Type Here to Get Search Results !

வரலாறு | Part - 9 | 55 Questions

 History in Tamil | Part - 9

சுங்க வம்சம் கி.மு. 186 - 76

1. சுங்கர்களைப் பற்றி அறிய உதவும் சான்றுகள் காளிதாசரின் மாளவிகாக்னிமித்ரம், பாணரின் ஹர்ஷசரிதம், பதஞ்சலியின் மகா பாஷ்யம் ஆகும்.

2. மௌரிய வம்சத்தின் கடைசி மன்னர் பிருகரத்தாராவை அவரது அமைச்சர் புஷ்ய மித்ரா கொன்று சுங்க வம்சத்தை நிறுவினார். இவர்கள் பாரத்வாஜ கோத்திரத்தைச் சார்ந்த பிராமணர்கள் ஆவர்.

3. இவர்களின் தலைநகரம் பாடலிபுத்திரம்

4. புஷ்ய மித்திரர்: விதர்ப்ப நாட்டுடன் போரிட்டு வெற்றி பெற்று அசுவமேத யாகம் செய்தார். காரவேலரிடம் இருமுறை போரிட்டு தோற்றார்.

5. இந்து மதம் தழைத்தது. களிமண்ணால் அசோகர் கட்டிய சாஞ்சி ஸ்தூபியை கருங்கற்கள் கொண்டு புஷ்ய மித்திரர் அமைத்தார். இவருக்குப்பின் இவரது மகன் அக்னிமித்திரர் ஆட்சிக்கு வந்தார்.

6. கலை, சமயம் ஆகியவை தழைத்தோங்கியதால் இவர்கள் குப்தர்களின் பொற்கால ஆட்சிக்கு வித்திட்டனர்.

7. சுங்கர்கள் கிரேக்க படையெடுப்பை தடுத்து நிறுத்தியது முக்கியமான ஒன்றாகும்.

8. சுங்க வம்சத்தின் கடைசி மன்னன் தேவபூட்டி. இவரை இவரது அமைச்சர் வாசுதேவகண்வா கொன்றார்.

கண்வர்கள் கி.மு.76-31

வாசுதேவரே கண்வர் வம்சத்தை தோற்றுவித்தவர்கள்

கலிங்க வம்சம்

1. கலிங்க வம்சத்தின் மிகச் சிறந்த மன்னன் காரவேலா

2. முகதம், சாதவாகனர்கள் மற்றும் தெற்கே கோதாவரிக்கு பிறகும் வெற்றி பெற்றார்.

3. காரவேலனின் வெற்றியை அறிய உதவும் கல்வெட்டு அதிகும்பா கல்வெட்டு ஆகும்.

சாகர்கள் கி.மு. 20 - கி.பி. 22

சாகர்களின் முதல் மன்னர் மௌஸ் பர்னஸ்

 

பார்த்தியர்கள் கி.மு. 20 - கி.பி.22

1. குஷாணர்கள் யூச்சி என்ற சீன மரபின் ஒரு கிளை மரபினைச் சார்ந்தவர்கள்

2. குயீ ஷாவ்ஸ் என்பதே பின்னர் குஷாண் என்று அழைக்கப்பட்டது

3. வடமேற்கில் உள்ள பார்த்தீயர்களை இவர்கள் அப்புறப்படுத்தினர்

4. குஷான வம்சத்தின் முதல் அரசர் குஜிலா  கட்பீஸஸ் அல்லது முதலாம் கட்பீஸஸ்

5. இவர்களின் தலைநகர்: பெஷாவர் எனப்படும் புருஷாபுரம்

6. இவர் உரோமானரியர்களுடன் தொடர்பு வைத்திருந்தார்

7. இவர் நாணயங்கள் வெளியிட்டார். அவை அகஸ்டஸ், மற்றும் டைபீரியஸ் ஆகியோரின் நாணயங்களை ஒத்திருந்தன.

குஜீலா கட் பீஸஸ்: கி.மு. 15 – கி.பி. 65 வரை

8. இவர் முதலாம் கட்பீஸஸ் என்று அழைக்கப்படுவர்

9. பார்த்திபர்களை தோற்கடித்து ஜீலம் நதிக்கரை வரை ஆட்சியை அமைத்தார்.

வீமான கட் பீஸஸ்: கி.பி. 64 – 78 வரை

10. சீனாவுடன் போரிட்டு தோற்றார். இவர் காலத்தில் சீன மற்றும் உரோமானியர்களுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தார்.

11. இவர் காலத்தில் உரோமிலிருந்து ஏராளமான தங்க நாணயம் இந்தியா கொண்டு வரப்பட்டது.

12. இவர் கிழக்கில் மதுரா வரை ஆட்சி செய்தார்

13. இவர் சைவத்தை சார்ந்தவர். இவரது நாணயங்கள் மீது சிவன், சிவனது எருது மற்றும் சூலம் ஆகியவை காணப்படுகிறது.

14. இவரின் பட்டப்பெயர்கள் மகாராஜா, ராஜாதிராஜா, சர்வரோக ஈஸ்வரர், மஹீவாரராஜா

கனிஷ்கர்: கி.பி. 78 – 102 வரை

15. குஷான வம்சத்தின் சிறந்த அரசர் முதலாம் கனிஷ்கர்.

16. இவர் காஷ்மீரை கைப்பற்றி தனது வெற்றியின் நினைவாக கனிஷ்க புரம் என்ற ஓர் நகரை நிறுவினார்.

17. கனிஷ்கர் புத்த சமயத்தை பின்பற்றினார்.

18. இவர் 4-வது புத்த மாநாட்டினை குண்டல்  வான (ஸ்ரீநகர்) எனுமிடத்தில் கூட்டினார்.

19. பாடலிபுத்திரத்தை வென்றார். அங்கு இருந்த அசுவகோஷரரை தம்முடன் அழைத்துக் கொண்டார்.

20. சீனாவுடன் இருமுறை போரிட்டார். முதல் முறை தோல்வியடைந்தார்.

21. கனிஷ்கர் சீனாவுடன் போரிட்டு வென்ற பகுதிகள்: காஷ்கர், யார்ககண்டு கோடான்

22. புத்த சரிதம் என்ற நூலைஅசுவகோஷாஎன்பவர் எழுதியுள்ளார்

23. அசுவகோஷரை கீழைநாட்டின் அரிஸ்டாடில் என்று கூறுவர்.

24. மிகச் சிறந்த அறிவியல் தத்துவ ஞானி நாகார்ஜீன. இந்தியாவின்ஐன்ஸ்டீன்என்பர்

25. சரகா என்ற மருத்துவ அறிஞர். சுஸ்ருதா மற்றும் சரக சம்ஹிதை ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

26. கனிஷ்கரை இரண்டாம் அசோகர் என்று கூறுவர்.

27. சீனாவில் புத்த மதத்தை அறிமுகப்படுத்தியவர் காச்சியப்ப மாதங்கர்

28. கனிஷ்கர் புத்த வரலாறு,  சூத்திர அலங்காரம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்

நாகார்ஜீனர்:

29. கனிஷ்கரை புத்த மதத்திற்கு மாற்றியவர் நாகார்ஜீனர் (காஞ்சி), இவர் மகாயானத்திற்கு ஆதரவு அளித்து சமஸ்கிருத மொழிக்கு ஆதரவு அளித்தார்.

30. இதனால் நாகாத்ஜீனர் புத்த சமயத்தின் மார்டின்லுதர் என்பவர். இவர் எழுதிய நூல் மத்திய மிக சூத்திரம்.

31. யுவான் சுவாங் நாகார்ஜீனரை உலக மாமேதை எனக் குறிப்பிடுகின்றார்.

32. வாசு மித்ரா: மகா விபேஷ சூத்திரம் என்ற நூலை எழுதினார். இந்நூல் மகாயானத்திற்கு விளக்கம் அளித்தது. மேலும் சௌந்தர நந்தம் என்ற நூலையும் சரிபுத்திர பிரகர்ணம் என்ற நாடகத்தையும் எழுதியுள்ளார்.

காந்தாரக்கலை:

33. கனிஷ்கர் காலத்தில் மதுரா மற்றும் காந்தாரக் கலை மிகவும் சிறப்பாக வளர்ச்சியுற்றது. இந்திய கிரேக்கம் சேர்ந்த சிற்ப கலையே காந்தாரக் கலை.

34. மகாயான புத்த சமயத்தின் வளர்ச்சியே காந்தாரக் கலை வளரக் காரணமாகும்

35. இது கனிஷ்கர் காலத்தில் உச்ச நிலையை அடைந்தது

புத்தர் சிலையும் காந்தாரக் கலையும்:

36. புத்தருக்கு பின்னால் ஞான வட்டம் காணப்பட்டது. நிற்கும் வடிவத்தில் போதிசத்துவத்தை விளக்கும் கிரேக்க பாணியில் உடை, புத்தருக்கு மீசை ஆகியவை முக்கிய அம்சங்களாகும்.

சகா சகாப்தம்

37. கி.பி. 78-ம் ஆண்டு சகா சகாப்தம் அல்லது சாலிவாகன சகாப்தம் எனப்படும்

38. முதல் பொற்காசுகளை வெளியிட்டவர்கள் குஷானர்களே

குஷானர்களின் வீழ்ச்சி

39. கனிஷகரின் வழித் தோன்றல்களில் முக்கியமானவர் முதலாம் வாசுதேவர் ஆவார்.

40. வடமேற்கில் பாரசீக சசானியரின் ஆட்சி குஷானர்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும்