Type Here to Get Search Results !

வரலாறு | Part - 17 | 115 Questions

History in Tamil | Part - 17

 மராத்தியர்கள்

மராத்தியர்களின் எழுச்சிக்கான காரணங்கள்:

1. மலைகளில் இருந்தமையால் ஏற்பட்ட உடல் வலிமை

2. இராமதாஸ், துக்காராம், ஏக்நாத் போன்றவர்கள் ஏற்படுத்திய மனவலிமை

3. தக்காண பீடபூமியின் மேற்பகுதியில் ஏற்பட்ட உறைவிடம் - மலைப்பகுதி - இயற்கை அரண்.

4. வறுமை

5. பொது சமயம்

6. பொதுப் பண்பாடுமராத்தியர் அனைவரும் ஒன்றே

7. மொழி வாரியான ஒற்றுமை

8. மராட்டிய பெண்களின் தியாக உணர்வு

9. இவர்கள் சத்திரபதி என்ற பெயருடன்  ஆட்சி செய்தனர்

ஷாகி போன்சுலே

10. இவரின் மனைவிகள் ஜீஜாபாய் மற்றும் துகாபாய்

11. துகாபாமகன் - தஞ்சை வெங்கோஜீ

12. இவர் ஆதரித்த புலர் - ஜெயராம்

சிவாஜி (1630 – 1680)

13. சிவனார் கோட்டையில் பிறந்ததர்

14. தாதாஜி கொண்டதேவ் - ஆசிரியர்

15. குரு ராமதாஸ் - குரு

16. குரு ராமதாஸ் எழுதிய புத்தகம் தசபோதம்

17. முதல் மனைவிசாயாபாய்

18. 1646 தோணாக் கோட்டை கைப்பற்றுதல்

19. 1656 ஜாவ்லியை கைப்பற்றுதல் (திருப்புமுனை)

20. 1656 – ரெய்கார் கோட்டை கைப்பற்றுதல்

21. 1657 – அவுரங்கசீப்பிடம் தோல்வி

22. 1657 – கொலாபா பகுதிகல்யாண் பகுதிகள் கைப்பற்றுதல்

23. 1659 – அப்சல்கான் கொலை

24. பீஜப்பூர் சுல்தான் அலி அதில்ஷா சிவாஜிக்கு பாடம் கற்பிக்க எண்ணி அவரை வஞ்சகமாக கொலை செய்ய அப்சல் கான் என்பவரை அனுப்பினார். சிவாஜி அவரை தழுவும் போது தனது கையில் உள்ள புலி நகத்தால் அவரை கட்டியணைத்து கொன்றார். இதனை தொடர்ந்து பீஜப்பூர் சுல்தான் சிவாஜியை சுதந்திர அரசராக ஏற்றார்

1663 – செயிஸ்டகானை வென்றது:

25. சிவாஜியின் வளர்ச்சியினைக் கண்ட அவுரங்கசீப் அவரை தந்திரமாக கொல்ல செயிஷ்டகான் என்பவரை அனுப்பினார். சிவாஜி செயிஷ்டகானின் முகாமை எதிர்பாரதவிதமாக இரவில் தாக்கினார். செயிஷ்டகான் காயத்துட்ன தப்பினார்.

26. 1664ல் சூரத் படையெடுப்பு மற்றும் கொள்ளையடிப்பு

1665 – புரந்தார் உடன்படிக்கை:

27. அவுரங்கசீப்பின் பிரதிநிதி ஆம்பரைச் சார்ந்த இராசா ஜெய்சிங் 1665ல் சிவாஜியுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். அதன்படி சிவாஜி கைப்பற்றிய 35 கோட்டைகளில் 23 முக்கிய கோட்டைகளை முகலாயர்களுக்கு திருப்பி அளித்தார். பீஜப்பூர் சுல்தான் முகலாயர்களை தாக்கும்போது முகலாயர்களுக்கு உதவுவதாக ஒப்புக் கொண்டார்.

28. 1666 – சிவாஜி தனது மகன் சாம்பாஜியுடன் ஆக்ரா சென்றபோது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். பின் ஆக்ரா கோட்டையில் இருந்து தப்பித்தார். பின் முகலாயர்களுக்கு கொடுத்த கோட்டைகளை கைப்பற்றினார்

29. 1672ல் முகலாய படைகளை  Salher என்ற இடத்தில் நடைபெற்ற போரில் தோற்கடித்தார்.

30. 1672 கூல்நர்  கேட்டை கைப்பற்றுதல்

31. 1674ல் ரெய்கார் கோட்டையில் நடைபெற்ற முடிசூட்டு விழாவில் சத்திரபதி என முடி சூட்டிக்கொண்டார் (முடிசூட்டு விழா நடத்தியவர் காகப்பட்டர்)

32. 1677 கர்நாடக படையெடுப்பு

33. 1678 செஞ்சி, தஞ்சாவூர், வேலூர் கோட்டையை கைப்பற்றுதல்

34. 1680 மறையுவு

35. இவர் மலைவாழ் எலி எனப்பட்டார்

36. சூரத் நகரில் இவரால் கைது செய்யப்பட்ட பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியினர்: 1.ஹென்றி ரெபிங்க்டன் 2. ராண்டால்ப் டெய்லர் 3. பிலிப் கிப்பர்ட் ஆவர்

மதிப்பீடுகள்

37. வின்சென்ட் ஸ்மித்: திருடர்களின் தலைவன்.

38. காபிகான் - வஞ்சகத்தின் பிதா

39. சர்க்கார் - தேசிய படை உருவாக்கிய வீரர்

அஷ்டப்பிரதான்

40. சிவாஜியின் ஆட்சிக்கு உதவிடும் எண்மர் குழுவிற்கு அஷ்டப்பிரதான் என்று பெயர். அவர்கள் முறையே

41. பேஷ்வா () முக்கியபிரதான்:  இவர் முதல் அமைச்சர், நாட்டின் நலன் மற்றும் முன்னேற்ற வழிகள்

42. மயீம்தார் () அமாத்தியர்:  நிதியமைச்சர்

43. வாக்னிஸ் () மந்திரி : அரசரின் நிகழ்ச்சிகளை பதிவு செய்தல்

44. தபீர் () சுமந்தா:  அயல்நாட்டுத்துறை

45. சச்சிவ்:  அரசரின் தபால் போக்குவரத்து

46. பண்டிட்ராவ்:  பூசாரி

47. சாரிநௌபத் () சேனாதிபதி: படைத்தளபதி

48. நியாதீஷ்:  தலைமை நீதிபதி

49. நாடு நான்கு பிராந்த் (மாநிலம்) களாகப் பிரிக்கப்பட்டது

50. மாநிலங்கள் பர்கானாக்களாக பிரிக்கப்பட்டது

51. கொரில்லா போர் முறை பின்பற்றப்பட்டது

52. வரிகள் - சௌத், படைவரி (14)

53. சர்கேஷ்முகிவிளைச்சலில் பங்கு (110)

54. ஜகத் - விற்பனை வரி

55. முஷ்தார்பாவணிகவரி

56. ஜட்ஜ்தோராரெஸ்ஸின் மீது விதிக்கப்படும் வரி.

57. பாரசீக மொழிக்கு பதிலாக மராத்தி ஆட்சி மொழி

58. சிவாஜியின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகள்

59. 1. சாந்தூர் 2. பூனா 3. இராசகி 4. கார்வார் 5. சதாரா 6. ரத்னகிரி 7. கெய்ரா 8. பெல்லாரி 9. கோலார் 10. வேலூர் 11. ஆரணி 12. தஞ்சை

60. கடற்படையின் தலைமையிடம் கொலாபாவில் உள்ளது

61. சிவாஜி 53 வது வயதில் இறந்த பிறகு, அவரது முதல் மனைவியின் மகன் சாம்பாஜிக்கும் இரண்டாவது மனைவியின் மகன் இராசாராமிற்கும் இடையே வாரிசுப்போர் ஏற்பட்டது. அவுரங்கசீப்பை எதிர்த்து அவரது மகன் அக்பர் கலகம் செய்த போது சாம்பாஜி அக்பருக்கு அடைக்கலம் கொடுத்ததால் அவுரங்கசீப்பால் சாம்பாஜி கொலை செய்யப்பட்டார். அவரது மகன் இரண்டாம் சிவாஜி எனப்படும் சாகு அவுரங்கசீப்பால் சிறைப்பிடிக்கப்பட்டார்.

பேஷ்வாக்கள்

62. சிவாஜியின் இரண்டாவது மனைவி  அசீராபாய்

63. இவரது மகன்கள் - இராசாராம், தாராபாய், இராமபாய்

64. இராசாராம் மகன்கள் - சிவாஜி III இராமராசா.

65. சிவாஜியின் பேரன் சாகு 1707 அவுரங்கசீப் மரணத்திற்கு பின் முகலாயர் பிடியில் வெளியே வந்தார். இதற்கு பிறகு அவருக்கும் அத்தையான தாராபாய்க்கும் வாரிசுரிமை ஏற்பட்டது

66. இதனை தொடர்ந்து பேஷ்வாக்களின் ஆதிக்கம் ஏற்பட்டது

 

பாலாஜி விசுவநாத் 1714 – 1720

67. இவர் சாகுவின் முதலமைச்சர் ஆவார்

68. இவர் முதல் பேஷ்வா ஆவார்

69. இவரை தொடர்ந்து பேஷ்வாக்கள் வாரிசுரிமையாக்கப்பட்டார்கள்

பாஜிராவ் - I 1720 – 1740 (2ம் பேஷ்வா)

70. சாம்ராட் சிவாஜிக்கு பிறகு கொரில்லா போர் முறையை தீவிரமாக்கியவர்

71. 1739ல் போர்ச்சுகீசியரை வென்று சால்செட், பசீன் பகுதிகளை வென்றார்

72. இவரும், இவரது சகோதரர் சிமாஜி அப்பர் தொடர்ச்சியாக 36 போர்களை புரிந்து வெற்றி கண்டனர். எனவே இவர் மராத்தியப் பேரரசை இரண்டாவது தடவையாக நிறுவியவர் என்று கூறுவார்

73. பாலாஜி பாஜிராவ் 1740 – 1761 (3ம் பேஷ்வா)

மூன்றாம் பானிபட் போர் - 14.01.1761

74. தற்போது அரியானா மாநிலத்தில் உள்ள பானிப்பட் என்ற இடத்தில் இப்போர் மராத்தியர்களுக்கும் ஆப்கான் மன்னர் அகமது ஷா ஆப்தாலிக்கும் இடையே நடைபெற்றது. மராத்தியர்கள் சார்பில் பாலாஜி பாஜி ராவ், சதசிவ ராவ், மகாராஜ் சுராஜ் மால் மற்றும் இப்ராகிம் கான் ஆகியோரும் ஆப்கானிஸ்தான் சார்பில் அகமது ஷா ஆப்தாலி, நாஜிப் உத் தொளா சிராஜ் உத் தொளா ஆகியோரும் போரிட்டனர். இதில் அகமது ஷா ஆப்தாலி அணி வெற்றிப்பெற்றது

75. மராட்டியர்கள் வலுவான அணியை அமைக்காத காரணத்தால் தோல்வி அடைய நேரிட்டது. மராட்டியர்கள் இராசபுத்திரர்களின் உள் விவகாரங்களில் தலையிட்டதாலும், சீக்கியர்கள் மற்றும் ஜாட் இனத்தவர்கள் மீது அதிக வரி வசூலித்தாலும், அயோத்தி நவாப்பின் ஆதிக்கத்தை குறைத்தாலும் மராட்டியர்கள் இப்போரில் தோல்வியடைய நேரிட்டது

76. மாதவ ராவ் (1761 – 72) (4ம் பேஷ்வா)

77. நாராயண ராவ் (1772 – 73) (5ம் பேஷ்வா)

78. மாதவ ராவ் நாராயணா (1773 – 95) (6 பேஷ்வா)

79. முதல் மராத்திய போர் 1775 - 82

80. பேஷ்வா நாராயணராவ் அவரது சித்தப்பா ரகுநாத ராவால் கொலை செய்யப்பட்டார்

81. நாராயணராவ் மகன் இரண்டாம் மாதவராவ் பேஷ்வா பதவி ஏற்றார்

82. ரகுநாதராவ் ஆங்கிலேயரின் துணை நாடினார்

83. 1775ல் சூரத் உடன்படிக்கை ஏற்பட்டது

84. சால்செட், பஸ்சீன் பகுதிகளை ஆங்கிலேயருக்கு அளிக்க ரகுநாத ராவ் இசைவு தெரிவித்தார் இருப்பினும் போர் ஏற்பட்டது

85. 1776ல் புரதர் உடன்படிக்கை ஏற்பட்டது. இதன்படி பூனா அரசாங்கம் 12 இலட்ச ரூபாய் சால்செட் மற்றும் புரோச் ஆகியவற்றை ஆங்கிலேயர்கள் பெற்றனர். அதற்கு பதிலாக ரகுநாதராவை ஆங்கிலேயர் கைவிட்டனர்

86. புரந்தர் உடன்படிக்கை ஏட்டளவிலேயே நின்றுவிட்டது

87. நானாசாகிப், ஆங்கிலேயர்களை அடியோடு விரட்டுவதற்காக நிசாம், ஹைதர்அலி, மற்ற மராத்தியத் தலைவர்களை ஒன்று சேர்த்து ஒரு கூட்டுப்படையை அமைத்தார். தளபதி கோடார்டு தலைமையில் ஆங்கிலப் படையினர் அகமதாபாத் பசீன் இரண்டையும் கைப்பற்றினார். பாப்ஹாமின் தலைமையின் கீழ் மற்றொரு படை குவாலியரைக் கைப்பற்றியது. சிவரியில் மாதாஜி சிந்தியா ஆங்கிலப் படைகளால் சிறு தோல்வி மட்டுமே ஆங்கிலேயருக்கு ஏற்பட்டது. மகாதாஜி சிந்தியா ஆங்கிலேயருடன் 1782ல்

88. சால்பாய் உடன்படிக்கை செய்து கொண்டார்.

89. இரண்டாம் பாஜிராவ் (1795 – 1818) (7 மற்றும் கடைசி பேஷ்வா)

இரண்டாம் மராத்தியப் போர் 1802 - 1803

90. 1802ல் இரண்டாம் பாஜிராவ் ஆங்கிலேயரின் பசீன் (துணை படை) திட்டத்தை ஏற்றார்

91. இதை சிந்தியா மற்றும் போன்ஸ்லே எதிர்த்தனர்

92. ஆர்தர் வெல்லெஸ்லியின் தலைமையான ஆங்கிலப்படை போன்ஸ்லே படைகளை அன்ஸே மற்றும் ஆரகான் இடங்களில் தோற்கடித்தது. போன்ஸ்லே தியோகன் உடன்படிக்கை மூலம் துணைப்படைத் திட்டத்தை ஏற்று கட்டாக் பகுதியை ஆங்கிலேயருக்கு அளித்தார்

93. லேக் பிரபுவின் தலைமையினை ஆங்கிலப்படை சிந்தியாவின் படைகளை தோற்கடித்தது. சிந்தியா சர்ஜி அர்ஜீன்கான் உடன்படிக்கை மூலம் துணைப் படை திட்டத்தை, ஏற்று புரோச் அகமது நகர், கட்டாக் மற்றும் கங்கை யமுனை பகுதிகளை ஆங்கிலேயருக்கு அளித்தார்

94. முகலாய மன்னர் இரண்டர் ஷா ஆலம் ஆங்கிலேயரின் பாதுகாப்பின் கீழ் வந்தார்

95. மராத்தியர்கள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இழந்தனர்

மூன்றாம் மராத்தியப் போர் 1817 - 1818

96. பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் பசீன் (துணை படைத் திட்டம்) உடன்படிக்கை மீறினார்

97. மராத்தியர்களை ஆங்கிலேயரின் பிடியில் இருந்து விடுவிக்க சிந்தியா, போன்ஸ்லே, ஹேல்கார் ஆகியோருடன் இரகசிய உடன்படிக்கை

98. பிண்டாரியார்களை ஒழித்தமையால் வாரன் ஹேல்கார் ஆகியோருடன் இரகசிய உடன்படிக்கை

99. பிண்டாரியார்களை ஒழித்தமையால் வாரன் ஹேல்கார் மீது மராத்தியர்கள் கோபம் அடைந்தனர்.

100. 1815ல் கெயிக்வார் அரசின் பிரதிநிதி கொலை

101. 1817ல் பூனாவில் ஆங்கிலப்பிரதிநிதி மாளிகை தீக்கிரையாக்கப்பட்டது

102. போன்ஸ்லே: சீத்தா பால்டிக் போரில் தோற்கடிக்கப்பட்டார்

103. ஹோல்கார்: மகித்பூரில் தோற்கடிக்கப்பட்டார்

104. கோர்கான் அஷ்தா - இரண்டாம் பாஜிராவ் தோற்கடிக்கப்பட்டார்

விளைவுகள்

105. மராத்தியர்களின் ஆதிக்கம் நீக்கப்பட்டது

106. பேஷ்வா பதவி ஒழிக்கப்பட்டது

107. ஹோல்கார் துணைப்படை திட்டத்தை ஏற்றார்

108. நர்மதை பகுதிகளை ஆங்கிலேயருக்கு கிடைத்தது

பிற்கால மராத்தியர்கள்:

109. பிற்காலத்தில் மராத்தியர்கள் பல்வேறு இடங்களில் ஆட்சி செய்தனர்.

110. பரோடாவில் கெய்க்வாட்

111. நாகபுரியில் போன்ஸ்லே

112. இந்தூரில் ஹோல்கர்

113. குவாலியரில் சிந்தியா

114. பூனாவில் போஷ்வா

115. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆதிக்கத்தை அதிகமாக எதிர்த்தது மராட்டியர்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.