Type Here to Get Search Results !

வரலாறு | Part - 11 | 85 Questions

 History in Tamil | Part - 11

வர்த்தன குலம்

1. வர்த்தன குலத்தை தோற்றுவித்தவர் புஷ்யபூதி

2. இக்குலத்தின் பிற முக்கிய அரசர்கள்

3. நரவர்த்தனர்

4. ராஜ்ய வர்த்தனர்

5. ஆதித்திய வர்த்தனர்

6. பிபாகர வர்த்தனர் கி.பி. 583-605

இராஜ்ய வர்த்தனர்: கி.பி. 605 - 606

7. தங்கையின் கணவன் கிரக வர்மன்,  மாளவ மன்னன் தேவ குப்தனால் கொல்லப்பட்டார்.

8. கௌட அரசன் சாசங்கனால்,  தங்கை இராஜ்யஸ்ரீ சிறைப்பிடிக்கப்பட்டார்.

9. தேவசர்மனுடன் போரிட்டு வென்றாலும் கௌட அரசனால் இவர் கொல்லப்பட்டார். இவருக்கு பின் இவரது சகோதார் ஷர்ஷவர்த்னர் பதவியேற்றார்.

ஹர்ஷவர்த்தனர்

10. சான்றுகள்

a. அய்ஹோலே கல்வெட்டு

b. மதுபன் கல்வெட்டுக்கள் ஹர்ஷர்க்கு பின் உள்ள 4 தலைமுறைகளை பற்றி கூறுகிறது. சானப்பட்டயங்கள் தலைமுறை குழப்பங்களை தீர்த்து வைக்கிறது

c. ஹர்ஷரின் கையெழுத்துப் பிரதியை பான்சேகரா கல்வெட்டுகள் எடுத்துக் காட்டுகிறது

d. பாணரின் ஹர்ஷ் சரிதம்

e. யுவான் சுவாங்கின் சியுக்கி

f. ஹர்ஷரின் நாகானந்தா, ரத்தினாவளி, பிரியதர்சிகா

11. தமையன்: ராஜவர்த்தனர்

12. தங்கை: ராஜ்யஸ்ரீ

13. மைத்துனர்: கிரகவர்மன்

14. தலைநர்: கன்னோசி என்ற தானேஷ்வர்

15. குப்த பேரரசு வீழ்ச்சிக்கு பின் தோன்றிய பல சிற்றரசுகளில் வர்த்தன குல சிற்றழசம் ஒன்று

16. இவ்வம்சத்தின் தலைசிறந்த மன்னர் ஹர்ஷர்.

17. இவர் வட இந்தியாவின் ஒரு பகுதியை ஆட்சி செய்தார்.

18. தென் இந்தியாவில் சாளுக்கிய நாட்டு மன்னன் இரண்டாம் புலிகேசி மறைவிற்கு பின்னர் கஞ்சன் பகுதியை வென்றார். இதுவே அவரின் கடைசி வெற்றியாகும்.

19. இவர் காலத்தில் அனைத்து சமயங்களின் மாநாடு கன்னோசியில் நடைபெற்றது

20. அலகாபாத் நகரில் சமய மாநாட்டை மீண்டும் நடத்தினார்

நாளந்தாப் பல்கலைக்கழகம்

21. இதன் தலைவர் தர்மபாலர்

22. இதனை நிறுவியவர்கள் முகாரி அரசர்கள்

23. காஞ்சி தர்மபாலர் தத்துவ பேராசிரியர்

24. அசாம் சீலபத்திரர் துணை வேந்தர்

25. 1500 ஆசிரியர்கள்: 10000 மாணவர்கள்

26. பதஞ்சலிமகாபாஷ்யம்

27. பல்கலைக்கழக தலைவர் - சில்பதாரா

28. மதச்சண்டையில் இப்பல்கலைக்கழகம் அழிந்தது

29. ஹர்ஷர் தனது நாட்டை புக்திவிஷயம் - பத்ம என பிரித்தார்.

30. ஊதரங்கம் என்ற நிலவரி வசூலிக்கப்பட்டது

31. ஹர்ஷர் எழுதிய நூல்கள் : 1. ரத்தினாவளி 2. பிரியதர்சிகா 3. நாகா நந்தம் 4. சாந்தி சதகம் 5. பார்வரி பரிணயம்

பாணபட்டர்:

32. இவர் ஹர்ஷ சரிதம், காதம்பரி மற்றும் பார்வதி பரிணாம் ஆகிய நூர்களை எழுதியுள்ளார்

33. பிற நூல்கள் - பர்த்ரு ஹரிவாக்கியபாடியம்

34. ஜெயதேவர் எழுதிய கீதாகோவிந்தம்

லலித விஸ்தாரம்:

35. இது  நீட்டல் அளவைப் பற்றி குறிப்பிடுகிறது

36. நீட்டளவையின் மிக பெரிய பகுதி யோனை ஆகும்

37. யோசனை என்பது அரசரின் இராணுவம் ஒரு நாளில் கடக்கும் தூரம் ஆகும்

யுவான் சுவாங்:

38. யுவான் சுவாங் சீன பயணி இவர் காலத்தில் இந்தியாவிற்கு வந்தார்

39. யுவான் சுவாங் எழுதிய குறிப்புகள் Si-Yu-Ki (சியுகி) எனப்படும்

40. இவர் புத்த ஆலயங்களை பார்வையிடவும் புத்த நூல்களை திரட்டவும் இந்தியாவிற்கு வந்தார்

41. இவர் இந்தியாவில் இருந்த காலம் கி.பி. 630 முதல் 644 வரை ஆகும்

42. ஹர்ஷா இவரை ராஜ் மகாலுக்கு அருகே உள்ள கஜன்கலா கூடாரத்தில் சந்தித்தார்

43. யுவான் சுவாங் இந்திய எழுத்துக்களை பிரம்மதேவரால் எழுதப்பட்டவை என குறிப்பிடுகின்றார். அதன்படி மொத்த எழுத்துக்கள் 47 ஆகும்.

44. இவர் காலத்தில் ரிக் வேதத்தைப் பற்றி குறிப்பிடப்படவில்லை

45. இவர் யஜீர், சாம, அதர்வண வேதத்தைப் பற்றி குறிப்புகள் தந்துள்ளார்.

46. புத்த மதம் Sthaviras மற்றும் Mahasanghikas என இரு பெரும் பிரிவாக பிரிக்கப்பட்டது என்றும் Sthaviras ல் 16 பிரிவுகளும் Mahasanghikas 4 பிரிவுகளும் ஆக 20 பிரிவுகள் தோன்றியது. இவற்றில் பிரிவுகள் மட்டுமே நடைமுறைப் படுத்தப்பட்டது.

வட இந்திய அரசுகள் (கி.பி. 800-1200)

இராஜபுத்திரர்கள்

1. ஹர்ஷரின் மறைவுக்குப் பின்பு வட இந்தியாவில் பல சிறு அரசுகள் தோன்றியது

2. எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டுகளில் ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் ராஜபுத்திரர்கள் ஆட்சி செய்தனர்

3. இராஜபுத்திரர்கள் தீயிலிருந்து தோன்றியவர்கள் எனக் கூறிக் கொள்கின்றனர்

4. அவர்களுக்கிடையே 36 அரசு பிரிவுகள் இருந்தமையால் ஒற்றுமையில்லாமல் தங்களுக்கடையே எப்போதும் போரிட்டுக்கொண்டே இருந்தனர்.

5. Gahadwals: புகழ் பெற்ற மன்னர் ஜெய சந்திரன் ஆவார். இவர் முகமது கோரியால் 1193ல் நடைபெற்ற போரில் (Battle of Chanda) தோற்கடிக்கப்பட்டார்.

6. Parmars: ஸ்ரீ வர்ஷா என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.

பிரதிஹாரர்கள்:

7. முதலாம் அரசர் - நாக பட்டர்

8. தலைநகரம் - கன்னோசி

9. புகழ்பெற்ற அரசர் - போஜ அரசன்

10. கடைசி மன்னர் - ராஜ்ய பால்

11. ராஜ்ய பால் முகமது கஜினியால் தோற்கடிகப்பட்டார்

சவ்ஹான்கள்:

12. தலைநகர் - அஜ்மீர்

13. விசால தேவா டில்லியை கைப்பற்றினார்

14. 1191ல் நடைபெற்ற முதல் தெரயின் போரில் பிரிதிவிராஜன் முகமது கோரியை தோற்கடித்தார்

15. 1192ல் நடைபெற்ற (இடம் தெரயின்) போரில் கன்னோசி அரசரான ஜெயசந்திரரைத் தவிர ஏனைய இராஜபுத்திர அரசரான ஜெயசந்திரரைத் தவிர ஏனைய இராஜபுத்திர அரசர்கள் அனைவரும் முகமது கோரியால் தோற்கடிக்கப்பட்டு பிரிதிவிராஜன் கொல்லப்பட்டார்.

16. இத்தோல்வி இராசபுத்திரர்களை நிலைகுலையச் செய்தது

சாண்டலர்கள்:

17. பண்டல்கண்டை ஆண்ட இவர்கள் புகழ் பெற்ற கஜீராஹோ கோயிலைக் கட்டியவர்கள். டுரங் என்ற மன்னர் கிஜீராஹோ நகரில் விசுவநாதர் ஆலயத்தை கட்டினார்.

கங்கர்கள்:

18. தற்போது ஒரிச என்ற பகுதியை ஆண்டவர்கள் கங்கர்கள் ஆவர்

19. அனந்தவர்ம சூடன் என்ற மன்னன் காலத்தில் பூரி ஜெகனாதர் ஆலயம் துவங்கப்பட்டது.

20. இவருக்குப்பின் ஆட்சிக்கு வந்த முதலாம் நரசிம்மம் முஸ்லீம்களின் படையெடுப்பை முறியடித்து ஜெகனாதர் ஆலயம் மற்றும் கொனார்க்கில் உள்ள சூரிய கடவுள் ஆலயத்தை கட்டினார்.

21. முதலாம் நரசிம்மருக்குப்பின் சூரிய வம்சத்தைச் சார்ந்த கபிலேந்திரா என்பவர் ஆட்சி செய்தார். 1568ல் வங்காளத்தைச் சார்ந்த காரராணி கூல்தான்களால் ஒரிசா கைப்பற்றப்பட்டது.

இராஜ தரங்கிணி (The River of Kings):

22. இந்நூலை எழுதியவர் கல்ஹாணர் ஆவார்

23. காஷ்மிர்; அரசர்களை பற்றி கூறும் முக்கிய (காஷ்மீரைப் பற்றி கிடைக்கப்பெற்ற நூல்களில் முதல் நூல்) நூல் இது ஆகும்.

சூஃபிசம்

1. சூஃபிசம் என்பது அரபுச் சொல்

2. சூஃபி என்றால் கருப்பு நிறத்துணி என்பது பொருள்

3. கருப்பு நிறத்துணியை கொண்டு நீளமான மேலங்கிகளைத் தயாரித்துக் கொண்டதால் இத்துறவிகள் சூஃபிகள் எனப்பட்டனர்.

4. இவர்கள் பாரசீகத்தில் இருந்து வந்த இசுலாமிய துறவிகள் ஆவார். இவர்கள் இந்தியாவிற்கு வந்த காலம் கி.பி. 11ஆம் நூற்றாண்டு

5. இவர்கள் குராணை தீவிரமாக பின்பற்றினர்

6. இவர்களிடம் இந்து புத்த சமணமதத்தின் தாக்கம் காணப்பட்டது

இவர்கள் கொள்கைகள்:

7. இறைவன் ஒருவனே

8. உண்மையான இறை அர்ப்பணிப்பே தொழுகை நோன்பு. சடங்குகள் ஏற்கவில்லை

9. இவர்கள் இந்துக்களை இசுலாமியர்களாக மாற்ற முயலவில்லை

10. ஆனால் இந்து மதத்தில் உள்ள சடங்குகள் மற்றும் சாதிகளை கைவிடுமாறு உபதேசித்தனர்

11. இவர்கள் இறைவனை பண்ணிசைத்து பாடிய பாடல்கள் காவலிகள் எனப்பட்டது

12. சூஃபித் இயக்கத்தின் முக்கிய இரு பிரிவுகள்:

a. 1)சிஷ்டி 2) சுகர் வார்டி

13. முக்கிய சிஷ்டி சூஃபித் துறவிகள்

a. முயினுதீனு சிஷ்டிஅஜ்மீர்

b. நிசாமுதீன் அவுலியாதில்லி

c. பாபாபரீத்

14. முக்கிய சுகர்வார்டித் துறவிகள்

a. ஷேக் சகாபுதீன் சுகர்வாடி

b. அமிதுதீன் நகோரி

15. சூஃபிசம் தோன்றியதால் இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்பட்டது

இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி

1. இந்தியாவின் மீது முதல் முதல் படையெடுத்தவர் முகமது பின் காசிம்

2. சிந்து பிரதேசத்தின் மீது கி.பி. 711-712ல் அவர் படையெடுத்தார். இந்து மன்னன் தாபீர் என்பவரை வென்றார்.

முகமது கஜினி

1. இந்தியாவின் மீது 17 முறை படையெடுத்தார். முதல் படையெடுப்பு கி.பி. 1001ஆம் ஆண்டு ஆகும்

2. 15வது முறை சோமநாதபுர ஆலயத்தின் மீது 1025 – 1026ல் படையெடுத்து பெரும் செல்வத்தை கவர்ந்தார். இவரின் படையெடுப்புக்கு காரணம் செல்வத்தை கொள்ளையடிப்பதாகும்

3. 1030ல் இறந்தார். பிர்தௌசி எழுதிய ஷாநாமாவிலும்,  அல்பெரூனி எழுதிய கிட்டபுல் ஹிந்த் என்ற நூலிலும் முகமது கஜினி பற்றிய விவரங்கள் காணப்படுகிறது

இவரின் படையெடுப்பு விவரங்கள்:

1. 1000 – எல்லைப்புற கோட்டை மற்றும் கிராமங்களைக் கைப்பற்றுதல்

2. 1001 – பெஷாவரில் இந்து சாதி அரசர் ஜெயபாலை தோற்கடித்தார். ஜெயபால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது மகன் அனந்தபாலன் மன்னரானார்

3. 1006 – பேராவின் மன்னர் பிஜராவுடன் போரிட்டு கைப்பானூரில் உள்ள பாட்டியாவை கைப்பற்றினார்

4. 1006 - மூலதான் வென்றார். வழிவிட மறுத்த அனந்தபாலன் தோற்கடிக்கப்பட்டார். இவரது மகன் சுகபாலர் கஜினியின் பிரதிநிதியாக ஆட்சி புரிந்தார். சுகபாலர் நவாஷா என்ற பெயருடன் இசுலாமியத்திற்கு மாறினார்

5. 1007 – நவாஷா தன்னிச்சையாக ஆட்சி புரிய தொடங்கியதால் தோற்கடிக்கப்பட்டார்

6. 1009 – அனந்தபாலனுடன் போரிட்டு லாகூர் அருகில் உள்ள நாகர்காட்டை கைப்பற்றினார். பெருஞ்செல்வம் கொள்ளையடிக்கப்பட்டது

7. 1010 – அவரது கவர்னர் அபுல்பாத் லோடி என்பவர் தன்னிச்சையாக அறிவித்தால் அவரை அடக்கினார்

8. 1013 – அனந்தபாலருக்கு பின் வந்த திரிலோசன பாலர் மீது படையெழுத்து வென்றார்

9. 1014 – தானேஸ்வர் ஆலயம் கைப்பற்றப்பட்டு சூறையாடப்பட்டது

10. 1015 – காஷ்மீரத்திற்குள் நுழைய முயற்சித்தார். லாகூர் வரை சென்றார்

11. 1017 – கன்னோஜ்விற்கு எதிராகப் படையெடுத்ததார். மதுராவிற்கெதிரான படையெடுப்பு மேற்கொண்டார். கோயில் கொள்ளையடிக்கப்பட்டது.

முகமது கோரி:

12. இவரின் முழுப்பெயர் முசதீன் முகமது பின் சாம் என்கின்ற சாபூதீன் முகமது ஆகும்.

13. இவரின் படையெடுப்பிற்கு காரணம் இஸ்லாமிய அரசு அமைத்தல் ஆகும். இதில் இவர் வெற்றி பெற்றார்.

14. இவர் 1175ல் மூலதான் உச் பகுதிகளை கோமதிகணவாய் வழியே நுழைந்து கைப்பற்றினார்

15. 1178-ல் சோலங்கி மன்னர் இரண்டாம் பீமா என்பவரிடம் குஜராத்தை கைப்பற்ற போரிட்டு தோற்றார். இதுவே இவரின் முதல் தோல்வி ஆகும்.

16. 1179ல் பெஷாவர் கைப்பற்றப்பட்டது.

முதலாம் தரெயின் போர்:

17. 1191ல் அஜ்மீரை ஆண்ட பிரிதிவிராஜ் சௌகான் என்பவரை முகம்மது கோரி தோற்றார்.

இரண்டாம் தரெயின் போர்:

18. 1192ல் பிரிதிவிராஜ் சௌகானை வென்றார். முகமது கோரிக்கு கனோஜ் அரசர் செயச்சந்திரன் உதவி செய்தார்

19. 1193ல் முகமது கோரியின் அடிமை குத்பூதீன் ஐபெக் தில்லி, மீரட் ரத்தன்சார்பூர் ஆகியவற்றை கைப்பற்றினார்.

சந்தவார் போர்:

20. 1194ல் கனோஜ் அரசர் செயச்சந்திரனை தோற்கடித்தார்

21. 1196ல் குவாலியர் கைப்பற்றப்பட்டது

22. 1197ல் குஜராத் கைப்பற்றப்பட்டது.

23. 1206ல் இந்தியாவில் இருந்து திரும்பும்போது கொல்லப்பட்டார்