசலா :  பல போர்கள் மற்றும் திருமண உறவின் அடிப்படையில் மகதத்துடன் இணைந்தது. இது . பி. மாநிலத்தின் அவத் பகுதியாகும்.

11. வச்சா:- இது தற்போது உள்ள அலகாபாத் பகுதியாகும்.

12. செடி: பண்டல்கண்ட பகுதியே செடி நாடாகும்.

13. குருடெல்லி, மீரட், தானேஸ்வரம் பகுதியே குரு நாடாகும். இதன் தலைநகரம் அஸ்தினாபூர் (இந்திர பிரஸ்தா) ஆகும்.

14. பாஞ்சாலா :  பரோலி, பதாவூதன், ரோகில்கண்ட் பகுதியே பாஞ்சாலா ஆகும்.

15. சூரசேனா:  மதுராபுரி பகுதியே சூரசேனா நாடாகும்.

16. மத்சயா:  ஜெய்பூரை சுற்றி உள்ள பகுதி

17. அவந்தி : சாம்பல் மற்றும் மாளவ பகுதியாகும்.

18. மஸ்வமா :  இது கோதாவரி சமவெளியின் மேற்குபுரம் இதன் தலைநகரம் Patlia

19. காந்தாரம்:  இது பேஷாவர் மற்றும் இராவல்பிண்டி பகுதியாகும்.

20. காம்போஜம்:  இது காஷ்மீர் பகுதியாகும். இந்த 16 மகாஜனபதாக்கள் மற்றும் குடியரசு நாடுகள் பிற்காலத்தில் 4 பெரிய அரசாக உருவாகியது. அவை 1. அவந்தி 2. கோசலம் 3. வத்சயா 4. மகதம்

குடியரசுகள்

1. கங்கை கரையில் பேரரசுகள் தோன்றின. ஆனால் அதே நேரத்தில் பஞ்சாப், பங்கைக்கரையின் வெளிப்புற இடங்களிலும் மற்றும் இமயமலை அடிவாரங்களிலும் ஜனா என்று சொல்லப்படும் குடியரசுகள் தோன்றின.

2. புத்த மற்றும் சமண இலக்கியங்களில் காணப்படும் முக்கிய குடியரசுகள்

நாடு மற்றும் பழங்குடிகள்

3. கபிலவஸ்து - சாக்கியர்கள்

4. வைசாலி  - லிச்சாவிகள்

5. மல்லாக்கள்  - பாவா

6. குசி நகரம்  - மல்லாக்கள்

7. மிதிலை  - விதேகர்கள்

8. தைசாலி  - ஞாத்திரிகர்கள்

9. அல்லகப்பா  - புல்லியர்கள்

10. கேசபுட்டா  - கலம்பர்கள்

11. பிப்பாலி வனம்-  மோரிகள்

12. சம்சுமாரா  - பர்கர்கள்

13. அர்த்த சாஸ்திரத்தில் மேலும் பல குடியரசுகளின் பெயர்கள் காணப்பட்டது.

14. இக்குடியரசுகள் காலப்போக்கில் வலிமை பொருந்திய அண்டை நாடுகளுடன் போர்கள் மூலம் இணைக்கப்பெற்றது.

15. மேற்கூறிய நாடுகளில் மகதம் வலிமைபெற்ற நாடாக விளங்கியது.

16. அதனை ஆண்ட ஆர்யங்க மரபு மன்னர்கள் பிம்பிசாரர் மற்றும் அஜாதசத்ரு காலங்களில் மகதம் வலிமை மிக்க நாடாக விளங்கியது

17. கில்டுகள்

அரசாங்கத்தைப் போலவே விலைவாசியையும் பொருட்களின் தரத்தையும் கட்டுப்படுத்துவதற்காக இருந்த அமைப்பே வியாபரிகளின் சங்கம் எனப்படும் கில்டு ஆகும்.