Type Here to Get Search Results !

வரலாறு | Part - 10 |112 Questions

 History in Tamil | Part - 10

குப்தர்கள் காலம் கி.பி. 270 முதல் 570 வரை

சான்றுகள்:

1. இலக்கிய சான்று

2. வாயு புராணம்

3. மச்ச புராணம்

4. பிரம்மாண்ட புராணம்

5. சிகநார் எழுதிய காமந்தகீய சாரம்

6. விசாகதத்தர் எழுதிய தேவி சந்திரகுப்தம் மற்றும் முத்திரா ராட்சசம்

7. பிரவர சேனர் எழுதிய சேது பந்தன காவியம்

8. பாணர் எழுதிய அர்ஷ சரிதம்

9. காளிதாசர் எழுதிய ருது சம்காரம், மாளவிகனி மித்திரம், குமார சம்பவம், சாகுந்தலம், மேகதூதம், ரகுவம்சம்

10. கிசோரிகரா மற்றும் விஜ்ஜிகரா எழுதிய கௌமுதி மகோத்வசம்

11. நாரதர், பிரகஸ்பதி ஆகியோர் எழுதிய ஸ்மிதிகள்

12. சேம தேவர் எழுதிய காத்தசரித சாகர்

13. சுதாகரா எழுதிய மிருச்சகடிதம்

வியாசர், ஹரிதர் மற்றும் பிதாமகர் எழுதிய நூல்கள்

14. இலங்கை நூல்கள் தீப வம்சம் மற்றும் மகா வம்சம்

15. தேவி சந்திரகுப்தம்: இராம குப்தர் மற்றும் இரண்டாம் சந்திரகுப்தர் ஆகியோருக்கிடையே நடைபெற்ற அரசியல் போராட்டத்தை விளக்குகிறது.

அயல் நாட்டவர் குறிப்புகள்:

16. சீன பயணிகளின் குறிப்புகள்:

17. பாகியான் எழுதிய போ-குயோ-கி (Fo-Kuo-Ki)

18. இட் சிங்

19. யுவான் சுவாங்

20. வாங்-யுயின்-சே

கல்வெட்டுகள்:

21. சமுத்திர குப்தரின் அலகாபாத் கல்வெட்டுகள்.

22. இரண்டாம் சந்திரகுப்தரின் உதயகிரி மற்றும் காஞ்சிக் கல்வெட்டுகள்

23. முதலாம் குமார குப்தரின் ஆட்சியை விளக்கும் பில்சாட் கல்தூண் கல்வெட்டு, கத்வா கல்தூண் கல்வெட்டு,  மங்குவார் கல்வெட்டு, பீதார் தூண் கல்வெட்டு, இந்தூர் தாமிர சாசனம் மற்றும் மெஹரெளி இரும்புத்தூண் கல்வெட்டு

நாணயங்கள்

24. சந்திர குப்தர் மற்றும் சமுத்திர குப்தரின் நாணயங்கள். சந்திர குப்தர் வீணை வாசிப்பது போன்ற நாணயங்கள்

25. உருவச்சிலைகள் மற்றும் ஓவியங்கள்

26. குப்தர் காலத்தைச் சார்ந்த அஜந்தா ஓவியங்கள்

குப்த அரசு: கி.ஃபி. - 270

27. குப்த வம்சத்தின் முதல் அரசர் : ஸ்ரீகுப்தர்

28. இவர் வடக்கு வங்காளம் மற்றும் தெற்கு பீகார் பகுதியை ஆண்டதாக தெரியவருகிறது.

29. பின் இவரது மகன் கடோதகஜ குப்தா ஆட்சி செய்தார்

30. இவருக்குப்பின் இவரது மகன் முதலாம் சந்திர குப்தர் ஆட்சி செய்தார்

31. தலைநகரம்: பாடலிபுத்திரம்

முதலாம் சந்திரகுப்தர்:

32. மகாராஜாதிராஜா என்ற பட்டம் முதன் முதலாக பெற்றவர்

33. குப்த சகாப்தத்தை கி. பி. 320ல் தோற்றுவித்தவர்.

34. மனைவி: சைவாலியைச் சார்ந்த லிச்சாவி இளவரசியான குமாரதேவி

35. மனைவியுடன் இணைந்து தங்க நாணயங்களை வெளியிட்டார்

சமுத்திர குப்தர்

36. கி. பி. 330 முதல் 380 வரை ஆட்சி செய்தார்.

சான்றுகள்:

37. ஏரான் செப்பேடு, கயைச் செப்பேடு, நாளந்தா செப்பேடு

38. தந்திரிகா மண்டகம் என்ற நூல்

39. வாங் - ஹியூன் - சே என்ற சீன பயணி குறிப்புகள்

40. ஹரி சேனரின் அலகாபாத் தூண் கல்வெட்டு

இவரது படைப்பு 5 வகைகளாக பிரிக்கலாம்

41. ஆரிய வர்த்தத்தின் இருந்த 5 அரசுகளை கைப்பற்றுதல்

42. 5 எல்லைப்புற மாகாணங்கள்

43. மத்திய இந்தியாவின் பழங்குடிகள்

44. தக்காணம் மற்றும் தெற்கு இந்தியாவில் அரசுகள்

45. ஆப்கானிஸ்தானின் ஒரு சிலப் பகுதிகள்

தோற்ற அரசர்கள்:

46. கைப்பற்றி 5 எல்லைப்புற அரசுகள்: 1. சாமதாதா 2. தாவகா 3. காமரூபா 4. நேபாளம் 5. கர்த்திபுரா

47. மத்திய இந்தியாவின் 9 பழங்குடிகள்: 1. அபிராஸ் 2. காகாஸ் 3. கரபரிகாஸ் 4. அர்சுனநாயகஸ் 5. மார்வாஸ் 6. மாட்ரகாஸ் 7. பிரார்ஜீனாஸ் 8. சானகனிகாஸ் 9. யௌதேயாஸ்

48. தக்காணத்தில் தோற்ற 12 அரசர்கள்:

i. கோசல நாடுமகேந்திரன்

ii. காந்தார நாடுவியாக்கிரகராஜன்

iii. கௌராலா - மாந்த ராஜா

iv. காஞ்சி - விஷ்ணு கோப்பர்

v. வெஞ்சி - அஸ்திவர்மர்

vi. பித்தாபுரம் - மகேந்திரகிரி

vii. குஷ்ந்தலபுரம் - தனஞ்செயன்

viii. பல்லக்க நாடுஉக்கிரசேனன்

ix. கோட்டூரா - சுவாமித்தர்

x. ஏரண்டபல்லவம் - தாமனர்

xi. அவமுத்தம் - நீலராஜா

xii. தேவராஷ்டிரம்குபேரம்

 

49. அலகாபாத் தூண் கல்வெட்டுஅரிசேகர்

50. அசுவ மேத யாகம் செய்தார்

51. நாணயங்களில் இவர் ஆயுதங்களுடனும், புலியுடனும் போராடுவது போன்று வெளியிட்டார்.

52. இவர் போர்புரிவதில் திறமையுடையவர். எனவே டாக்டர் வின்செண்ட ஸ்மித் இவரை இந்திய நெப்போலியன் என்று கூறியுள்ளார்.

53. தங்க நாணயங்களை வெளியிட்டார்

54. விக்கிரமாங்கா என்ற பட்டத்தினை பெற்றார்

55. ஈழ மன்ன் மேகவர்ணன் கேட்டவாறு கயையில் புத்த மடாலயம் கட்டினார். இதனால் அனுகம்பவன் என்று அழைக்கப்பட்டார்.

56. கவிராசா என்று அழைக்கப்பட்டார்;

57. இவரது சபையினை அரிசேனர் மற்றும் வசுபந்து அலங்கரித்தனர்

58. வசுபந்து இவரின் ஆசிரியர் ஆவார்

59. குப்தர் கால இலக்கியம் இந்தியாவின் எலிசபெத் காலம் என்று கூறுவர். குப்தர்களின் காலம் பிராமணர்களின் காலம் என்றும் கூறுவர். குப்தர்களின் காலம் பிராமணர்களின் காலம் என்றும் இந்து மத மறுமலர்ச்சி காலம் என்றும் இந்து மத மறுமலர்ச்சி காலம் என்பதால் இதனை பொற்காலம் என்று கூறுவர்.

இரண்டாம் சந்திரகுப்தர் (கி.பி.380-413)

60. இவர் விக்கிரமாதித்தியன் என்ற பெயருடன் அரியணை ஏறினார்

61. ஐரோப்பிய வரலாற்றில் Bourbous மற்றும் Hapsburqs போன்று திருமணங்கள் மூலம் உறவை வளர்த்துக் கொண்டார்

62. லிச்சாவி குலத்தில் கொண்ட தொடர்பு, நாகர்களின் மகள் குபேர் நாகையுடன் திருமணம், தனது மகள் பிரபாவதியை இரண்டாம் உருத்திரசேனனுக்கு திருமணம் செய்து வைத்தல் ஆகியவை முக்கிய நிகழ்ச்சியாகும்

63. சீன யாத்திரியர் பாகியான் இவர் காலத்தில் இந்தியாவிற்கு வந்தார்

64. உஜ்ஜயினியை இரண்டாவது தலைநகராக மாற்றினார்

65. குதுப்மினாருக்கு அருகில் உள்ள இரும்புத் தூண் இவர் நிறுவியது ஆகும்

66. சகர்களை வென்றதால் சாகாரி,  சசாங்கன் என்ற பெயர்கள் இவருக்கு உண்டு

67. சிங்கத்தை வீழ்த்துவது, குதிரையில் சவாரி செய்வது, கருடன் பறப்பது, கொற்றக் குகையின் கீழ் நிற்வது, திருமால் வாழ்த்துவது போன்ற நாணயங்களை வெளியிட்டார்.

68. இவர் காலத்தில் நவரத்தினங்கள் எனப்படும் அவை இருந்தது. அதன் விவரங்கள் பின்வருமாறு.

i. தன்வந்திரி: மருத்துவ நிபுணர்

ii. Kshapanaka

iii. அமரகோஷம் எழுதிய அமர சிம்மர்

iv. சாங்க பட்டர்

v. வேதல்ல பட்டர்.

vi. குதகபாரா

vii. வராகமிகிரா:

69. இவர் சிறந்த வானவியல் அறிஞர், கணிதவியல் மற்றும் சோதிட வல்லுநர், நவரத்தினங்களில் ஒருவர், பிரகத்சம்கிதா, பஞ்ச சித்தாந்திகா, லங்குஞாடகா ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

இவர் காலத்தில் 5 சித்தாந்தங்கள் இருந்தன. அவை

70. சூரிய சித்தாந்தா: பெருங்கரடி எனப்படும் நட்சத்திரக் கூட்டத்தை பற்றியதாகும். இதனை தொகுத்தவர் லிமா

71. வைசோஷித சித்தாந்தா: பெருங்கரடி எனப்படும் நட்சத்திரக் கூட்டத்தை பற்றியதாகும். இதனை தொகுத்தவர் விஷ்ணுகாந்தா

72. புலிச சித்தாந்தா: இது கிரேக்க நாட்டில் உள்ளது. இதனை தொகுத்தவர் புலிச

73. ரேமகா சித்தாந்தா: ரோமனிய அரசைப் பற்றியது இதனைத் தொகுத்தவர் ஷர்ஷிகா.

74. பிரம்ம சித்தாந்தா: பிரம்ம குப்தர் என்பவரால் தொகுக்கப்பட்டது.

75. இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் அவைப் புலவராக காளிதாசர் இருந்தார்

76. காளிதாசர் எழுதிய நாடகங்கள்:

a. மாளவிகாக்கினி மித்திரம் - சுங்க அரசர் வரலாறு

b. சாகுந்தலம் - நாடகம்

c. விக்ரம ஊர்வசிநாடகம்

77. காளிதாசர் எழுதிய காப்பியங்கள்:

a. ரகுவம்சம் - ராமர் வரலாறு

b. குமாரசம்பவம் - முருகன் வரலாறு

78. காளிதாசர் எழுதிய பாடல்கள்:

a. மேக தூதம்

b. ரிது சம்சாரம் - பருவ கால மாற்றம்

c. இவர் இந்தியாவின் ஷேக்ஸ்பியர் என்று அழைக்கப்பட்டார்

d. அஜந்தா ஓவியம், தமிழ்நாட்டில் உள்ள சித்தன்ன வாசல் ஓவியம் குப்ர் காலத்தை சேர்ந்தவை

 

79. பாகியான்

a. புத்த நூல்களை சேகரிக்கவும், புத்த விகாரங்களை பார்வையிடவும் இந்தியாவிற்கு வந்தார்.

80. ஆரியப்பட்டா

a. குப்தர்களின் ஆட்சி முடிவுற்ற பொழுது வாழ்ந்தார்

b. சிறந்த கணித மேதை

c. சிறந்த வான நூலறிஞர்

d. கூரிய சித்தாந்தா என்ற நூலை எழுதினார்

e. பூமி தன்னைத்தானே சுற்றி கொள்கிறது என்று கண்டுபிடித்தவர்

f. அரிசேனாசிறந்த கவிஞர்

குமார குப்தர்

81. நாலந்தா பல்கலைக் கழகத்தை தோற்றுவித்தவர்.

முக்கிய நூல்கள்:

82. விசாக தத்தர்: முத்ரா ராக்டியம் (மௌரியர், நந்தர்கள், போர்கள்), தேவி சந்திர குப்தம் (சந்திர குப்தர் - II துரவ தேவி) வரலாறு

83. சூத்திரகர்: மிருச்சிக கடிதம்

84. பாரவி: கார்த்தார்ஜீனியம்

85. வாத்ஸ்யானர்: காமசூத்திரம்

86. வாகப்பட்டர்: அஷ்டாங்க சங்கிரதம், அஷ்டாங்க கிருதயசம்ஹிதை

87. பஞ்சதந்திர கதைகள் விஷ்ணு சர்மாவினால் தொகுக்கப்பட்டது

88. டெல்லியில் மெஹ்ருலி என்னுமிடத்தில் இரும்புத் தூண் கட்டப்பட்டது

ஸ்கந்த குப்தர்: கி.பி.455 முதல் கி.பி.467 வரை

89. இவர் முதலாம் குமார குப்தரின் மகன்

90. ஹீனர்கள் எனப்படும் முரட்டு இனத்தை வென்று விக்கிரமாதித்யன் என்ற பெயரை சூட்டிக்கொண்டார். இவரைப் பற்றிய தகவல்கள் கதாசரி சாகரம் என்ற நூலில் காணப்படுகிறது.

91. புஷ்யமித்திரர்களை தோற்கடித்தார்

92. வைணவர்

பின் தோன்றல்கள்:

93. கி. பி. 467 கி. பி. 477

94. புருகுப்தர்

95. நரசிம்மகுப்தர்

96. இரண்டாம் குமார குப்தர்

97. கி.பி. 477 – 496 புத குப்தர்

98. கி.பி. 446 – 550 ததாகத குப்தர்

பாலாத்தியர் - நரசிம்மகுப்தர்

99. பாலாத்தியர் மீண்டும் ஹீணர்களை தோற்கடித்தார்.

100. பாலாத்தியர் மற்றும் விஷ்ணு குப்தர்கள் இவருவரும் குப்தர்களின் கடைசி மன்னர்கள்

101. கட்டிட கலையில் முதன்மையாக கருதப்படும் நாகரப் பாணியை அறிமுகப்படுத்தியவர்கள் குப்தர்கள் ஆவார்கள்.

102. அரசரே இராணுவத் தலைவர்

103. அவரின் கீழ் மகாசேனாதிபதி

104. மகா சேனாதிபதியின் கீழ் மகா தண்டநாயர்

105. குதிரைப் படையின் தளபதிஅஸ்வபதி

106. யானைப்படையின் தளபதிபீலுபதி

107. போர்காலத்தில் இராணுவ செலவுகளை கவனிக்க ரணபண்டாரகர்

108. தண்ட பாசிகர் என்பவர் உயர் காவல் அலுவலர்

109. காவல்துறை பணியாளர்கள் பட்டர், சட்டர் எனப்பட்டனர்.

110. வெளியுறவுத் துறை அமைச்சர் மகா சாந்தி விக்கிரதிகர்.

111. வெளிநாடுகளுடன் 16 வகையான உடன்பாடுகள் காணப்பட்டதாக காமந்தகீய நீதி சாரம் என்ற நூல் குறிப்பிடுகிறது.

112. விக்ரமசிலா பல்கலைக்கழகம் தர்மபாலர் என்ற பால அரசரின் ஆதரவுடன் கட்டப்பட்டது. இப் பல்கலைக் கழகம் தாந்ரிக் புத்தமதத்துடன் தொடர்புடையது. இங்கு புகழ் பெற்ற ஆசிரியர்களாக நாகர்ஜீனர் மற்றும் அதிசா தீபங்கர் ஆகியோர் இருந்தனர்.