Type Here to Get Search Results !

வரலாறு | Part - 12 | 137 Questions

History in Tamil | Part - 12

டில்லி சுல்தான்கள் வரலாறு

அடிமை வம்சம் 1206 - 1290

குத்புதீன் பெக் 24.6.1206 முதல் 1210 வரை

1. 1205ல் கோரி முகமது மரணமான பின் சுதந்திரமான முதல் முஸ்லீம் டில்லி சுல்தான் ஆக இருந்தார்.

2. இவரின் வழித் தோன்றலே அடிமை வம்சம் (அல்லது) இல்பாரி துருக்கி வம்சம் (அல்லது) மாம்மூத் வம்சம் எனப்படுகிறது

3. இவரால் தோற்றுவிக்கப்பட்டது அடிமை வம்சம்

4. நிசாசர் காசி என்பவரால் விலைக்கு வாங்கப்பட்டடு பின் கோரி முகமதுவிற்கு விற்கப்பட்ட அடிமை

5. 1192ல் தரெயின் போரில் நன்கு போரிட்டதால் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். பின் இந்துஸ்தான் வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார்.

இவரின் படையெடுப்புகள்:

6. 1192ல் பரான், மீரட் கைப்பற்றுதல்

7. 1193ல் தில்லி கைப்பற்றுதல்

8. 1194ல் அஜ்மீர் கைப்பற்றுதல்

9. 1197ல் சந்த்வார், கனோஜ் கைப்பற்றுதல்

10. 1210ல் போலோ (சவ்கன்) விளையாடும் போது குதிரை மேல் இருந்து வீழ்ந்து இறந்தார்.

11. ஹாசன நிகாமி, பக்ரே முஜிர் கலைஞர்களை ஆதரித்தார்.

12. அஜ்மீரில் இந்து கோவில்களை இடித்து குவ்வதும் இஸ்லாம் என்ற பள்ளியை கட்டினார்.

13. லாக் பக்ஷி என்று அழைக்கப்பட்டார்

14. குதுப்மினரை 5 அடுக்குகள் வரை (29.5 மீட்டர்) கட்டி முடித்தார்.

இல்தூத்மிஷ் (சம்சுதீன் அல்ட்டமிஷ்) 1211-1236

15. அடிமைகளின் கவர்னர்

16. பதோதனின் கவர்னர்

17. குத்புதினின் மருமகன்

18. இனம்: இல்பாரி (துருக்கி)

19. குத்புதீன் இறந்தவுடன் அவரது மகன் அராம் என்பவரிடமிருந்து 1211ல் போரிட்டு ஆட்சியை கைப்பற்றினார்

பதவி ஏற்கும்போது அரசியல் நிலைமை

20. இந்துஸ்தான் பிளவுபட்டு இருந்தது

21. வங்காளம் - அலிமர் கில்ஜி

22. தில்லி - இல்தூமிஷ்

23. முல்தான் - குபாச்சா

24. அஜ்மீர் - இராசபுத்திரர்கள் கைகளில் இருந்தது

25. 1215ல் தரைன் போரில் பெற்றி பெற்று கஜினி இணைப்பு. இல்தீஸ் கொல்லப்பட்டார்.

26. 1217ல் லாகூர் கைப்பற்றுதல்

27. 1211ல் செங்கிஸ்கான் இந்தியா மீது படையெடுப்பு.

28. 1223ல் இராசபுத்திரர்களை வென்று ராந்தம்பூர் குவாலியர், அஜ்மீர் பகுதிகளை கைப்பற்றுதல்

29. 1228ல் லாகூர், முல்தான் சிந்து கைப்பற்றுதல்

30. 1229ல் வங்கம் கைப்பற்றுதல்

31. 1234-35ல் மாளவப்படையெடுப்பு

32. இக்தா என்ற ஆட்சிமுறை உருவாக்கினார். இதன்படி சம்பளத்திற்கு பதிலாக நிலம் தரப்பட்டது

33. Tanka வெள்ளி நாணயமும்  Jitals என்ற செம்பு நாணயமும் வெளியிட்டார்.

34. குவாஜா குத்புதீன் பக்தியார் நினைவாக குதுப்மினாரை மேலும் 5 அடுக்குகள் வரை கி.பி. 1232ல் கட்டினார்.

35. இந்தியாவில் முஸ்லீம் ஆட்சி உருவாக காரணமாக இருந்தார்

36. இந்தியாவின் தலைநகர் தில்லி என்பதை அறிவித்தார்

37. 1236ல் இறந்தார்

செங்கிஸ்கான் படையெடுப்பு:

38. 1221ல் (முதல் மங்கோலியர்) செங்கிஸ்கான் தனது அரசியல் எதிரியான ஜலாலுதீன் மங்பரணி என்பவரை தேடி மேற்கு எல்லை மாகாணங்களுக்கு வந்ததர். பிறகு இந்துகுஷ் மலைவழியாக 1222ல் திரும்ப சென்றுவிட்டார்.

ரசியா 1236 - 1240

39. டில்லியின் முதல் மற்றும் ஒரே பெண் பேரரசி

40. இல்தூமிஷின் மகள்

41. ரசியாவை முதன் முதலில் எதிர்த்தவர்  இக்தியாருதீன் அல்ருனியா. பின் திருமணம் செய்து கொண்டார்

42. ரசியாவின் சகோதரன் முயிசுதீன் பகராம். இவரால் ரசியா 1240ல் தோற்கடிக்கப்பட்டு பின் கொலை செய்யப்பட்டார்.

43. ரசியா காலத்து வரலாற்று ஆசிரியர்: மின்ஹாஜ்-உஸ்-சிராஜ்

பகராம் ஷா 1240-42

44. 1241ல் மங்கோலியர் பஞ்சாப்பை கைப்பற்றினார்

45. மசூத் ஷா 1242 – 1246

நசுரூதீன் முகமது 1246-1266

46. இவர் இல்தூமிஷ் என்பவரின் கடைசி மகன்

47. மின்ஹாஜ்-உஸ்-சிராஜ் என்பவர் எழுதிய புத்தகம் தபாவொட் --நசிரி ஆகும்

48. இவரின் அமைச்சர் பால்பன் உல்லாகான்.

49. நசுருதீன் இறந்த பிறகு பால்பன் ஆட்சியை பிடித்தார்.

கியாஸ் உதீன் பால்பன் 1266 - 1286

50. இரும்பு மனிதர்

51. அடிமை வம்சத்தின் சிறந்த மன்னன்

52. துருக்கி இல்பாரி இனத்தைச் சார்ந்தவர்

53. நாற்பதின்மரில் ஒருவர்

54. பிற்காலத்தில் நாற்பதின்மர் குழுவை கலைத்தார்

55. அப்ராசியால் வழித் தோன்றல் எனக் கூறிக்கொண்டார்

56. பாரசீக கவிஞர் அமீத் குஸ்ருக்கு ஆதரவு

57. சிஜ்தா எனும் காலை முத்தமிடும முறையை மேற்கொண்டார் Naib-i-Khudai என கடவுளின் உதவியாளர் எனக் கூறிக்கொண்டார்

58. திவானி ஆர்ஸ் எனப்படும் தனி இராணுவ இலக்காவை உருவாக்கினார்

சைகுபாத் 1286 - 1290

59. அடிமை வம்சத்தின் கடைசி மன்னன்

60. 1288-ல் மார்க்கோ போலோ இந்தியாவிற்கு வந்தார்.

கில்ஜி வம்சம் 1290-1320

61. ஜவாலுதீன் பிரோஸ் கில்ஜி (1290-1296) கில்ஜி வம்சத்தை உருவாக்கினார். இவர் அலவூதின் கில்ஜியை (மருமகன்) ஆதரித்தார். பின் அவரால் கொல்லப்பட்டார்.

62. தக்காணத்தின் மீது ஆதிக்கம் செலுத்திய முதல் சுல்தான் அரசர்

அலாவுதீன் கில்ஜி 1296 - 1316

63. 1299ல் குஜராத் போரின் போது மாலக்காபூர் என்ற அடிமையை வாங்கினார். பின் அவரை படைத்தளபதியாக நியமித்தார்.

64. 1303-ல் மேவாரைக் கைப்பற்றினார். ராணி பதம்னி தீக்குளித்தார்.

65. முhலிக்காபூர் வாரங்கால் மீது 1309ல் படையெடுத்தார்.

66. பாண்டிய நாட்டை 1311ல் வென்றார்

67. மதுரை மீது படையெடுத்து மதுரையை வென்றார்

68. இராமேஸ்வரம் ஆலயம் சென்று கொள்ளையடித்தார்.

69. குதிரைகளுக்கு சூடு போடும் Dagh எனப்படும் முறை உருவாக்கினார்.

70. எடை குறைவுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட்டது.

71. வணிகர்கள் ஷாநா - - மண்டி என்ற அலுவலரிடம் பெயர் பதிவு செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர்.

72. விலை கட்டுப்பாட்டிற்காக திவானி ரியாசத் என்ற அலுவலர் நியமிக்கப்பட்டார்.

73. அமீர் குஸ்ரு என்ற பாரசீக கவிஞர் அவரது அரசவையில் இருந்தார்.

74. சிதறுண்டு கிடந்த இராசபுத்திர அரசுகள் மால்வா, தியோகிர், தேவகிரி, ரத்தம்பூர் ஆகியவற்றை வென்றார்

75. விவசாயிகளிடம் நேரடியாக தொடர்பு கொண்டு அவர்கள் கட்டும் வரியினை தெரிந்து கொண்டார்.

76. அங்காடி சீர்திருத்தம் செய்யப்பட்டது. இதற்காக இரகசிய காவல்படை உருவாக்கப்பட்டது

77. தானியங்கள், துணிகள், குதிரைகள் போன்றவற்றிற்கு தனித்தனி சந்தை உருவாக்கியவர்.

78. இனாம், வாக்ப் போன்ற நிலத்தானங்கள் முறையை நிறுத்தினார்

79. நிலவரிகளில் ஏற்படும் நிலுவைகளை வசூலிக்க திவானி முஷ்டாக்ராஜ் என்பவர் நியமிக்கப்பட்டார்.

குத்புதீன் முராரக்: 1316 - 1320

a. தன்னை கலியா என்று அழைத்துக் கொண்டார்

80. நசுருதீன் குஸ்ரு ஷா 1320

a. கில்ஜி வம்சத்தின் கடைசி மன்னன்

துக்ளக் வம்சம் 1320 – 1414

கியாஸ் உதீன் துக்ளக் 1320 - 1325

81. இயற்பெயர் - காஜிமாலிக்

82. துக்ளக் வம்சத்தை துவக்கியவர்

83. துக்ளாதாபாத் நகரை கட்டினார்

முகமது பின் துக்ளக் 1325 - 1351

84. 1327ல் தலைநகர் டெல்லியில் இருந்து தேவகிரிக்கு மாற்றம் செய்யப்பட்டது

85. புது தலைநகர் மத்தியில் இருந்ததாலும் போருக்கு ஏற்ற பகுதியாக இருந்ததாலும் தேவகிரிக்கு தலைநகர் மாற்றப்பட்டது

86. பின் மீண்டும் தலைநகர் டில்லிக்கு 1330ல் மாற்றப்பட்டது

87. தேவகிரி தௌலதாபாக் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது

88. 1330ல் செப்பு நாணயங்களை வெளியிட்டார். கள்ள நாணயம் தயாரிக்கப்பட்டது. எனவே செப்பு நாணயங்களை மீண்டும் பெற்றுக் கொண்டார்.

89. திவானி கோசி என புதிய வேளாண்மை துறையை உருவாக்கினார்.

90. இவர் வெளியிட்ட நாணயங்களில் கலிபாவின் பெயரை நீக்கினார்.

91. 1333-ல் இபான் பதுதா இந்தியாவிற்கு வந்தார்.

92. 1336ல் விஜயநகர பேரரசு துவக்கப்பட்டது.

93. 1351ல் சிந்து மீது படையெடுத்து கலகக்காரர்களை வென்றார்

94. 1351ல் இறந்தார்.

பெரோஸ் ஷா துக்ளக் 1351 - 1388

95. பொதுப்பணித்துறை உருவாக்கப்பட்டு யமுனை நதிக் கால்வாய், சட்லெஜ் நதிக்கால்வாய்கள் வெட்டப்பட்டன

96. Sasuganiநாணயங்கள் வெளியிடப் பட்டது

97. முகமது பின் துக்ளக் நினைவாக (Juna Khan) ஜான்பூரை நிர்ணயித்தார்

98. இவர் வேலைவாய்ப்பு அலுவலகத்தை ஏற்படுத்தினார்.

99. பெரோஸ் ஷா துக்ளக்கின் வரலாற்றை எழுதியவர். ஷாம்சி-சிராஜ்-அபிப்

100. குதுப்மினாரை மேலும் உயரமாக்கி கட்டினார். மொத்த உயரம் 71.24 மீட்டர்

101. இரண்டாம் கியாசுதீன் 1388-89

102. அபுபக்கர் - 1389 – 1390

103. முகமது பின் பிரோஸ் 1390 – 1394

104. நசுருதீன் முகமது துக்ளக் 1394 - 1414

சையது வம்சம் 1414 - 1451

105. துக்ளக் அரசின் கடைசி மன்னர் நசுருதீன் மாமூது 1413ல் இறந்தபின் தௌத்கான் லோடி அரியணையில் அமர்ந்தார்.

106. லோடி 1414ல் கிசர்கானிடம் அடி பணிந்தார்.

107. சையது வம்சத்தை கிசர்கான் தோற்றுவித்தார். 1421-ல் இறந்தார்.

முபராக் 1421 - 1434

108. கிசர்கானின் மகன்

109. கோக்கர்களை அடக்கினார்

110. ஷா என்ற பட்டப்பெயரை இட்டுக்கொண்டார். சர்வர் உல்முக் என்பவரின் தூண்டுதலால் கொலை செய்யப்பட்டார்.

முகமது ஷா 1434 - 1445

111. முபராக்கின் மருமகன்

அலாவுதீன் ஷா ஆலம்: 1451

112. இவர் சையது வம்சத்தின் கடைசி மன்னர்

113. இவரிடமிருந்து பகலூல் லோடி ஆட்சியை கைப்பற்றினார்

லோடி வம்சம் 1451 – 1526

பகலூல் லோடி: 1451 - 1489

114. இவர் ஆப்கான் பிரிவு ஆவார்

115. லோடி வம்சத்தை துவக்கியவர்

சிக்கந்தர் லோடி: 1489-1517

116. இவரின் இயற்பெயர் : நிஜாம் கான்

117. 1494ல் பீகார் கைப்பற்றினார்

118. 1504ல் ஆக்ரா உருவாக்கினார்

119. 1506ல் தமது தலைநகரை டில்லியில் இருந்து ஆக்ராவிற்கு மாற்றினார்

இப்ராகிம் லோடி: 1517-1526

120. சிக்கிந்தர் லோடியின் மூத்தமகன்

121. 21.11.1517ல் பதவியேற்றார்

122. ஆட்சி இரண்டாக பிரிக்கப்பட்டு கான்பூர் சம்மாசனத்தில் இளைய  மகன் ஜாலால்கான், தில்லி மன்னராக இப்ராகிம் லோடியும் பதவியேற்றனர்.

123. பின் ஜலால் கான் கொலை செய்யப்பட்டார்.

சுல்தான்களின் ஆட்சிமுறை

124. மொத்தம் 6 அமைச்சர்கள்

125. வசீர் - முக்கிய பொறுப்பு: நிதி சிவில் நிருவாகத் துறையின் தலைவர்

126. திவான் - - ரிஷாலத் அயலுறவு அமைச்சர்

127. திவான் - - இன்ஷாகடிதப் போக்குவரத்து

128. திவான் - - ஆரிஸ் இராணுவ நிர்வாகம்

129. சர்தர் - உஸ் - சமயம் மற்றும் அறக்கொடை

130. திவான் - - காசாநீதித்துறை

பிற முக்கியமானவர்கள்

131. சதர் - உஸ் சதர் - தலைமைக் காசி

132. பரீத் - - மாலிக் - ஒற்றர் துறை மற்றும் அஞ்சல்துறை

133. திவான் - - அமிர்கோசிவேளாண்மைத்துறை

134. வக்கீல் - - தார் - அரண்மைப் பராமரிப்பு

135. மஜிலிஸ் - - கால்வத் - ஆலோசணைக்குழு

முக்கியவரிகள்:

136. சாகத் - முஸ்லீம்களின் சமயப்பணி வரி

137. ஜசியாமுஸ்லீம் அல்லாதவர்ளிடம் இருந்து சமயப்பணி வசூலிக்கப்படும் சயமப்பணி வரி

138. காம்ஸ்-போர்க் காலத்தில் கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்கள் மீதான வரி

139. உஷர் - முஸ்லீம் நிலத்தில் பெறப்பட்ட விளைச்சல் வரி

140. காரஜ் - முஸ்லீம் அல்லாதவர்கள் நிலத்தில் பெறப்பட்ட விளைச்சல் வரி