Type Here to Get Search Results !

வரலாறு | Part - 13 | 145 Questions

History in Tamil | Part - 13

முகலாயர் வம்சம்

பாபர் கி.பி.1526 – கி.பி.1530

1. இயற்பெயர் - ஜாஹீருதீன் முகமது பாபர்

2. பாபர் என்ற சொல்லுக்கு சிங்கம் என்று பொருள்

3. தந்தை வழிதைமூர் (துருக்கி)

4. தாய் வழிசெங்கிஸ்கான் (மங்கோலியர்)

5. தந்தைஉமர் ஷேக் மிர்சா

6. பிறந்த இடம் - பர்கானா

முதல் பானிப்பட் போர்

7. 1525ல் பாபர் பஞ்சாப் மீது படையெடுத்து அதன் கவர்னர் தௌலத்கான் லோடியை தோற்கடித்தார்.

8. தௌலத்கான் லோடி மற்றும் அவரது மகன் திலவர் கான், மேவார் அரசர் ராணாசங்கராம் சிங் ஆகியோர் பாபருக்கு இந்தியா மீது படையெடுக்க வழிகாட்டினார்.

9. பாபரின் படைகளுக்கும்,  இப்ராஹிம் லோடியின் படைகளுக்கும் 1526 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 21ஆம் நாள் பானிபட் என்ற இடத்தில் போர் நடைபெற்றது (தற்போது ஹரியானாவில்)

10. இப்போரில் பாபர் வெற்றி பெற்றார். பாபரின் தளபதிகள் உஸ்தாத் அலி மற்றும் முஸ்தபா ஆகியோர் ஆவார். பாபர் துல்குமா எனப்படும் போர் முறையை பின்பற்றினார். பாபர் இப்போரில் ரூமி எனப்படும் பீரங்கி படைகளை முதன் முதலில் பயன்படுத்தினார். முதல் பானிபட் போர் இந்தியாவை ஆண்ட ஆப்கானியர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது

கனுவாப்போர் 1527 மார்ச் 17ம் நாள்

11. பாபர் அரசபுத்திரர்களுடன் செய்த முதல் போர் இதுவே. இப்போர் ராணாசங்காவிற்கும் பாபருக்கும் கி.பி. 1527ம் ஆண்டு மார்ச் 14-17ம் நாள் வரை நடைபெற்றது. இப்போரில் பாபர் வெற்றி பெற்றார்.

சந்தேரிப்போர் 1528

12. 1528 சனவரி 20ம் தேதி சந்தேரிப் போர் நடைபெற்றது. சந்தேரியை ஆண்ட மாளவ அரசர் மேதினாராய் தோல்வி

13. இராணா சங்கா இறந்ததாகவும், மேதினிராய் தோல்வியுற்றதாலும் இராசபுத்திரர்கள் வலிமையிழந்தனர்.

கோக்ராப் போர் - 1529 மே 6ம் நாள்

14. இப்போர் பாபருக்கும், ஆப்கானியர்களுக்கும் இடையே நடைபெற்றது. இப்போரில் படையை நடத்திச் சென்றவர் பாபரின் மகன் ஹஸ்காரி என்பவர் ஆவார். இப்போரில் ஆப்கானியர்கள் (முகமது லோடி +  நசரத் ஷா) தோல்வியுற்றனர். பாபர் 3 போர்களில் இந்துஸ்தானத்தை வெற்றி கொண்டார்

15. பாபர்,  ஹீமாயூனுக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக தம்மை அர்பணித்துக் கொண்டதால் இறந்தார் என்றும் சிலர் இப்ராகிம் லோடியின் தாயார் பாபருக்கு நஞ்சு வைத்த உணவை வழங்கியதால் நோய்வாய் பட்டு இறந்தார். அவரது உடல் முதலில் ஆக்ராவில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் காபூலில் அடக்கம் செய்யப்பட்டது

16. பாபர் துருக்கிய மொழியில் துசுக் - இபாபரி வக்கியாத் - - பாபரி (பாபர் நாமா) என பாபர் குறிப்புகளை எழுதியுள்ளார்

17. இந்த நூலில் இந்தியாவின் நிலை, தனது வெற்றித் தோல்விகள் ஆகியவற்றை குறிப்பிட்டுளார்.

18. பாபரின் மகள் குல்பதான்பேகம்

ஹீமாயூன் கி.பி. 1530 – கி.பி. 1556

19. ஹீமாயூன் நாமா என்ற நூலை எழுதியவர் குல்பதன் பேகம். இந்நூல் ஹீமாயூன் மற்றும் அவரது சகோதரர்கள் காம்ரான், அஸ்காரி, இந்தால் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல்களை பற்றி குறிப்பிடுகிறது

20. ஹீமாயூன் என்றால் அதிர்ஷ்டம் என்று பொருள்

21. 1531 – கலிஞ்சர் முற்றுகைசமாதானம்

22. 1532 – தாத்ரா போர் - முகமது லோடி தோல்வி

23. 1533 - சூனார் முற்றுகைஷெர்ஷா தோல்வி

24. 1535-ல் குஜராத் மீது படையெடுத்து அதனை ஆண்ட பகதூர் ஷாவை தோற்கடித்தார்

25. 1539 – சௌசா போர் - ஷெர்ஷா வெற்றி

26. 1540 – கன்னோசி போர் - ஷெர்ஷா வெற்றி

27. உடன் பிறந்த சகோதரர்கள் உதவி செய்ய மறுத்து விட்டனர். இந்நிலையில் அமர்க் கோட்டை அரசர் அவருக்கு உதவி செய்தார்

28. 1542 – அக்பர் அமரக் கோட்டையில் பிறத்தல்

29. 1555 – டில்லியை மீண்டும கைப்பற்றுதல்

30. 1556 - இறப்பு

31. ஆக்ரா, குவாலியர் மீது போர் தொடுக்கும் போது, குவாலியர் ராசா விக்ரமஜித் கோகினூர் வைரத்தை ஹீமாயூனுக்கு அளித்து சமாதானம் வேண்டினர்.

32. இவரின் மிக பெரிய எதிரி இவரின் குண இயல்புகள் ஆகும்

33. இவரின் பணியாளர் ஜௌஹார் எழுதிய நூல் தாஸ்கிராட் உல் - வாகியாட்

ஷெர்ஷா கி.பி. 1540 – கி.பி. 1545

34. பாபரிடம் தோல்வியடைந்த ஆப்கான் தலைவர்கள்,  ஷெர்கான் சூர் என்பவரை தேர்ந்தெடுத்தார்

35. இவர் சூர் வம்சத்தை சேர்ந்தவர்

36. இயற்பெயர் : பரீத்கான்

37. ஜான்பூர் மன்னர் பாகர்கானை கொல்ல வந்த புலியை கொன்றதால் ஷெர்ஷா என அழைக்கப்பட்டார்

38. இவர் சுமார் 1 ஆண்டு காலம் பாபர் படையில் இருந்தார்

39. ஷெர்ஷா ராஜஸ்தானின் பெரும்பகுதியை கைப்பற்றினார்

40. 1530 – சுனார் கோட்டை முற்றுகை

41. 1535 – ஜலால்கானுடன் சுராஜ்கார் போர்

42. 1536ல் வங்காளத்தின் மீது படையெடுத்து பெரும் செல்வத்தை பெற்றார்

43. 1538ல் கௌர் கைப்பற்றப்பட்டது

44. 1539ல் சௌசாவில் முகலாயப் பேரரசர் ஹீமாயூனுடன் போரிட்டு வென்றார். ஹீமாயூன் தப்பி ஓடிவிட்டார்.

45. 1540 கன்னோசி போரில் வெற்றி

46. 1542 – மாளவத்தைக் கைப்பற்றினார்

47. 1543ல் ரெய்சின் மீது படையெடுப்பு

48. 1545ல் கலிஞ்சார் (பண்டல்கண்ட) போரில் வெற்றி பெற்றார். 1545ல் ஒரு துப்பாக்கி குண்டு வெடித்து இறந்தார்.

49.  இவருக்குப் பின் இஸ்லாம் ஷா ஆட்சிக்கு வந்தார்.

50. 1553-ல் இவர் இறந்தார்

51. ஷெர்ஷா இறந்தவுடன் சூர் அரசு 5 பிரிவுகளாக பிரிந்தது.

a. பஞ்சாப் - சிக்கந்தர்

b. வங்காளம் - முகமது கான்

c. மால்வாபாஸ் பகதூர்

d. சாம்பல் மற்றும் தோப் - இப்ராகிம் சூர்

e. சூனார் - அடில் ஷா

ஷெர்ஷாவின் ஆட்சிமுறை

52. நாடு 47 சர்கார்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. சர்கார், பர்கனாக்களாகப் பிரிக்கப்பட்டன

53. பர்கனா:  அலுவலர்கள் துறை

54. சிக்தார்:  சட்டம்

55. அமீன்:  வருவாய்த்துறை

56. முன்சீப்:  நீதி

57. கார்கூன்கள்:  பாரசீக இந்தி மொழி பெயர்ப்பாளர்

58. பொதாதர்:  கருவூலம்

59. பர்கனாவின் வேலையைக் கண்காணிக்க சர்க்காரில் ஷிக்தார் - - ஷிக்தாரான் மற்றும் முன்சீப் - - முன்சிபான் என்ற அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

60. அலுவலர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்பட்டனர்.

அமைச்சர்கள் துறை

61. திவானி விசாரத்:  வருவாய் நிதி அமைச்சர்

62. திவானி அரிஸ்:  பாதுகாப்பு

63. திவானி விசாலத்:  வெளி விவகாரம்

64. திவானி இன்ஷா:  தகவல் தொடர்புத்துறை

65. திவானி காஜி:  ஒற்றர் துறை

66. திவானி பரீத்:  நீதித்துறை

67. டாம் :  புதிய நாணயம்

68. நிலவரிச் சீர்திருத்தம்

69. தக் முறைப்படி குதிரைக்கு சூடு போடப்பட்டது.

70. „ரூபியாஎன்ற நாணயங்களை வெளியிட்டார்

71. Grand Trunk Road கல்கத்தாபெஷாவருக்கிடையே போடப்பட்டது

72. அக்பரின் முன்னோடி

73. படைமுறைக் கொள்கையில் அலாவுதீன் கில்ஜியை பின்பற்றினார்

74. கோட்டையை காப்பாற்ற பௌஜ் (Fauj) என்ற நிலையான தனிப்படையை வைத்து இருந்தார்.

75. இந்துக்களை மரியாதையுடன் நடத்தினார்

76. அவருடைய சிறந்த தளபதிகளில் ஒருவர் பிரமஜித் கௌர்

77. தாரிக் - - ஷெர்ஷாகி நூலை ஆப்கானிய உயர்குடிச் சார்ந்த அப்பாஸ்கான் என்பவர் எழுதியுள்ளார்.

இஸ்லாம் ஷா

78. இவரின் இயற்பெயர் ஜலால் கான்.

79. ஷேர்ஷாவின் இரண்டாவது மகன்.

80. சூர் வம்சத்தின் இரண்டாவது மன்னர்

81. இவர் இந்திய முஸ்லீம் மறுமலர்ச்சியின் தந்தை எனப்பட்டார்

முகமது அதில் ஷா

82. இஸ்லாம் ஷாவின் மகன் பிரோஷ் என்பவரை கொலை செய்து ஆட்சிக்கு வந்தார். இவர் பிரோஷ் தாய்மாமன் ஆவர். இவர் உப்பு வணிகம் செய்த ஹெமு என்பவரை முதலமைச்சராக நியமித்தார்

83. சூர் வம்சத்தின் கடைசி மன்னர் சிக்கந்தர் ஷா ஆவார்

அக்பர் கி.பி. 1556 கி.பி. 1605

84. தேசிய பேரரசர்

85. தந்தை - ஹீமாயூன்

86. தாய் - அமீதா பேகம்

87. பிறந்த இடம் - அமர்கோட்

88. பாதுகாப்பாளர் - பைராம்கான்

89. ஹீமாயூன் இறந்ததும் பட்டம் சூட்டிக் கொண்டு சுமார் 49 ஆண்டுகாலம் ஆட்சி செய்தார்

இரண்டாம் பானிபட் போர் 1556

90. நவம்பர் 5ம் தேரி டில்லியை ஆட்சி செய்த ஹெமுவிற்கும் அக்பருக்கும் நடந்தது. இதுவே பானிபட் போர் எனப்படும். இதில் அக்பர் வெற்றி பெற்றார்.

91. பைராம்கான் இவ்வெற்றிக்கு காரணமாவார்

92. 1560ல் பைராம்கான் விடுவிக்கப்பட்டார். 1561ல் ஆப்கானியர்களால் இவர் கொல்லப்பட்டார்.

93. பைராம்கான் மகன் அப்துர்ரகீம்

94. பைராம்கானிற்கு பிறகு தனது தாய் அமீதா பானுபேகம் மாற்றாந்தாய் மாகம் அனாகா மற்றும் அனாகனவின் மகன் ஆதாம்கான் ஆகியோரின் கைப்பாவையில் அக்பர் இருந்தார். இவர்கள் தலைமையில் நடந்த ஆட்சி பாவாடை ஆட்சி எனப்பட்டது. ஆதாம்கான் 1562ல் கொல்லப்பட்டார்.

95. 1561ல் மாளவம் கைப்பற்றப்பட்டது. மன்னர் பாஜ் பகதூர் சரணடைந்தார்

96. 1562ல் ஆம்பர் (ஜெய்பூர்) ராசா பிகாரிமால் தோல்வியடைந்தார். அவரது மகள் ஜோத் பாயை அக்பர் திருமணம் செய்து கொண்டார். பிகாரி மால் மகன் பகவான் தாஸ் ஆவார். அவருடைய பேரன் மான் சிங் ஆவார்

97. 1564ல் கோண்டுவானா போர்:  சாந்தலா அரசி துர்காவதி தோற்கடிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டார்

98. 1567 சித்தூர் படையெடுப்பு:  மன்னர் ரானா உதயசிங் தப்பி ஓடினார். இப்போர் முகலாயப் பேரரசு இந்தியாவில் பரவ வித்திட்டது

99. 1569ல் இராத்தம்பூர் மற்றும் கலிஞ்சி கைப்பற்றப்பட்டது.

100. 1572ல் குஜராத்தை வென்றார். குஜராத்தை வென்றதன் நினைவாக பதேபூர் சிக்ரி என்ற இடத்தில் பூலான் தார்வாசவை கட்டினார்

101. 1572ல் அக்பர் ஷேக் சலீம் சிஸ்தி என்ற சுபி துறவியின் மீது பற்றுக்கொண்ட காரணத்தால் அவரது நினைவாக பதேபூர் சிக்ரி (ஆக்ரா அருகில்) எனற இடத்தை கட்டினார்

102. 18.6.1576ல் ஹல்திகாட் சண்டை அக்பருக்கும் இராணா பிரதாப் சிங்கிற்கும் நடைபெற்றது. அக்பரின் சார்பாக இராஜா மான்சிங் போரிட்டார். அதில் இராணா பிரதாப் சிங் மரணமடைந்தார்.

103. இராஜா மான்சிங் பீகார்,  ஓரிசா மற்றும் வங்காளத்தை கைப்பற்றினார்

104. 1586ல் காஷ்மீரை கைப்பற்றினார்

105. 1593ல் சிந்து மற்றும் காண்டேகர் பகுதியை கைப்பற்றினார்

106. அகமது நகரை ஆண்ட சந்த்பீவி உடன் உடன்படிக்கை 1596ல் ஏற்படுத்தப்பட்டது. அகமது நகர் கைப்பற்றப்பட்டது

107. அக்பரின் கடைசி படையெடுப்பு,  தக்காணத்தில் உள்ள அசிகார் கோட்டையை கைப்பற்றியது ஆகும். தக்காணத்தின் விலைமையான கோட்டை அசீர்கார்க் ஆகும். இதை அக்பர் வஞ்சகமான முறையில் கைப்பற்றினார்.

108. அக்பர் இராசபுத்திரர்களின் திருமண உறவின் மூலம் பெரும் பலன் அடைந்தார். 1584ல் தமது மகன் சலீமுக்கு இராஜா பகவான் தாஸ் மகளை திருமணம் செய்து வைத்தார்.

அக்பரின் நிர்வாகம்

109. முகலாயர்களின் வருவாய் நிருவாகத்தை தோற்றுவித்தவர் அக்பர் ஆவார்

110. சுராசரி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு வரி விதிக்கப்பட்டது.

111. அக்பரின் வருவாய்த் திட்டம் ராசா தோடர்மாலின் தலைமையின் கீழ் இருந்தது.

112. மைய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் கல்சா நிலங்கள் எனப்பட்டது

113. நிலங்கள் 4 வகையாக பிரிக்கப்பட்டது

114. ரயத்துவாரி முறை பராமரிக்கும் அதிகாரி பட்வாரி எனப்பட்டார்

115. அக்பரின் வரி வசூல் முறைக்கு சப்தி முறை என்று பெயர்

116. அக்பரின் இராணுவ முறைக்கு மன்சப்தாரி முறை என்று பெயர்

117. 1577ல் இது அறிமுகப்படுத்தப்பட்டது

118. மன்சப்தாரிகள் குறைந்தது 400 படை வீரர்களை வைத்து இருந்தார்கள்.

119. ZAT  என்று பெயர் குதிரைக்கு சூடு போடும் முறை உண்டு

120. 1563ல் அக்பர் ஜஸியா வரியை நீக்கினார்

121. அக்பர் விதவை மறுமணத்தை ஆதரித்தார்

122. அக்பர் சதி என்னும் உடன்கட்டை ஏறுவதை தடுத்து நிறுத்தினார்

123. அரசவை கூட்டத்திற்கு திவானி ஆம் என்று பெயர்

124. சிறப்பு திட்டத்திற்கு திவானி காஸ் என்று பெயர்

125. சீக்கியர்கள் பொற்கோவில் கட்டிய நிலம் அக்பர் அளித்தது. (குரு ராமதாஸ் காலம்)

126. அக்பரின் சமாதி சிக்கந்தாராவில் உள்ளது

127. அக்பரின் அவை கவிஞர் - அப்துல் வமது

128. அக்பரின் நிலவரித் திட்டம் ஷெர்ஷாவின் நிலவரித்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது.

அக்பர் அவையை அலங்கரித்த நவரத்தினங்கள்

அபுல் பாசல்:

129. இவரது தந்தை பெயர் ஷேக்முபராக்

130. அக்பரின் அவையை அலங்கரித்தவர்களில் ஒருவர். இவர் எழுதிய நூல்கள் அய்-னி-அக்பரி மற்றும் அக்பர் நாமா

131. அக்பரின் மகன் சலீம் தூண்டுதலால் பாண்டா இனத் தலைவரான பீர் சிங் என்பவரால் கொல்லப்பட்டார்

பைஸி:

132. இவர் அபுல் பாசலின் தம்பி ஆவார். மிகச் சிறந்த கவிஞரான இவரை தனது மகனுக்கு ஆசிரியராக நியமித்தார்.

மியான் தான்சேன்:

133. இவர் மிகச் சிறந்த இசையமைப்பாளர் ஆவார். முகமது கலுஸ் என்று சூஃபி துறவி மூலம் இஸ்லாமிய மதத்தை தழுவினார். வட இந்திய இசையை கிளாஸ்சிகல் ஸ்டைல் எனப்பட்ட முறையில் இவர் இசை அமைத்துள்ளது. இம்முறை இன்றும் பின்பற்றப்படுகிறது. அக்பர் இவருக்கு மியான் என்ற பட்டத்தை வழங்கினார்

பீர்பால்:

134. அக்பரின் அவையில் பீர்பால் என்ற சிறந்த அறிஞர் இருந்தார். இவரின் இயற்பெயர் மகேஷ் தாஸ் ஆகும். இவர் மலந்தேரி கணவாய் போரில் கொல்லப்பட்டார். மதி நுட்பம் வாய்ந்த இவர் இராணுவம் மற்றும் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டார். அக்பரின் அரசவையை அலங்கரித்த நவரத்தினங்களில் இவரும் ஒருவர்

இராஜா தோடார்மால்:

135. அக்பரின் நிதி அமைச்சர் இராஜா தோடர்மால். இவரின் நிலச் சீர்திருத்த முறை பந்தோபஸ்ட் சிஸ்டம் எனப்பட்டது

 

இராஜா மான் சிங்:

136. அக்பரின் மான் சாப்தாரி தலைவர்களின் மிகச் சிறந்தவர். ஆம்பர் (ஜெய்பூர்) நாட்டின் மிகச் சிறந்த அரசரான இவர் பின் நாளில் அக்பரின் தளபதியாக மாறினார். ஹால்டிகாட் போரை திறம்பட நடத்தியவர்

 

137. அப்துல் ரகீம் கான்: அக்பரின் அவையை அலங்கரித்த புலவர்

138. பக்கீர் ஆசிய தீன்: அக்பரின் ஆலோசகர்

139. முல்லா தௌ பியாசா: அக்பரின் ஆலோசகர்

140. தீன் இலாகி: அக்பரின் மதக் கொள்கை தீன் இலாகி, அக்பர் இந்து, இஸ்லாம், கிருத்துவம், சமணம் (பௌத்தம் தவிர) ஆகிய சமயங்களில் உள்ள நல்ல கொள்கைகளை ஒன்றிணைத்து தீன் இலாகி என்ற மதத்தை 1581ல் உருவாக்கினார்.

141. அக்பர் சந்தித்த சமண மத தலைவர்கள்: ஹிர விஜய சூரி, விஜய சேன சூரி மற்றும் பானு சந்திர உபாத்தியாயர் ஆவார்

142. அக்பர் சந்தித்த கிருத்துவர்கள்: ரிடால்போ, அருவாவிவா, மான்செர்ட் ஆவார்

143. அக்பர் சந்தித்த பார்சி மதத்தைச் சார்ந்தவர்:  தஸ்தூர் மெகர்ஜிராணா ஆவார்

144. அக்பரிக் தீன் இலாகியை மொத்தம் 29 நபர்கள் ஏற்றக் கொண்டனர். அவர்களின் முக்கியமானவர் அபுல் பாசல், அரசவைக் கவிஞர் பைசி, ஷேக் முபாரக் ஆவார்

145. தீன் இலாகியை ஏற்க மறுத்தவர்கள்:  பகவான் தாஸ் மற்றும் மான்சிங் ஆவார்

146. அக்பர் 26.6.1579ல் தலைமை மதக் குருவை நீக்கிவிட்டு தாமே குத்பா வாசித்தார்.

147. துளசி தாசர் அக்பர் காலத்தில் வாழ்ந்தார்

148. அக்பருக்குப் பின் அவரது மகன் சலீம் 1605ல் வாரிசாக நியமிக்கப்பட்டார்.