Type Here to Get Search Results !

வரலாறு | Part - 16 | 110 Questions

 History in Tamil | Part - 16

விஜயநகரப் பேரரசு

1. கி. பி. 1336ல் அரிகரர், புக்கர், கம்பணன், மாரப்பன் மற்றும் முத்தப்பன் ஆகிய 5 சகோதரர்களால் துங்கப்பத்திரையின் வடகரையில் விஜயநகரப் பேரரசு நிறுவப்பெற்றது.

2. முதலாம் புக்கர்:  இளவரசு பட்டம் மேற்கொண்டு அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள குத்தி கோட்டை ஆளுநர்

3. முதலாம் கம்பணன்:  உதயகிரி

4. மாரப்பன்:  கொங்கண நாடு

5. இப்பேரரசு நிறுவ உதவியவர் சிருங்கேரி சங்கரமட ஆசாரியார்,  மாதவாச்சாரியார் அல்லது வித்யாரண்டர் மற்றும் சாயனார் ஆவார்கள்

6. வரலாற்று ஆசிரியர் ஹீராஸ் பாதிரியார் இவர்கள் ஹொல்சல அரச மரபினர் என்று கூறுகிறார்.

7. இப்பேரரசை 1. சங்கம் 2. சலுவ, 3. துளுவ, 4. ஆரவீடு வமிசித்தவர் ஆட்சி புரிந்தனர்

சங்கம வமிச மன்னர்கள்:

8. முதலாம் ஹரிஹரர் 1336 – 1356

9. முதலாம் புக்கர் 1356 – 1377

10. இரண்டாம் ஹரிஹரர் 1377 – 1404

11. விருபாக்ஷார் 1404 – 1405

12. இரண்டாம் புக்கர் 1405 – 1406

13. இரண்டாம் விஜயராயர் 1446 - 1447

14. மல்லிகார்ஜீனன் 1447 – 1465

15. இரண்டாம் விருப்பாக்ஷர் 1465 – 1485

16. பிரவுத ராயர் 148

முதலாம் ஹரிஹரர் (1336 – 1356)

முதலாம் புக்கர் (1356 – 77)

17. தென் இந்தியாவின் மீது படையெடுத்து மதுரை, இராமேஸ்வரம் ஆகிய இடங்களை வென்றதாக கம்பண்ணனின் மனைவி கங்கா தேவி எழுதிய மதுராவிஜயம் என்ற நூல் கூறுகிறது

18. சீனாவிற்கு ஒரு தூதுக்குழு அனுப்பினார்

19. லக்கண்னா என்பவர் தென்கடல் தலைவராக நியமிக்கப்பட்டார்

20. இவர் இம்மாடி தேவராயா,  பிரௌத தேவராய மற்றும் கஜபேடகரா என்றும் அழைக்கப்பட்டார்

இரண்டாம் ஹரிகரர் (1377 – 1404)

21. இவர் மகாராஜாதி ராஜா, ராஜ பரமேஸ்வர் போன்ற பட்டங்களை சூட்டிக் கொண்டார்

22. ரெய்ச்சூர் பகுதியை கைப்பற்ற பாமினி சென்றார். பிருஷ்டாவுடன் போரிட்டு தோற்றார். இலங்கை மீது போரிட்டார்

முதலாம் தேவராயர் (1406 – 1422)

23. வாரங்கல் உதவியுடன் பேரோஸ் ஷா பாமனுடன் போரிட்டு வென்றார்

24. துங்கப்பத்திரா நதியின் மீது அணையைக் கட்டினார்

25. 1420ல் நிக்கோலா கோண்டி, 1443ல் அப்துல் ரசாக் முதலானவர்கள் விஜயநகரம் வருகை புரிந்தனர்

26. இரண்டாம் விஜயராயர் (1446 – 47)

27. மல்லிகார்ஜீனன் (1447 – 65)

இரண்டாம் விருப்பாக்ஷர் (1465 – 1485)

28. திறமையற்ற இவர் காலத்தில் ஒரிசா நட்டு அரசர் புருஷோத்தும் கஜபதி திருவண்ணாமலை வரைச் சென்றார்

29. நரசிம்ம சலுவாட இவர் ஆட்சியை கைப்பற்றினார்

சலுவ வம்ச மன்னர்கள்

30. சலுவ நரசிம்மர் (1485 – 90)

31. திம்ம பூபாலன்

32. நரச நாயக்கர் (1490 – 1503)

33. சலுவ நரசிம்மர் (1485 – 90)

34. தமக்குப்பின் ஆட்சியை தனது தளபதி நரச நாயக்கரிடம் ஒப்படைத்தார்

35. நரச நாயக்கர் (1490 – 1503)

துளுவ வம்ச மன்னர்கள்

a. துளுவ நரச நாயக்கர் - 1491 – 1503

b. அச்சுத தேவ ராயர் - 1529 – 1542

c. சதாசிவ ராயர் - 1542 – 1570

d. வீரநரசிம்மர் - 1503 – 1509

e. கிருஷ்ண தேவராயர் - 1509 – 1529

f. மாமூது ஷாவினால் கைப்பற்றப்பட்ட அடோனி, கர்நூல் ஆகியவற்றை மீண்டும் கைப்பற்றினார்.

கிருஷ்ண தேவராயர் (1509 – 29)

36. துளுவ வம்ச மன்னர்களில் சிறந்தவர் கிருஷ்ண தேவராயர்

37. இவர் வீர நரசிம்மரின் ஒன்றுவிட்ட சகோதரர்

38. 1509ல் கிருஷ்ண தேவராயர் பாமினி சுல்தானை தோல்வியுறச் செய்தார்.

39. 1512ல் ரெய்ச்கூர் தோவாப்,  குல்பர்கா, பீடார் ஆகியவற்றை கைப்பற்றினார்

40. 1512ல் உம்மத்தூர் பாளையக்காரர் கங்கராஜாவுடன் போரிட்டு ஸ்ரீரங்கப்பட்டினம், சிவசமுத்திரம் ஆகியவற்றை கைப்பற்றி ஸ்ரீரங்கப்பட்டினத்தை தலைமையிடமாக ஒரு புதிய மாநிலத்தை உருவாக்கினார்.

41. 1513 – 18 வரை போரிட்டு உதயவீடு மற்றும் கொண்ட வீடு ஆகியவற்றை ஒரிசா மன்னன் கஜபதியிடமிருந்து பறித்தார்

42. தெலுங்கானா அரசன் கூலி குத்துஷாவை வென்று தெலுங்கானா கைப்பற்றப்பட்டது

43. 1520ல் தனது மனைவி நகலா தேவியின் நினைவாக நாகலாபுரி என்ற நகரம் நிறுவப்பட்டது

44. திருவண்ணாமலை, திருப்பதி ஆலயங்கள் கட்டப்பட்டது. „அசாரேஆலயம் சிறப்பான ஆலயம்

45. இவரது அவையை அஷ்திக்கஜங்கள் என கூறப்படும் எட்டு தெலுங்கு கவிஞர்கள் அலங்கரித்தனர்

46. அல்லானி பெத்தண்ணா: தெலுங்கு இயக்கத்தின் தந்தை

47. இவர் மதுசரிதம் என்ற நூலை எழுதியுள்ளார்

48. இதன் மூலம் மக்களின் சமுதாய நிலை அறிய முடிந்தது

49. திம்மண்ணா:  பாரிஜாத் பகர்னமு (தெய்வலோகத்தில் இருந்து பாரிஜாத மலர் கொண்டு வரப்பட்ட கதை)

50. இராமபத்ரா: சகல கதா சங்கிரதம்

51. மல்லண்ணா:  ராசசேகர சரிதம்

52. சூரண்ணா

53. இராம ராஜா பூசனா

54. தேனாலி இராமகிருஷ்ணா

55. கிருஷ்ணதேவராயர்: ஜாம்பவதி கல்யாணம், உஷாபரிணயம் ஆகிய வடமொழி நூல்களை எழுதினார்

56. அமுக்தமால்யதா அல்லது விஷ்ணு சித்தமு என்ற தெலுங்கு நூலையும் இயற்றினார். இதன் மூலம் விஜயநகர அரசின் அரசியல் நிலைமை அறியமுடிகிறது

57. அவர் போர்ச்சுகீசியருடன் நட்புறவு கொண்டிருந்தார். அவர்களிடமிருந்து குதிரைகளை பெற்றார்.

தலைக்கோட்டைப் போர் - 1565

58. இப்போரில் ஐந்து தக்காணச் சுல்தான்கள் ஒன்று சேர்ந்து விஜய நகரப் படைகளை 1565ல் தலைக்கோட்டை என்னும் இடத்தில் தோற்கடித்தது

59. இரண்டாம் தேவராயருக்குப் பின் பாமினி சுல்தான்கள் மற்றும் ஒரிசா மன்னர் கஜபதி ஆகியோர் விஜயநகர அரச கைப்பற்றியதை கங்கதாச பிரதாப விலாசம் என்ற நாடக நூல் விவரிக்கின்றது. இதனை எழுதியவர்: கங்காதரன்

60. விஜய நகர பேரரசின் அழிவுச் சின்னங்கள் கிடைக்குமிடம் ஹம்பி

ஆரவீடு வம்சம்

61. ராம ராயர் 1542 – 1565

62. திருமலை தேவராயர் 1565 – 1572

63. முதலாம் ஸ்ரீ ரங்கர் 1572 – 1586

64. இரண்டாம் வெங்கட 1586 – 1614

65. இரண்டாம் ஸ்ரீ ரங்கர் 1614 – 1614

66. ராம தேவா 1617 – 1632

67. மூன்றாம் வெங்கடா 1632 – 1642

68. மூன்றாம் ஸ்ரீ ரங்கா 1642 - 1646

பிற நூல்கள் எழுதியவர்

69. கவி கர்ண ரசாயணம்: நரசிம்ம கவி

70. தெய்வ நா விலாசம்: கொண்ட வீட்டு இலட்சுமி

71. சங்கீத சூர்யோதயம் : இலட்சுமி நாராயணன்

72. பிபோத சந்திரோதயம்:  கிருஷ்ண மிச்ரல்

73. வியாசாமிர்தம்:  வியாசராயர்

74. இரு சமய விளக்கம்:  ஹரிதாசன்

விஜய நகர பேரரசிற்கு வருகை தந்தவர்கள்

வருகை தந்தவர்கள்-ஆட்சி செய்த மன்னர்கள்

75. Athanasivs Nikitin - இரண்டாம் முகமது ஷா

76. Fernao Hunizஅச்சுத தேவசராயர்

77. Abdur Razzak - இரண்டாம் தேவராயர்

78. Nicolo Contiமுதலாம் தேவராயர்

79. Domingo Paes  கிருஷ்ண தேவராயர்

80. Ibn Battutahமுதலாம் ஹரிஹரா

81. Duarte Edwardo Barbosaகிருஷ்ண தேவராயர்

விஜய நகர பேரரசின் ஆட்சித் துறைகள்:

82. கண்டசாலா - இராணுவம்

83. சர்வ மான்யாகோயிலுக்கு நிலம் வழங்குதல்

84. அதவனா - வருவாய்

விஜயநகர பேரரசு முக்கிய குறிப்புகள்:

85. விஜயநகர பேரரசுவின் முக்கிய தலைநகரம் விஜயநகர் ஆகும்

86. வேதாந்த தேசிகர் வடகலைப் பிரிவின் தலைவர்

87. மணவாள மாமுனி தென்கலைப் பிரிவின் தலைவர்

88. வடகலைப் பிரிவினர் சமஸகிருதத்தை பின்பற்றினர்.

89. சாதி முறையில் நம்பிக்கை கொண்டிருந்தனர்

90. தென்கலைப் பிரிவிற்குப் பிரபந்தங்களைப் பின்பற்றினர்.

91. சாதி முறையில் நம்பிக்கை கொள்ளவில்லை

92. திராவிடக் கட்டிடங்களையும், இந்தோ சரசானிக் கட்டிடக் காலையும் விஜயநகர மன்னர்கள் காலத்தில் சிறப்புற்ற விளங்கின

93. இராமேஸ்வரம் கோயிலில் காணப்படும் இருகோபுரங்களும், ஸ்ரீரங்கத்திலுள்ள சேஷசிரி மண்டபமும் விஜயநகரக் கட்டிடக் கலைக்குச் சிறந்த உதாரணங்களாகும்.

94. விஜயநகர மன்னர்கள் வேலூர் கோட்டையின் உட்புறம் புகழ்பெற்ற கோயிலைக் கட்டினார்கள். கோயில் வளாகத்தில் கல்யாண மண்டபமும் இணைக்கப்பட்டுள்ள அமைப்பு முறை வேலூர் கோவிலில் சிறப்பு அம்சமாகும்

95. மதுரை அரண்மனை இந்தோசரசானிக் கட்டிடக் கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது

96. கிருஷ்ணதேவராயர் சிதம்பரம் கோபுரத்தின் ஒரு பகுதியினையும், காஞ்சிபுரத்திலுள்ள ஏகாம்பரநாதர் கோவிலின் தென் பகுதியினை கட்டி முடித்துள்ளனர்

97. விஜயநகர மன்னர்கள் பின்பற்றிய கட்டிடக் கலைமுறை மதுரைக் கட்டிடக் கலை முறையாகும்.

விஜயநகர காலம் தமிழ் நூல்கள்: நூல்கள் எழுதியவர்

98. சிவஞான போதம்: மெய்கண்டார்

99. சேதுபுராணம்: அழகிய தேசிகர்

100. கந்தபுராணம்:  கச்சியப்ப சிவாச்சாரியார்

101. திருமலைபுராணம்:   திருமலைநாதர்

102. இருசமய விளக்கம் - ஹரிதாசர்

103. அரிச்சந்திர புராணம்:  நல்லூர் வீரகவியார்

104. நன்னூல்:  பவநந்தி

மைசூர் எழுச்சிஹைதர் அலிதிப்புசுல்தான்

1. விஜயநகர ஆட்சிக்குப் பின்னர் மைசூர் ஒரு சுதந்திர அரசாக மாறியது

2. சுதந்திர மைசூர் அரசின் வித்தகர் சிக்கதேவராய உடையார்

3. ஹைதர் அலி மைசூர் அரசில் போர் வீரராகப் பணியாற்றி 1755ல் திண்டுக்கல் பவுஜ்தாராக மைசூர் அரசரால் நியமிக்கப்பட்டார்

4. அவர் 1763ல் பெட்னூரைக் கைப்பற்றினார்.

5. மைசூரை ஆட்சி செய்த சிக்கி கிருஷ்ணராஜ் தனது அமைச்சர் நஞ்சராசாவை அடக்க ஹைதர் அலியின் உதவியை நாடினார். ஹைதர் அலி நஞ்சராசாவை அடக்கியதுடன் மைசூர் மன்னரையும் நீக்கித்தாமே 1764ல் அரசரானார். இவருடைய திவான் பூர்ணையா ஆவார். இவரது மகன் திப்பு சுல்தான் ஆவார்

6. திப்புசுல்தான் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் சுதந்திர மரத்தினை நட்டார். பிரெஞ்சு புரட்சியில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர் பிரெஞ்சு அலுவலர்களின் உதவியுடன் இராணுவத்தை நவீன மயமாக்க முயற்சிகள் மேற்கொண்டார். மேலும் Jacobin Club உறுப்பினராகவும் சேர்ந்தார். பாதுஷா என்று தம்மை அழைத்துக் கொண்ட இவர் நான்காம் மைசூர் போரில் உயிர் இழந்தார். திப்புசுல்தானின் வாரிசுகள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.