Type Here to Get Search Results !

வரலாறு | Part 4 | 91 Questions

History in Tamil - Part 4

புத்த சமயம் 563 கி.மு.

1. 567 கி.மு. என்றும் கூறுவர்.

2. புத்த மதத்தை நிறுவியர் - புத்தர்

3. புத்தர் என்னும் சொல்லுக்கு ஞானஒளி பெற்றவர் என்று பெயர்.

4. இயற்பெயர் - சித்தார்த்தர்

5. தந்தைகபிலவஸ்து நாட்டின் மன்னர் சுத்தோதனர்.

6. தாய் - மாயாதேவி

7. இனம் - சாக்கியர் வம்சம் - சத்ரியர் காலம் 487

8. வளர்ப்புத்தாய் - கௌதமி (மாயாவின் தங்கை)

9. பிறந்த இடம் - லும்பினி வனம்

10. மனைவியசோதை, மகன் - இராகுலன்

11. ஞான ஒளி கிடைத்த இடம் - கயை (பீகார்)

12. முதன் உபதேசம் செய்த இடம் - சாரநாத் (மான் பூங்கா)

13. இயற்கை எய்திய இடம் - குசி, வயது: 80

14. வேறு பெயர்: சாக்கிய முனி : ஆசிய ஒளிவிளக்கு

15. துறவு மேற்கொள்ளப்பட்ட போது வயது : 29

16. ஞானம் பெற்ற போது வயது : 35

17. முதல் உபதேசம் பெற்றவர்கள்: 5 பிராமணர்கள்

18. புத்த சமய கருத்துகள் கூறுவதுதிரிபீடகம்

 

திரிபீடகங்கள் (மூன்று கூடைகள்)

19. விநய பீடகம் - ஓழுக்கம்

20. சுத்த பீடகம் - தூய்மை

21. அபிதம்ம பீகடம்-அறநெறி கருத்துக்கள்

22. விநய பீடகம்: 2 பிரிவுகளை உடையது

a. விநய பீடகம்

i. விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை உடையது.

ii. சங்கங்களின் வளர்ச்சி பற்றியது

b. பாதி மோட்சம்

i. புத்தரின் வாழ்க்கை பற்றியது

23. சுத்த பீடகம்:

a. இது பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது.

b. 5 பிரிவுகளை கொண்டது.

24. பல இடங்களில் புத்தர் வழங்கிய உபதேசங்கள் மற்றும் உரைகள் பற்றியது.

25. சாரிபுத்தா, ஆனந்தா ஆகியோர் தொகுத்தனர்.

26. தீக நிகாயம்: 34 சூத்திரங்களை உடையது.

27. சூத்திரம் மகாபரிநிகாயாபுத்தரின் வாழ்க்கையின் கடைசி கால கட்டத்தை விளக்குவது.

28. சம்யுக்த நிகாயம் : 56 சூத்திரங்கள்

29. அங்குத்தர நிகாயம்: 11 பிரிவுகள்

30. மத்திம நிகாயம்: 152 சூத்திரங்கள்

31. குட்ட நிகாயம்: இலக்கியங்கள்

 

32. அபிதம்ம பீடகம்:

a. இது புத்த சமய இலக்கியங்கள் மற்றும் புத்தரின் முந்தைய பிறப்புகளில் நடைபெற்ற கனவுகள் (ஜாதகக் கதைகள்) பற்றியது. இது பாலி மொழியில் எழுதப்பட்டது.

b. ஏழு பிரிவுகளை உடையது.

c. தர்மசங்கணி 2. விபங்கம் 3. கதவத்து 4. பண்ணத்தி 5. தாதுகதை 6. யமகம் 7. பட்டானம்

33. முதல் 5 சீடர்கள்: 1. சொண்டன்னா 2. மகானாமா 3. வப்பா 4. பத்திஜி 5. அஸ்ஸாஜி

34. முக்கிய சீடர்கள்: 1. ஆனந்தா 2. உபாலி 3. மகா கஸ்ஸபா 4. அனுருத்தா

முக்கிய பல்கலைக் கழகங்கள்:

35. (கால வரிசைப்படி)

36. தட்சசீல பல்கலைக்கழகம்

37. நாகர்ஜூனா பல்கலைக்கழகம்

38. நாளந்தா பல்கலைக்கழகம்

39. வாதாபி பல்கலைக்கழகம்

40. விக்ரம் சீல பல்கலைக்கழகம்

41. முக்கிய நூல்கள்

42. திரிபீடங்கள் - மிலிண்டபாணா

43. மசனவிபஷா - சூத்திர அலங்காரம்

44. மகாயாணம் பள்ளிகள்:

45. மத்தியமிகா 2. யோகசாரா

46. ஹீனயாணப் பள்ளிகள்:

47. வைபாஷிகா

48. புத்தரின் வாழ்க்கை வரலாற்றை விளக்குவது ஜாதகக் கதைகள்.

புத்த மாநாடுகள்:

முதல் புத்த மாநாடு:

49. புத்தர் இறந்த சில வாரங்களில் நடைபெற்றது.

50. 487 அல்லது 483 கி. மு.வில் ராசகிருகம் என்ற இடத்தில் சட்டபாணி என்ற குகையில் நடைபெற்றது.

51. பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த 500 புத்த மத குருக்கள் கலந்துக் கொண்டார்கள்.

52. புத்தரின் உபதேசங்கள் விநய பீடகம் மற்றும் தம்ம பீடகம் என்ற இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.

53. நய பீடகத்தை தொகுத்தவர்: ஆனந்தா (Ananda)

54. இம்மாநாட்டை தலைமை ஏற்று நடத்தியவர் மகாகஸ்பா  (Mahakasspa)

 

இரண்டாவது புத்த மாநாடு:

55. சுமார் கி.மு. 387 அல்லது 383ல் வைசாலி என்ற இடத்தில் நடைபெற்றது.

56. ஐவசாலியில் வாழ்ந்த புத்த பிக்குகள் விநய பீடகத்தில் இருந்து மாறுபட்டனர்.

57. பழைமைவாதி பிக்குகள்: ஸ்தவீர் (Sthaviras) என்றும் சீர்திருத்தவாதிகள் மகாசமிகா (Mahasamhikas) என்றும் அழைக்கப்பட்டார்கள்.

மூன்றாவது புத்த மாநாடு:

58. சுமார் கி.மு. 250ல் பாடலிபுத்திரத்தில் அசோகர் காலத்தில் நடைபெற்றது.

59. இம்மாநாட்டை தலைமை ஏற்று நடத்தியவர் மொகாலி புத்த திசா

60. இம்மாநாட்டில் அபிதம்ம பீடகம் என்ற மூன்றவாது பீடகம் உருவாக்கப்பட்டது

நான்காவது புத்த மாநாடு:

61. கனிஷகர் காலத்தில் காஷ்மீரம் () ஜலந்தரில் நடைபெற்றது

62. வாசுமித்ரா மற்றும் அசுவகோஷ் (horses that listen to Bodhisattva) ஆகியோர் தலைமை ஏற்றார்கள்.

63. மூன்று பீடகங்களுக்கு விளக்க உரையாக விபஷாக்கள் இயற்றப்பட்டது

64. 5வது மற்றும் 6வது மாநாடு: ஹர்ஷர் காலத்தில் கன்னோசி மற்றும் அலகாபாத்தில் நடைபெற்றது

மூன்று கொள்கைகள்:

65. புத்தம் 2. தர்மம் 3. சங்கம்

66. புத்த சமயக் கொள்கைகள்

67. மனித வாழ்க்கை துன்பம் நிறைந்தது

68. துன்பத்திற்கு காரணம் ஆசை

69. துன்பத்தினை நீக்க ஆசையை ஒழிக்க வேண்டும்.

70. ஆசையை அடக்க 8 வகை பாதை

 

71. எண்வழிப் பாதை

a. நன்னம்பிக்கைசம்யக் திருஷ்டி

b. நல்லெண்ணம் - சம்யக் சங்கல்பம்

c. நல்வாக்குசம்யக் வாக்கு

d. நற்செயல் - சம்யக் கர்மம்

e. நல்வாழ்வுசம்யக் அஜூவம்

f. நன்முயற்சிசம்யக் வியாயாமம்

g. நற்சிந்தனைசம்யக் ஸ்மிருதி

h. நற்றியானம் - சம்யக் சமாதி

72. அவர் முதலில் குறிப்பிட்டது தர்ம சக்கர பரிவாத்த்தனே என்ற வாசகம் ஆகும்

73. கர்மா உண்டு

74. முதல் குரு: ஆராதகலாமா

75. நான்கு உண்மைகள் (அல்லது) ஆரிய சத்தியங்கள். (துக்கா, சமுதாய, நிரோலா, மார்க்கா)

76. புத்த மத நூல்கள் பாலி மொழியில் ஏழுதப்பட்டவை

77. மகாவசம்சம், தீப வம்சம் ஆகியவை இலங்கையில் உள்ள புத்த நூல்கள்

78. புத்த மத அறிஞர் நாகர்ஜூனா doctrine of Shunyata கோட்பாட்டை விளக்கியுள்ளார்.

79. புத்த மத பிரிவுகள்

80. மகாயானம் - புதியவர்கள்

81. ஹினாயானம் - பழைமைவாதிகள்

82. நிர்வாணத்தைஅடைய புத்தர் கூறிய மூன்று வழிகள்:

83. தன்னைத்தானே வருத்திக் கொண்டு தானே நிர்வாணம் அடைதல் (Buddha Yana)

84. மற்றவர்களுக்கு உதவி செய்து தன்னை வருத்தி நிர்வாணம் அடைதல் ; (Pratyaka)

85. மற்றவர்களுக்கு உதவி செய்து, பிறருக்காக வாழ்ந்து தன்னை வருத்தி நிர்வாணம் அடைதல் (Buddha Yana)

86. புத்தமதத்தைப் பின்பற்றுபவர்கள் போதிச் சத்துவர்கள் எனப்பட்டார்கள்

87. உலகம் எங்கும் பரவியுள்ளது மகாயானம்

88. மகாயானத்தை வளர்த்தவர் : கனிஷ்கர்

89. ஹீனயானத்தை வளர்த்தவர்: அசோகர்

90. புத்தர் இறக்கும் போது மகத மன்னர் அஜாதசத்துரு.

91. புத்த சரிதம்: அஸ்வகோஷர் என்பவரால் இந்நூல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது