Type Here to Get Search Results !

வரலாறு | Part - 5 | 80 Questions

History in Tamil  | Part - 5

சமணர்கள் - ஜீனர்கள்

1. சமணர்கள் என்றால் சென்றவர்கள் என்பது பொருள்

2. சமண மதத்தில் மொத்தம் 24 தீர்ததங்கரர்கள் இருந்தனர். அவர்களின் விவரம் பின்வருமாறு:

3. முதலாவது தீர்த்தங்கரர் ரிஷிப தேவர்

4. இவர் பரதன் எனப்படும் (இந்தியாவின் முதல் மன்னர்) மன்னரின் தந்தை என்று கூறுவர் இவரைப்பற்றிய குறிப்புகள் விஷ்ணுபுராணம் மற்றும் பாகவதர் புராணத்தில் காணப்படுகிறது.

5. ஆஜிதா

6. சாம்பவா

7. அபிநந்தனா

8. சாந்தி

9. 22வது தீர்த்தங்கரர் - அரிஷ்டநேமி

10. 23வது தீர்த்தங்கரர் - பர்சவ நாதர்

11. 24வது தீர்த்தங்கரர் - மகாவீரர்

12. தீர்த்தங்கரர் என்ற சொல்லுக்கு வாழ்க்கை என்னும் பிறவிப் பெருங்கடலை கடப்பதற்கு பாதை அமைத்தவர் என்று பொருள்

பார்சவநாதர்:

1. தந்தை - அசுவசேனர்

2. தாய் - வாமதேவி

3. மனைவி - பிரபாவதி

4. வம்சம் - நாக வம்சம்

5. மரணம் அடைந்த இடம் - மவுண்ட் சுமந்தா

6. ஆதார நூல் - கல்பகூத்திரம்

7. இவரை பின்பற்றியவர்கள் சுவேதாம்பரர்கள் எனப்பட்டனர். இவர்கள் இரண்டு வெள்ளையாடை அணிந்து இருந்தனர்

பர்வசநாதரின் கொள்கைகள்:

1. தீங்கு செய்யாது இருத்தல் (அகிம்சா)

2. உண்மை பேசுதல் (சத்தியா)

3. பற்றற்று இருத்தல் (அபரிகிருஹா)

4. திருடாது விலகி இருத்தல் (அய்தய)

5. இவற்றுடன் மகாவீர் தனது கொள்கையாக பிரம்மசர்யத்தை சேர்த்துக் கொண்டார்

மகாவீரர்

1. மகாவீரரின் தந்தைசித்தார்த்தா, குந்தபுரத் தலைவர்

2. இயற்பெயர் - வர்த்தமானர்

3. தாய் - திரிசலை வைசாலி அருகில் குந்த கிராமம்

4. பிறந்த ஆண்டுகி. மு. 539

5. மனைவியசோதா

6. மகள் பெயர் - அனோஜா

7. சகோதரர் நந்தி வர்த்தநனார்

8. ஞானம் பெற்ற இடம் - ரிஜீபாலிகா

9. உயிர்நீத்த இடம் - பாவா

10. கோசாலர் என்னும் துறவியுடன் முதலில் இருந்தார். பின் மகாவீரர் தனியே பிரிந்து சென்றார். கோசாலர் ஆஜீவகர் என்ற சமயப்பிரிவை உருவாக்கினர்.

11. மகாவீரர் ஜிரும்பிகா கிராமத்தில் உள்ள ரிஜீபாலிகா நதிக்கரையில் ஒரு பழைய கோவில் அருகில் உள்ள சால்மரத்தடியில் கேவலஞானம் (Kevala Jnana) பெற்றார்.

12. இவருக்கு வழங்கிய பிற பெயர்கள் : 1. கைவல்யர் 2. மகாவீரார் 3. ஜைனர் 4. நிர்க்கிரந்தர்

13. சமண முனிகள் நேமசந்திரன் கணக்குப்படி மகாவீரர் கி. மு. 468ல் இறந்தார்.

14. இவர் பிரம்மச்சரியத்தை போதித்தார்.

கொள்கைகள்:

1. கடவுள் இல்லை

2. உலகம் தாமாகவே இயங்கி வருகிறது.

3. கர்ம கோட்பாடு உண்டு

4. எல்லா பொருள்களுக்கும் உயிர் மற்றும் ஆன்மா உண்டு

5. அநோகாந்தவாத  (Many – sidedness of reality) கோட்பாட்டினை விவாதிப்பது சமண மதம் ஆகும்.

6. தீவிர அகிம்சை கொள்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

7. அங்காக்கள் உருவாக்கப்பட்டது

8. 11 சங்கங்கள் அமைக்கப்பட்டது

9. சங்கத் தலைவர்கள் கணதாரர்கள் எனப்பட்டனர்

10. கோடிய பஞ்சத்தால் பத்திராகு தலைமையில் (திகம்பரர்கள்) சந்திர குப்த மௌரியர் மற்றும் பல சமண துறவிகள் தெற்கில் உள்ள மைசூர் சிரவணபெலகோலா என்னுமிடத்திற்கு சென்றார்

11. அங்கு சந்திர குப்தர் உயிர் நீத்தார்

12. பஞ்சம் நீங்கியதும் சமணர்கள் வடக்கு திரும்பினர்

13. இவர்களை வடக்கு சமணர்கள் (சுவேதாம்பரர்கள்) ஏற்றுக் கொள்ளவில்லை

14. வடக்கு சமணர்களின் தலைவர்: ஸ்தூல பத்திரர்

15. இம்மதத்தை ஆதரித்தவர்கள்: அஜர்தசத்ரு, காரவேலன், பல்லவர்கள், சாளுக்கியர்கள், கங்கர்கள், ராஷ்டிர கூடர்கள்

16. சமண மதத்தை பின்பற்றிய பல்லவமன்னன் முதலாம் மகேந்திரன்

17. முதலாவது சமண மாநாடு: கி. பி. 3ஆம் நூற்றாண்டு

18. பாடலிபுத்திரத்தில் நடைபெற்றது

19. தலைமை: ஸ்தூலபத்திரர்

20. இங்கு 14 பூர்வாக்களுகு;கு பதில் 12 அங்காக்கள் உருவாக்கப்பட்டது.

21. இரண்டாவது சமண மாநாடு: கி. பி. 5ஆம் நூற்றாண்டு

22. வல்லபி நகரில் நடைபெற்றது

23. இதற்கு தலைமை ஏற்றவர்: கஷ்மஸ்மணா

24. சமண கருத்துக்கள் பரப்பப்பட்ட மொழி: அர்த்தமகந்தி

25. சமணர்களின் கோவில்களை அழித்து: அலாவுதீன் கில்ஜி

 

1. மூன்று இரத்தினங்கள்:

a. நன்னடத்தை (Samyak Charitra)

b. நம்பிக்கை (Samyak Darshan)

c. நல்லறிவு (Samyak dnayan)

2. நல்லறிவு 5 வகைப்படும். அவை: 1. மதி 2. ஸ்ருதி 3. ஆவதி 4. மானாபிரேயே 5. கேவல்

3. மூன்று இரத்தினங்களை கடைபிடிப்பதால்சித்திசீலஎன்ற நிலை உண்டாகும்.

4. முக்கிய பிரிவுகள்

5. திகம்பரர்கள் ஆகாயத்தை உடையாக அணிந்தவர்கள் நிர்வாண சமணர்கள்

6. சுவேதம்பரர்கள் வெள்ளை உடை அணிந்தவர்கள்

7. சமணர்களின் நூல்களில் தொகுப்பிற்கு ஆக சித்தாந்தங்கள் என்று பெயர். இதனை 14 பூர்வாங்கள் என்பர்.

8. இதனை தொகுத்தவர்: பத்திரபாகு

9. நிபந்தனைகளுடன் கூடிய தற்கொலை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

10. சமணக் கோயில்கள் உள்ள இடங்கள்:

11. மவுண்ட் அபு 2. எல்லோரா 3. ஊதயகிரி 4. சிரவணபெலகோலா

12. இராஜஸ்தானில் உள்ள மவுண்ட அபு அலையில் உள்ள தில்வாரா, கஜீராஹோ, சித்தூர், ரானக்பூர், ஆகிய இடஙக்ளில் உள்ள கோவில்கள், உதயகிரி, ஹதிகும்பா, எல்லோரா மற்றும் கிர்னாவில் உள்ள சிற்பங்கள், கர்நாடகத்தில் மைசூருக்கு அருகே உள்ள சிரவணபெலகோலா என்னும் இடத்தில் உள்ள கோமதீஸ்வரர் சிலை போன்றவை சமணர்களின் கலை திறனுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.

13. மொகாலிபுத்ரா (கோசலர்) என்பவரால் துவக்பப்பட்டது.

14. புத்த மதம் மற்றும் சமண மதத்தை போன்றே இம்மதமும் ஏற்பட்டது.

15. அசோகரின் கற்பாறைகளில் இது குறித்த குறிப்புகள் காணப்படுகிறது

16. பராபரர் குகைகள் ஆஜிவகா மதத்திற்காக அசோகரால் ஒதுக்கப்பட்டது.

17. முழு நிர்வாணத்தையும், கடுமையான ஒழுக்கத்தையும் இம்மதம் போதித்தது.