Type Here to Get Search Results !

வரலாறு | Part - 1 | 48 Questions

Indian History Part - 1

கற்காலம்

1. மிக பழைய கற்காலம் 250000–100000 கி.மு.

2. நடு பழைய கற்காலம் 100000–40000 கி.மு.

3. புதிய பழைய கற்காலம் 40000-10000 கி.மு.

4. கடைசிக் கற்காலம் 10000-4000 கி.மு.

5. புதிய கற்காலம் 5000-25000 கி.மு.

பழைய கற்காலம் (Palaeolithic)

1. பழைய கற்காலத்திற் இறுதிகாலம் சுமார் கி.மு. 35000 முதல் கி.மு. 10000.

2. மக்கள் நீக்ரிட்டோ இனத்தைச் சார்ந்தவர்கள்.

3. நாடோடிகளாக வாழ்ந்தனர்.

4. குவார்ட் சைட் என்ற கற்களைப் பயன்படுத்தினர்.

5. வேளாண்மை, கால்நடைகள் பயன்கள் தெரியாது.

6. மரப்பட்டைகள், தழைகள் ஆடையாக கொண்டனர்.

7. பச்சை காய்கறிகள், விலங்குகளின் இறைச்சிகளை உண்டனர்.

8. நெருப்பின் பயன் தெரியாது.

9. முக்கிய தொழில் வேட்டையாடுதல் ஆகும்.

10. குகைகளில் ஓவியம் தீட்டினர்.

11. மட்பாண்டம் செய்யத் தெரியாது.

12. இறந்தவர்களை புதைத்தனர்.

13. 1863-ஆம் ஆண்டு சென்னைக்கு அருகே பல்லாவரத்தில் இராபார்ட் புரூஸ்ஃபோர்ட் கைக்கோடரி கண்டுபிடித்தார்.

14. வட இந்தியாவில் காஷ்மீர், பஞ்சாப், மத்தியப்பிரதேசனம், ஒரிசா, வங்காளம், பீகார், தென்இந்தியாவில் பீஜப்பூர், பெல்காம், தார்வார், ஹைதராபாத், சென்னைக்கு அருகே செங்குன்றம், அத்திரிபாக்கம் ஆகியவை பழைய கற்காலம் நாகரிக மையமாகும்.

புதிய கற்காலம் (Neolithic)

1. மக்கள் நிரந்தரமாக வாழத் தொடங்கினார்.

2. பளபளப்பான தேவைக்கேற்ற வடிவங்களில் கற்களை உருவாக்கினர்.

3. அறிவியல் வளர்ச்சியின் முதல்படியான சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது.

4. வேளாண்மை செய்தனர்.

5. முதன் முதலில் வளர்த்த பிராணி ஆடு ஆகும்.

6. பசு, எருமை, ஆடு நாய் விலங்குகளை பயன்படுத்தினர்.

7. நெருப்பை உண்டாக்கினர்.

8. மற்பாண்டங்கள் செய்தனர்.

9. பருத்தி, கம்பளி நூல் நூற்றனர்.

10. பழங்கள், காய், மீன், பால் கறிகள் உண்டனர்.

11. கடற்பயணம் மேற்கொண்டனர்.

12. வேட்டையாடுதல், நடனமாடுதல், போன்ற சித்திரங்களை தீட்டினர்.

13. இறந்தவர்களை மற்பாண்டங்களில் இட்டு புதைத்தனர்.

14. டால்மென்ஸ் எனப்படும் கல்லறையின் தூண்களை உருவாக்கினர்.

15. தென்னிந்தியாவில் நாகார்ஜூனகொண்டா, மாஸ்கி, பிரம்மகிரி, காஷ்மீர் பள்ளத்தாக்கு, தக்காணபீடபூமி, சேலம், கடப்பா, பெல்லாரி, அனந்தபூர், தெலுங்கானா, குஜராத், கத்தியவார் ஆகியவை புதிய கற்கால இடங்களாகும்.

உலோகக்காலம்

1. செம்பு பயன்படுத்தப்பட்ட காலம் செம்புக் காலம்.

2. மனிதன் பயன்படுத்திய முதல் உலோகம் செம்பு ஆகும்.

3. கி.மு. 800 முதல் 150 இடையே உள்ள காலம் இரும்பு காலம்.

4. இரும்புகாலத்தில் கலப்பை, கத்தி போன்றவை செய்யப்பட்டது.

5. உலோகக்கால மக்கள் செம்பு, இரும்பு, வெள்ளி, தங்கம் ஆகிய உலோகங்களை பயன்படுத்தினர்.

6. மக்கள் பளிங்குகண்ணாடி ஆகியவற்றை பயன்படுத்தினர்.

7. உலோக காலம் மூன்றாக பிரிக்கப்பட்டது.

a. செம்புக்காலம்

b. வெண்கலக்காலம்

c. இரும்புக்காலம்

8. ஆதிச்ச நல்லூர், புதுக்கோட்டை, நீலகிரி ஆகிய இடங்களில் அதிகமான உலோகக் கருவிகள் கிடைத்துள்ளது.

9. இறந்தவர்களின் நினைவாக நினைவுச் சின்னம் எழுப்பினர்.

10. இறந்தவர்களை முதுமக்கள் தாழி எனப்படும் மற்பாண்டங்களில் இட்டு புதைத்தனர்.

11. தெய்வ வழிபாட்டு முறை காணப்பட்டது.

12. ஆதிச்சநல்லூரில் இதற்கான சான்றுகள் கிடைத்துள்ளது.

திராவிட நாகரிகம்

1. காலத்தால் பழைமையானது திராவிட நாகரிகம்.

2. குமரில பட்டர் எழுதிய Tantravrttika என்ற நூலில் இருந்து திராவிடம் என்ற சொல்லை கார்டுவெல் தாம் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் முதன் முதலில ஆங்கிலத்தில் கையாண்டுள்ளார்.