Type Here to Get Search Results !

வரலாறு | Part - 2 | 86 Questions

Indian History Part - 2

சிந்து சமவெளி நாகரிகம் (Indus Valley Civilization)

1. ஹரப்பாவின் சிதைவடைந்த பகுதிகளை சார்லஸ் மேசன் என்பவர் தம்முடைய Narrative of Various Journeys in Balochistan, Afghanistan and Punjab என்ற நூலில் குறிப்புகளில் 1838ல் தெரிவித்துள்ளார். அக்காலத்தில் அதன் முக்கியத்துவம் உணரப்படவில்லை.

2. இந்நாகரிகத்தின் பெரும் பகுதி காக்ரா நதிக்கரையின் மேல் அமைந்துள்ளதால் இதனை Indus Ghaggar – Hakra Civilization என்றும் கூறுவர். சரஸ்வதி நதியின் அடிப்படையில் சிந்து-சரஸ்வதி நாகரிகம் என்றும் கூறுவர்.

3. சர் ஜான்மார்சல் கூற்றுப்படி கி.மு. 3250 முதல் 2750 வரை

4. 1945ஆம் ஆண்டு அகழ்வராச்சி நடத்திய மார்ட்டிமர் வீலர் கி. மு. 2500 ஆண்டிற்கும் கி.மு. 1500 ஆண்டிற்கும் இடைப்பட்ட காலம் சிந்து சமவெளி நாகரிகம் காலம் என குறிப்பிட்டுள்ளார்.

5. அகர்வாலின் கூற்றுப்படி கி.மு. 2300 முதல் 1750 வரை

6. 1784ல் Asiatic Society of India என்ற சங்கத்தை சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் நிறுவினார். இச்சங்கம் பண்டைய கல்வெட்டுக்களை சேகரித்தது.

7. இவற்றில் உள்ள எழுத்துக்களை 1837ல் ஜேம்ஸ் பிரின்செப் என்பவர் படிக்கும் முறையை கண்டுபிடித்தார்.

8. கி.பி. 1826ம் ஆண்டு ஹரப்பாவுக்குச் சென்ற சார்லஸ் மேசன் என்பவர் அங்கு குடியிருப்புகளின் சிதைவுகளைக் கண்டார்.

9. 1872ம் ஆண்டு சர் அலெக்சாண்டர் கன்னிஸ்ஹாம் ஹரப்பாவின் சில பொருட்களை சேகரித்தார்.

10. 1862ல் தொல்லியல் துறை நிறுவப்பட்டது. இதன் முதல் இயக்குநராக அலெக்சாண்டார் கன்னிங்ஹாம் நியமிக்கப்பட்டார். இவர் இந்திய தொல்பொருள் இலாக்காவின் தந்தை எனப்பட்டார்.

11. Alexander Cunningham, the first Director – General of the Archaeological Survey of India (ASI), (ASI - தற்போது பண்பாட்டுத்துறையின் கீழ் உள்ளது)

12. கன்னிங்ஹாம் புத்த மதம் தொடர்புடைய காஞ்சி, சாரநாத், புத்தகயா, தட்சசலம் போன்ற இடங்களில் உள்ள அரிய வரலாற்று சின்னங்களை கண்டுபிடித்தார்.

13. பின் தொல்பொருள் ஆராய்ச்சி துறை நிறுவப்பட்டது. சார் ஜான் மார்ஷல் என்பவர் அதன் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவரையும் தொல்லியியல் துறையின் தந்தை என்று கூறுவர்.

14. தொல்பொருள் ஆய்வின் அடிப்படையில் இந்திய வரலாற்றை எழுதியவர்: வி.. ஸ்மித் ஆவார்.

15. சர் ஜான் மார்சல் என்பவர் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி தலைவராக இருந்த போது அவர் 1922ம் ஆண்டு ஆர்.டி.பானர்ஜி என்பவருடன் சேர்ந்து ஒரு புதைந்து கிடந்த புத்த மடாலய அகழ் ஆராய்ச்சி பணியில் இருந்த போது சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடித்தார்.

16. அதன் பிறகு ஜே. எஜ். மேக்கே, ஜி. எஃப். டேல்ஸ், எம். எஸ். வாட்ஸ் ஆகியோர் மொகஞ்சதாரோவில் அகழிவராய்ச்சியை மேற்கொண்டனர்.

17. சிலர் இதனை Garden of Sind என்றும் Nakhlistan என்றும் கூறுவர். சிந்து நதி இதனை 9 முறை அழித்ததாகவும் 9 முறை இந்த நகரம் கட்டப்பட்டது என்றும் கூறுவர்

18. இவர்கள் சுமேரியா, பாபிலோனியா, எகிப்து போன்ற இடங்களில் வாணிகம் செய்தனர்

19. சுமேரியா நாகரிகத்திற்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் ஒற்றுமை இருந்ததால் இதனை இந்தோ-சுமேரிய நாகரிகம் என்றும் பின் இது தனிநாகரிகம் என்பதால் சிந்து சமவெளி நாகரிகம் என்றும் அழைக்கப்பட்டது.

20. சிந்து சமவெளி மக்கள் சிவனை வணங்கினர். ஹரப்பா நகரங்களில் இலிங்க உருவங்கள் கிடைத்துள்ளன. தாய்த் தெய்வம். விலங்குகள் சூழப்பட்ட மூன்று தலைக்கொண்ட யோக நிலையில் உள்ள பசுபதி எனப்படும் கடவுளின் முத்திரை கிடைக்கப்பெற்றது.

Nineteenth & 20th century

1. 1875 Report of Alexander Cunningham on Harappan seal

2. 1921 M. S. Vats begins excavations at Harappa

3. 1925 Excavations begin at Mohenjodaro

4. 1946 R. E. M. Wheeler excavates at Harappa

5. 1955 S. R. Rao begins excavations at Lothal

6. 1960 B. B. Lal and B. K. Thapar begin excavations at Kalibangan

7. 1974 M. R. Mughal begins explorations in Bahawalpur

8. 1980 A team of German and Italian archaeologists begins surface

9. explorations at Mohenjodaro

10. 1986 American team begisn excavations at Harappa

11. 1990 R. S. Bisht begins excavations at Dholavira

சிந்து சமவெளி நாகரிகத்தின் முக்கிய இடங்கள்

1. மொகஞ்சதாரோ

2. ஹரப்பா

3. லோதால்

4. களிபங்கன்

5. பாண்குவராஹி

6. அம்ரி

7. ரூப்பர்

8. சாண்குதாரோ

மொஹஞ்சதாரோ (125 ஹெக்டேர் பரப்பு)

1. 1922-ல் ஆர். டி. பானர்ஜி அகழிவராய்ச்சி செய்தார்.

2. சிந்து நதிக்கரை மேல் அமைந்துள்ளது.

3. தற்போது பாகிஸ்தானில் உள்ள சிந்து பகுதியில் லார்கானா மாவட்டத்தில் உள்ளது

4. இரும்பின் பயன் தெரியவில்லை.

5. நகரங்கள் நன்கு திட்டமிட்டு கட்டப்பட்டிருந்தன.

6. தெருக்கள் நேராகவும் அகலமாகவும், கிழக்கு மேற்காகவும், வடக்கு தெற்காகவும் அமைந்துள்ளது.

7. மொஹஞ்சதாரோவில் பெரிய குளியல் குளம் ஒன்று உள்ளது. இது 11.8 மீ நீளமும், 7.01 மீ அகலமும் 2.43 மீ ஆழமும் கொண்டது. ஆடைமாற்றும் அறை காணப்பட்டது. இக்குளத்தில் நீர் உள்வர செங்கல்லால் குழாய்கள் உள்ளன. நீருக்குள் செல்ல அகலமான படிக்கட்டுகள் இருந்தன. சமூகக் கூடமும் மாடிக்கட்டிடமும் காணப்பட்டது.

8. தானியக்களஞ்சியமும், நடனமாது சிலையும் கண்டெடுக்கப்பட்டது.

9. கோதுமை, பார்லி முக்கிய உணவாகும்.

10. மக்கள் ஓய்வு நேரத்தில் சதுரங்கம் விளையாடினர்.

11. இசை, நடனம், கோழிச் சண்டை, காளை சண்டை போன்றவை நடைபெற்றது.

12. மக்கள் சித்திர எழுத்துக்களை பயன்படுத்தினர். இவ்வெழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களே என இராசு பாதிரியார் கூறுகிறார்.

13. அவர்கள் வலமிருந்து இடமாகவும் இரண்டாவது வரியை இடமிருந்து வலமாகம் எழுதினார்.

14. சிந்து சமவெளி எழுத்துக்களுக்கு Pictograph  என்று பெயர். இது எகிப்து ஹைரோகுளிபிக் மற்றும் சமேரியர் க்யுனிபார்ம் எழுத்துகள் கலந்தது. ஒற்றைக் கொம்பு உடைய எழுத்து உடைய முத்திரை காணப்பட்டது.

15. இந்நாகரிகத்தின் அமைப்பு இங்கிலாந்தின் லாங்காஷயர், மான்செஸ்டர் நகரைத்தை

16. போன்று உள்ளதாக சர்ஜான் மார்சல் கூறுகிறார்.

17. மொகஞ்சதாரோ என்ற சொல்லுக்கு Mount of Killed, Mount of Dead, Mount of Confluence என பல பொருள்பட பொருள் உண்டு

ஹரப்பா

1. 1921 – 23 யில் தயாராம் சகானி எனப்வரால் அகழ்வராய்ச்சி செய்யப்பட்டது.

2. ஹரப்பா நாகரிகம் நிலவிய காலம் கி.மு. 3250 முதல் கி.மு. 2750 வரை ஆகும். இந் நாகரிகம் செம்புக் கற்காலம் என்று அழைக்கப்பட்ட புதிய உலோக காலத்தைச் சார்ந்தது.

3. தற்போது பாகிஸ்தானில் உள்ளது.

4. இந்நகரம் மொஹஞ்சதாரோவை விடசற்று பெரியது.

5. சிந்து மாவட்டத்தில் இலார்க்கனா என்ற மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஹரப்பாமொகஞ்சதாரோ இடைத்தூரம் 640 கி. மீ. ஆகும்.

6. ஹரப்பா ராவி நதிக்கரையின் மேல் மாண்டகோமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

7. இதில் மிகப்பெரிய தானியக்களஞ்சியங்கள் 6 உள்ளது.

8. இது 47.71 மீ நீளமும் 15.23மீ அகலமும் கொண்டது.

9. இம்மக்கள் எருதுகளை வணங்கினார்.

10. பருத்தி பயிரிட்டனர்.

11. 16 மற்றும் அதன் மடங்குகளை பயன்படுத்தினர்

12. குதிரை பற்றி இவர்களுக்கு தெரியாது.

13. ஹரப்பா பண்பாட்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு முத்திரைகள் ஆகும். முத்தரைகளில் காளையின் உருவங்களும் பிறவிலங்குகளின் உருவங்களும் காணப்படுகிறது. வியாபாரத்திற்கு இவர்கள் முத்திரைகளை பயன்படுத்தினர்.

காளிபங்கன்

1. இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது.

2. காளிபங்கன் சரஸ்வதி நதிக்கரையின் (காக்கரா) மீது இது அமைந்துள்ளது

3. உழவு தொழில் மேற்கொள்ளப்பட்டது

லோதல்

1. எஸ்.ஆர்.ராவ் என்பவரால் 1957யில் கண்டுபிடிக்கப்பட்டது.

2. குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் மாநிலத்தில் உள்ளது.

3. சிந்து சமவெளி நாகரித்தின் வாணிக துறைமுக நகரம் லோதால்.

4. இது பாக்குவார் நதிக்கரையின் மீது அமைந்துள்ளது.

5. இது வெளி நாட்டுடன் தொடர்புடையது.

6. இது மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் துறைமுகம்.

7. இந்நாகரிகம் ஆரியர் வருகை அல்லது ஆற்று வெள்ளத்தால் அழிந்திருக்கக்கூடும்.

தோலவிரா:

1. மிகப்பெரிய அகழ்விடம்.

2. குஜராத்தில் உள்ளது.

3. நீர்த்தேக்கம் உள்ளது

ரூப்பர்

1. இது பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது

2. ஹரப்பா அல்லாத அதற்கு முந்தைய காலத்தைச் சார்ந்தது.

3. 1953ல் ஒய்.டி. சர்மா என்பவரால் அகழ்வராய்ச்சி செய்யப்பட்டது.

பான்வலி – (ஹரியானாவில்)

1. ஹரப்பா அல்லது அதற்கு முந்தைய காலத்தைச் சார்ந்தது.

2. ஆலம்கீர்பூர்

3. மேற்கு உத்திரப்பிரதேசத்தில் உள்ளது