Type Here to Get Search Results !

வரலாறு | Part - 14 | 170 Questions

History in Tamil | Part - 14 

ஜஹாங்கீர் (1605 – 1622)

1. அக்பர் இறந்தவுடன் அவரது மகன் சலீம் நூர்உத்ன் முகம்மது,  ஜஹாங்கீர் பாதுஷா காசி என்ற பெயருடன் பதவி ஏற்றார்.

2. இவரின் படைத் தலைவர் முகபத்கான்

3. ஆக்ரா கோட்டையில் உள்ள ஷாபுர்திக்கும் யமுனைகரையில் உள்ள ஒரு கல்தூணுக்கும் இடையில் நீதிச் சங்கிலி கட்டினார்

4. இவர் காலத்தில் காந்தஹார் இழக்கப்பட்டது

5. இவரது ஆட்சியை எதிர்த்து இவரது மகன் குஸ்ரு கலகம் செய்தார். குஸ்ரூவிற்கு சீக்கியர்களின் குரு இர்ஷீன் தேவ் உதவி செய்ததால் இவர் குரு அர்ஜீன் தேவிற்று மரண தண்டனை வழங்கினார். இதனால் சீக்கியர்கள் முகலாயர்களுக்கு எதிராக மாறினார்கள்.

6. இவர் மெஹ்ருன்னிசா என்ற விதவையை மணந்தார். இவர் மாளிகை ஒளி என்ற பொருள் படும்படி நூர் மகால் என்று அழைக்கப்பட்டார். பின்னர் உலகின் ஒளி என்று பொருள்படும்படி நூர்ஜகான் என்று அழைக்கப்பட்டார். இவரைப் பற்றிய குறிப்புகள் நாமா கி ஜஹாங்கீரி என்ற நூலில் காணப்படுகின்றன.

7. தமது காதலியான அனார்கலிக்கு லாகூரில் சலவைக் கல்லாலான கல்லறையைக் கட்டினார்;

8. கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதி வில்லியம் ஹாக்கீன்ஸ் 1608-11 ஆண்டுகளில் சில வரிணக உரிமைகயை பெற்றார்.

9. 1616-1619ல் தாமஸ் ரோ சில உரிமைகளை பெற்றார்

10. இவர் காலத்தில் புகையிலையை போர்ச்சுகீசியர்கள் அறிமுகம் செய்தனர்

11. 1620ல் காங்ரா கோட்டையைக் கைப்பற்றினார்.

12. காஷ்மீரில் உள்ள ஷாலிமர் தோட்டம் மற்றும் நிஷாத் தோட்டம் ஆகியவற்றை இவர் அமைத்தார்.

13. இவரது காலத்தில் பஞ்சம் மற்றும் பிளோக் நோய் ஏற்பட்டது

14. 1627ல் இவர் மரணமடைந்தார். இவரது உடல் ராவி நதிக்கரையில் உள்ள ஷாதாராவில் அடக்கம் செய்யப்பட்டது

ஷஹாபுதீன் முகமது ஷாஜஹான் 1627 - 1658

15. 1627ல் ஜஹாங்கீர் இறந்தார்

16. நூர்ஜஹான் தனது மருமகன் ஷாரியரை அரசராக்க முயற்சி செய்தார்

17. நூர்ஜஹானின் சகோதரர் ஆப்சகான் தன்னுடைய மருமகன் ஷாஜகானை ஆதரித்தார்

18. 1628ல் ஷாரியரை வென்றார். குத்பா இவரது பெயரால் படிக்கப்பட்டது

19. இவரது இயற்பெயர் : குர்ரம்

20. இவரது தாயார்: மர்வார் அரசர், மகன் ஜகத்கோசை

21. இவரது மனைவி: அஞ்சுமன் பானுபேகம் (மும்தாஜ் மஹால்)

22. 1626ல் அகமது நகர் அரசர் மாலிக் ஆம்பர் இறந்தவுடன் சில குழப்பங்களுக்குப்பின் அகமதுநகர் முகலாயப் பேரரசுடன் இணைந்தது

23. 1635ல் பீஜப்பூர் சுல்தான் அடிபணிந்தார். கப்பம் கட்ட ஒப்புக்கொண்டார்

24. கோல்கொண்டா அரசர் முகலாயப் பேரரசின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டார்

25. 1629ல் பண்டேல் கண்டின் ஆளுநர் ஜஜ்ஹர்சிங் அடக்கப்பட்டார்

26. 1635ல் மீண்டும் ஜஜ்ஹர்சிங் அடக்கப்பட்டார்

27. 1632ல் ஷாஜஹான், உத்திரவுப்படி வங்காள ஆளுநர் குசிம்கான் போர்ச்சுக்கீசியரை அடக்கினார்.

28. 7 ஆண்டுகாலமாக தயார் செய்யப்பட்ட மயிலாசனம் மற்றும் கோகினூர் வைரத்தை பாரசீக மன்னர்நாதர்ஷாகொள்ளையடித்துச் சென்றார். தற்பொழுது இங்கிலாந்து மியூசத்தில் உள்ளது

29. மயிலாசனத்தில் கடைசியான அமர்ந்த முகலாய மன்னர் முகமது ஷா

30. 1650ல் Great Mughal எனப்படும் கோகினூர் வைரம் கிடைக்கப்பட்டது.

31. 1639ல் பாரசீகர்கள் காந்தாரத்தை கைப்பற்றினார்

32. 1666ல் ஷாஜகான் இறந்தார்

ஷாஜகான் காலத்தில் இந்தியாவிற்கு வந்த அயல் நாட்டினர்கள்:

33. ஆங்கிலேயர்கள்: வில்லியம் ஹாக்கீன்ஸ் 2. தாமஸ்ரோ

34. பிரெஞ்சுக்காரர்கள்: 1. பர்னியர் 2. டவர்னியர் 3. தேவ்னாட்

35. ஹாலந்து நாட்டினர்கள்: 1.பிரான்சிஸ்கோ 2. பெல்சர்ட்டு

36. இத்தாலியர்கள்:  1.மனூக்சி 2. மாண்டல்ஸ்லோ

ஆலம்கீர் அவுரங்கசீப் (1658 – 1707)

37. 1658ல் ஆக்ராவை கைப்பற்றியவுடன் 1659ல் காஜா தியோரை வென்ற பின்னும் இருமுறை முடிசூடப்பட்டார். இவர் சுமார் 49 ஆண்டு காலம் ஆட்சி செய்தார்.

38. ஷாஜகானின் மகன்கள்: 1. தாராசுக்காவ் 2. முராத் 3. ஷாஷீஜா 4. அவுரங்கசீப்

39. மகள்கள்: 1. ரோஷளாரா 2. ஷாகனாரா

40. ஷாஜகான் உயிருடன் இருந்த போதே வாரிசுரிமைப்போர் துவங்கியது

41. வாரிசுரிமைப் போரைத் தவிர்க்க ஷாஜகானால் நியமிக்கப்பட்டவர் தாராசுக்காவ் ஆவார்

42. இவர் சாமுகார் என்னுமிடத்தில் தோற்கடிக்கப்பட்டார்.

43. ஷர்ஷீஜா காஜ்வா என்னுமிடத்தில் தோற்கடிக்கப்பட்டார்.

44. முராத் மதுராவில் வஞ்சகமாக அவுரங்கசீப்பால் கொலை செய்யப்பட்டார்.

45. அவுரங்கசீப் ஆலத்கீர் என்ற பட்டப் பெயருடன் முகலாயப் பேரரசின் மன்னரானார். ஆலம் கீர் என்றால் உலகின் வெற்றியாளர் எனப் பொருள்படும்

சிவாஜியுடன் நடைபெற்ற நிகழ்வுகள்:

46. சிவாஜியை அடக்க செயிஷ்டகானை அனுப்பியது – 1663

47. சிவாஜி சூரத்தை தாக்கியது – 1664

48. 1665ஆம் ஆண்டு சிவாஜிக்கும் அவுரங்கசீப் சார்பாக மன்னர் ஜெய்சிங் என்பவருக்கும் நடைபெற்றது

எல்லைப்புற போர்கள்:

49. 1661ல் யூசூப் சாய் இனத்தவர்கள் தாக்குதல்கள் முறியடிப்பு

50. 1672ல் ஆப்ரிடிகள் அக்மல்கான் தலைமையில் நடைபெற்ற கிளர்ச்சி முறியடிப்பு

51. குஷல்கான் கட்டாக் தலைமையில் கட்டாக்குகள் நடத்திய கிளர்ச்சி முறியடிப்பு

கோல்கொண்டா வெற்றிகள்:

52. மராட்டியர்களுக்கு போர்களில் உதவி செய்த கோல்கொண்டா மீது 1687ல் அவுரங்கசீப் போரிட்டார்

53. சுல்தான் அபூல்ஹாசன் தோல்வியுற்றார்

பீஜப்பூர் வெற்றி:

54. பீஜப்பூர் சுல்தானின் படைகளை நவீனமாக்கிய தளபதி சார்ஜகானை நீக்குமாறு அவுரங்கசீப் பீஜப்பூர் சுல்தானைக் கேட்டுக்கொண்டார்

55. பீஜப்பூர் சுல்தான் மறுத்துவிட்டார் எனவே 1685ல் பீஜப்பூரின் மீது அவுரங்கசீப் படையெடுத்தார்

56. 1685ல் பீஜப்பூர் கைப்பற்றப்பட்டது

57. சுல்தான் சிக்கந்தர் அடில்ஷா கைது செய்யப்பட்டார்

இராசபுத்திரர்களுடன் போர்:

58. 1678ல் மகாராஜா ஜஸ்வந்த்சிங் இறந்தவுடன் அவுரங்கசீப் ஜோத்பூரை கைப்பற்றினார்

59. உதய்பூர் இரானாவை தோல்வியுறச் செய்து உதய்பூரை கைப்பற்றினார்

60. 1662ல் அகோம்கள் முகலாயருடன் உடன்பாடு செய்து கொண்டார்

61. தன்னுடைய ஆட்சியில் புதியதாக கட்டப்பட்ட இந்துக் கோவில்களை அவுரங்கசீப் இடித்து தள்ளினார்

62. இதனால் கத்தியவாரில் உள்ள சோமநாதபுரக் கோவில், காசி விசுவநாகக் கோவில், மதுரவாயில் உள்ள கேசவராய் கோவில்கள் அழிந்தன

63. மேகலாயப் பேரரசு அவுரங்கசீப் காலத்தில் மிகப் பரந்திருந்தது

64. ரதாரி என்ற படகுத் துறை வரியை நீக்கினார்

65. பண்டாரி என்ற நிலத் தீர்வையை இரத்து செய்தார்.

66. சாராய் என்ற மேய்ச்சல் வரியை இரத்து செய்தார்

67. துவான்னா என்ற இந்து மத பண்டிகைகள் கொண்டாட்ட வரியை நீக்கினார்

68. ஆடுகளுக்கான ஸார் ஷீமாரி மற்றும் பஸ் ஷீமாரி ஆகிய வரிகளை இரத்து செய்தார்.

69. 12.4.1679ல் ஜசியா என்ற வரியை விதித்தார்

70. மஹ்சூல் என்ற வரி விதித்ததர்

71. சுங்கவரி முஸ்லீம்களுக்கு 2 ½ விழுக்காடும் இந்துக்களுக்கு 5 விழுக்காடும் விதிக்கப்பட்டன.

72. 1665ல் முஸ்லீம் வணிகர்களுக்கு முழுமையான சுங்கவரி விலக்கு அளிக்கப்பட்டது.

73. S.R.சர்மா என்ற அறிஞர் இந்துக்களை ஒறுத்தல் என்பது அவுரங்கசீப்பின் கொள்கை எனக் குறிப்பிட்டார்

74. பருக்கி என்ற வரலாற்று ஆசிரியர் இந்துக்கள் முகலாய பேரரசுக்கு விசுவாசிகளாக இல்லாததால் 1670ல் இருந்து அவுரங்கசீப் தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டார் எனக் குறிப்பிடுகிறார்.

75. பாரசீக ஷாவின் தூதுவரான புடாக் பெக் அவுரங்கசீப்பின் அவையில் கலந்து கொண்டார்.

முக்கிய குறிப்புகள்:

76. 1658ல் தந்தை ஷாஜஹகானை சிறையில் அடைத்தார்

77. பால்கனி வழியே மன்னர் குடிமக்களுக்கு காட்சி தரும் ஐரோக்கா தர்ஷன் என்ற முறையை நீக்கினார்.

78. அரண்மனையில் இசை, நடனம் ஆகியவற்றை தடைச் செய்தார்

79. முதாசிப்புகள் எனப்படும் பொது ஒழுக்கம் அலுவலர்கள் நியமிக்கப்பட்டார்

80. மது அபின் தடை செய்யப்பட்டது

81. விபச்சாரம் தடை செய்யப்பட்டது

82. சோதிடம் இழிவுபடுத்தப்பட்டது

83. முகரம் ஊர்வலம், சதி ஆகியவை தடை செய்யப்பட்டது. சந்தேக குணம் உடையவர் எனவே அனைத்துப் பணிகளையும் தாமே சுமந்து கொண்டவர்

84. காசுகளில் கலீமா பொறிக்கப்படுவதை தடை செய்தார்

85. பாரசீக வழக்கமான நௌரோசு கொண்டாட்டம் தடைசெய்யப்பட்டது

86. சீக்கியர்களின் 9வது குரு குரு தேஜ்பகதூர் கொலை செய்யப்பட்டார்.

87. அவுரங்கசீப்பிற்கு பின் முகலாய பேரரசு வீழ்ச்சியடையத் தொடங்கியது. அதற்கான காரணங்கள்

a. அவுரங்கசீப்பின் சமயக் கொள்கை

b. முகலாய பேரரசின் மிகப் பரந்த பரப்பளவு

c. மராத்தியர்களின் எழுச்சி

d. திறமையற்ற அரசு வாரிசுகள்

e. வாரிசுரிமைப் போர்

f. மான்சப்தாரி முறை

g. தக்காண கொள்கை

h. ஆங்கிலேயர் வருகை

i. ஆப்கானியர்களின் படையெடுப்புகள்

பிற்கால முகலாய அரசர்கள்:

88. முதலாம் பகதூர் ஷா: இவர் முதலாம் ஷா ஆலம் என்றும் அழைக்கப்படுகின்றார். 1707 முதல் 1712 வரை ஆட்சி செய்தார். இவரது ஆட்சியில் முகலாய அரசு வீழ்ச்சியடைய தொடங்கியது

89. ஜகந்தர் ஷா: இவர் 1712 முதல் 1713 வரை ஆட்சி செய்தனர். இவர் ஜசியா வரியை நீக்கினார்.

90. பருக்ஷியர்: சீக்கியர்களின் தலைவர் பண்டா பகதூருக்கு மரண தண்டனை விதித்தார்.

91. கிழக்கிந்திய கம்பெனிக்கு வங்காளத்தில் வரியில்லாமல் வணிகம் செய்ய அனுமதி அளித்தார்

92. ஆங்கிலேயர் இந்தியாவில் இருக்க இவவே காரணமானவர்.

93. இவர் 1713 முதல் 1719 வரை ஆட்சி செய்தார்.

94. ரபி உல் டார்ஜட்: 1719ல் ஆட்சி செய்தார்

95. ரபி உல் தௌலத் எனப்படும் இரண்டாம் ஷாஹகான்: 1719ல் ஆட்சி செய்தார்

96. நிகுசியர்: 1719ல் ஆட்சி செய்தார்

97. முகமது இப்ராகிம்: 1720 முதல் 1748 வரை ஆட்சி செய்தார். இவர் மகிழ்ச்சியை விரும்பும் அரசர் என்பதால் இரங்கீகலா என்று அழைக்கப்பட்டார். இவர் காலத்தில் பாரசீகத்தைச் சார்ந்த நாதர் ஷா படையெடுத்தார்.

நாதர்ஷாவின் படையெடுப்பு:

98. 1739ம் வருடம் மார்ச் மாதம் 9 ஆம் தேதி நாதர்ஷா டில்லியில் நுழைந்தார். முகலாய அரசர் முகமதுஷாவின் இராணுவத்தை தோற்கடித்த அவர் டில்லியை சூறையாடி மே மாதம் டில்லியில் இருந்து சென்றார்

99. அவர் புகழ் பெற்ற மயிலாசனத்தையம் கோகினூர் வைரத்தையும் டில்லியில் இருந்து கொண்டு சென்றார். கோகினூர் என்றால்mountain of lightஎனப் பொருள்படும்.

100. அகமது ஷா பகதூர்: 1748 முதல் 1754 வரை ஆட்சி செய்தார்.

101. அகமது ஷா ஆப்தாலி இந்தியாவின் மீது சனவரி திங்கள் 1748ல் படையெடுத்தார். அகமது ஷாவினால் மான்பூர் என்ற இடத்தில் தோற்கடிக்கப்பட்டார். பின் 1950ல் ஆப்தாலி இரண்டாவது முறையாக இந்தியா மீது படையெடுத்து அகமது ஷாவை தோற்கடித்தார். 1751ல் மீண்டும் முகலாய பேரரசு மீது மூன்றாவது முறையாக போர் தொடுத்து காஷ்மீரை கைப்பற்றினார்

102. இரண்டாம் ஆலம் கீர்: 1754 முதல் 1759 வரை ஆட்சி செய்தார். அகமது ஷா ஆப்தாலி இந்தியாவின் மீது நான்காவது முறையாக 1756ல் படையெடுத்தார். 23.01.1757ல் டில்லியை சூறையாடினார்

103. மூன்றாம் ஷாஜகான்: 1759ல் ஆட்சி செய்தார்

104. அகமது ஷா ஆப்தாலி இந்தியாவின் மீது ஐந்தாவது முறையாக அக்டோபர் 1759ல் போர் தொடுத்து பஞ்சாப்பை கைப்பற்றினார்

105. இரண்டாம் ஷா ஆலம்: 1759 முதல் 1806 வரை ஆட்சி செய்தார். அகமது ஷா ஆப்தாலி படையெடுப்பு 1761ல் நடைபெற்றது. ஆங்கிலேயருக்கு வங்காளம், பீகார் மற்றும் ஒரிசா ஆகிய இடங்களுக்கு நிசாமி என்ற உரிமையை அளித்தார். ஆங்கிலேயரின் பாதுகாப்பை ஏற்றார்

106. இரண்டாம் அக்பர் ஷா: 1806 முதல் 1837 வரை ஆட்சி செய்தார்

107. இரண்டாம் பகதூர் ஷா: 1837 முதல் 1857 வரை ஆட்சி செய்தார். முதலாம் சுதந்திரப் போரில் கலந்து கொண்டார். ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு பர்மா கொண்டு செல்லப்பட்டு அங்கேயே உயிர் துறந்தார். இத்துடன் முகலாயர்கள் ஆட்சி முடிவுற்றது

முகலாயர் நிர்வாகம்:

108. முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் ஆணைகள் எழுத்து வடிவத்தில் பிறப்பிக்கப்பட்டது. எனவே முகலாயர் காலத்தை காகித சர்க்கார் (Paper Government) என்று அழைக்கப்படுகிறது

109. முகலாயர் காலத்தில் இருந்த மிகுந்த முக்கிய 8 அமைச்சர்கள்:

110. பிரதமர்

111. வசீர்: நிதி அமைச்சர்

112. மீர் பக்ஷி: முதன்மைக் கணக்கர்

113. கானெ ஜமான்: அரசவை முதன்மை அலுலவர்

114. சத்ரெ சுதூர்: பொதுச் சொத்து பராமரிப்பாளர்

115. முக்தசிப்: பண்டபாடு

116. காஜி: தலைமை நீதிபதி

117. தாரோகா: போக்குவரத்து

118. முகலாயர் கருவூலங்கள்:

119. பைத்து மால் - பொதுக் கருவூலம்

120. அந்தரூன் மகால் - ஆலயத்திற்காக செலவு

121. பாகியாபழங்கடன்கள்

122. ஜேபே காஸ் - அரச குடும்பத்திற்கு

123. ஜேபே ஃபைஜ் - ஆபரணங்கள்

124. காஜானே ரிக்காப் - நடமாடும் கருவூலம்

125. கார் கானாஎல்லா பொருட்களும் விற்குமிடம்

முகலாயர் காலத்து கட்டிடக் கலைகள்:

126. ஹீமாயூன் கல்லறை: மிராக் மீர்சா கியாக் என்ற பாரசீக கட்டிக கலைஞரால் தில்லியில் கட்டப்பட்டது. தாஜ்மகாலுக்கு இது முன் உதராணம் ஆகும்

127. ஆக்ரா கோட்டை: காசிம் கான் என்ற கலைஞரால் கட்டப்பட்டது

128. டெல்லி வாயில்: இது யானை வாயில் என்று அழைக்கப்பட்டது

129. ஷாஜகானின் ஆட்சிக்காலம் முகலாயக் கலை கட்டிடக் கலையின் சிறப்புமிகு காலமாகும்

130. ஷாஜகான் பொறியியல் அரசர், கட்டிடக்கலையில் இளவரசர் என அழைக்கப்படுகிறார்

131. உலக அதிசயங்களில் ஒன்றனா தாஜ்மகால் 1653ல் கட்டி முடிக்கப்பட்டது. இதனைச் சலவைக்கல் கனவு என்று அழைக்கின்றனர்.

132. பிரஞ்சு நாட்டு கலைஞர் தாவர்னியர் இதனைக் கட்ட சுமார் 3 கோடி செலவழிந்திருக்கும் எனக் குறிப்பிடுகிறார்.

பிற முக்கிய கட்டிடங்கள்:

133. மோதி மஸ்ஜித் (முத்து மசூதி)

134. ஷாஜகானா பாத் (புது தில்லி)

135. செங்கோட்டை (சிவப்பு மணல் கல்லால் கட்டப்பட்டது)

136. ஜீம்மா மஸ்ஜித்

137. ஜஹாங்கீரின் கல்லறை

முகலாயர் காலத்து ஓவியங்கள்:

138. பாரசீக ஓவியக் கலையை முகலாயர்கள் இந்தியாவிற்கு கொண்டு வந்தனர்

139. இந்தோ-பாரசீக ஓவியக்கலை முறை புதியதாக தோற்றுவிக்கப்பட்டது

140. ஹீமாயூன் காலத்தில் மீர் சையத் அலி மற்றும் அப்துல் சமது ஆகிய இரு பெர்சியாவில் ஓவியர்கள் இந்தியா வந்தனர்

141. பகாரி வகை ஓவியங்கள் இராசபுத்திரர்கள் வகையைச் சார்ந்தவை

142. முகமது காதர், மீர்உசேன் ஆகியோர் ஷாஜகான் காலத்தில் புகழ் பெற்ற ஓவியர்கள்

143. ஜகாங்கீர் காலத்தில் ஓவியக் கலை மிக உன்னத நிலையை அடைந்தது. இயற்கை சூழ்நிலைகள், விலங்குகள், பறவைகள், அரசவை நிகழ்ச்சிகள் ஓவியமாக வரையப்பட்டது. பிஸ்வான் தாஸ் மற்றும் உஸ்தாத் மன்கூர் ஆகியவர்கள் ஜகாங்கீர் காலத்தில் வாழ்ந்த மிக புகழ் பெற்ற ஓவியர்கள் ஆவார்

முகலாயர் காலத்து இசை:

144. இசையை ஆதரித்த அரசர்கள்: பாபர், ஹுமாயுன்,  அக்பர் மற்றும் ஷாஜகான்

145. அக்பரின் அவை இசைமேதை: தான்சேன்

146. தான்சேனின் மருமகன் லால்கான் இவருக்கு ஞான சமுத்திரா என்ற பட்டத்தை ஷாஜகான் வழங்கினார்.

147. ஷாஜகானின் காலத்து இசைக் கலைஞர்கள்: ஜகந்நாத், ஜனார்த்தனன்

முகலாயர் கால சமஸ்கிருத இலக்கியங்கள்:

148. அக்பருடைய ஆட்சியில் பார்சிபிரகாஷ் என்ற பாரசீக சமஸ்கிருத அகராதி தயாரிக்கப்பட்டது

149. கவிந்திர ஆசார்ய சரஸ்வதி, ஜகந்நாத பண்டிதர் ஆகியோர் ஷாஜகானால் ஆதிரிக்கப்பட்டனர்

150. ராஜா கானதர், கங்கா லாக்ரி ஆகிய நூல்களை ஜகந்நாத பண்டிதர் எழுதினார்

151. இவருக்கு காவிராஜ் என்ற பட்டத்தை ஷாஜகானால் ஜகந்நாத பண்டிதருக்கு வழங்கப்பட்டது

152. கிருதராஜ் என்பவர் சமஸ்கிருத நாடகங்களை எழுதினார்.

153. ஆனந்த லாதிக சம்பு என்ற நூலை வைஜயந்தி - கிருஷ்ணகதா இணைந்து எழுதினார்கள்.

முகலாயர்கள் கால சமஸ்கிருத இலக்கியங்கள்

154. கபீர் எழுதிய நூல்கள்: தோஹாஸ், சாகீஸ்

155. பகவான்தாஸ், மான்சிங் இந்தியில் கவிதைகளை எழுதினார்

156. இராமசரிதமனசு என்ற இந்தி இராமாயணத்தை துளசி தாசர் எழுதினார்

157. சூர்தாசர் எழுதிய நூல் சூர்சாகர்

158. கேசவதாசர் எழுதிய கவிதைத் தொகுப்பு: கவிப்பிரியா

159. சிவாசியின் ஆதரவு பெற்ற கவிஞர்கள்: திருப்பதி சகோதரர்கள், பூசான் திருப்பதி, மதிரான் திருப்பதி

முகலாயர்கால பாரசீக இலக்கியங்கள்

160. ஆட்சி மொழியாக 1893 வரை பாரசீகம் இருந்தது. பின் உருது தொடர்ந்தது

161. அபுல் பாசல் அக்பர் நாமா மற்றும் அயினி அக்பர் என்ற நூலை எழுதினார்

162. வால்மீகி இராமாயணத்தையம், மகாபாரதத்தின் சில பகுதிகளையும் மொழி பெயர்த்தார்

163. இப்ராகிம் என்பவர் அதர்வண வேதத்தை மொழி பெயர்த்தார்.

164. லீலாவதி என்ற கணித நூல் மொழி பெயர்க்கப்பட்டது

165. உபநிடதம், பகவத் கீதை, யோக வசிட்டம் ஆகியவை தாராஷீகோ என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டது

166. முகலாய பேரரசு வீழ்ச்சியடைக் காரணங்கள்:

167. 1739ல் இராணிய நெப்போலியன் நாதர்ஷாவின் படையெடுப்பு

168. 1742 மற்றும் 1750ல் அகமது ஷா அப்தாலி படையெடுப்பு

169. மராத்தியர் சீக்கியர் எழுச்சி

170. ஷியா பிரிவைச் சார்ந்த பாமி அரசர்களின் எழுச்சி