Type Here to Get Search Results !

வரலாறு | Part - 18 | 86 Questions

 History in Tamil | Part - 18

சமய இயக்கங்கள்

1. அராபி முஸ்லீம்கள் இந்தியாவின் மீது படையெடுப்பாலும், அரசர்கள் ஆதரவு பெற்றமையாலும் இந்தியாவில் இசுலாமிய சமயம் வெகு விரைவில் பரவியது. இதனால் பக்தி இயக்கங்கள் தோன்றியது. பக்தி இயக்கத்தின் காலம் 14 ஆம் நூற்றாண்டு வரை ஆகும்

2. இவ்வியக்கங்கள் சுல்தான்களின் ஆட்சிக் காலத்தில் பெரும்பாலும் தோன்றியது. துருக்கியர்கள், ஐரோப்பியர்கள், முஸ்லீம்கள் இந்தியாவில் ஆட்சி செய்தமையால் ஆரியக்கலாச்சாரம் தனது செல்வாக்கினை இழக்க நேரிட்டது. இஸ்லாமிய மதம் அரசர்களின் ஆதரவுடன் பரவ தொடங்கியது.

ஆதிசங்கரர் 788 - 820

3. இவர் கேரளா காலடியில் பிறந்தார்

4. இவர் மார்கம் ஞான மார்க்கம்  (Strict Monism)

5. இவரின் கருத்துக்கள் அத்துவைதம்

6. இவர் நிறுவிய 4 மடங்கள்:  பத்திரிநாத், துவாரகா, பூரி, சிருங்கேரி

7. இவரைபிரசன்னபுத்தர்என்று அழைத்தனர்

8. இவரின் சித்தாந்தம் அத்துவைத வேதாந்தம்

 

இராமானுஜர் 1017 – 1137

9. பக்தி இயக்கத்தில் ஈடுபட்ட மகான்களின் முன்னோடி இராமானுஜர் ஆவார்

10. கடவுளை அன்புக் கடல் என்றும், அழகின் இருப்பிடம் என்றும் கூறியவர் இராமானுஜர்ஆவார்.

11. இவர் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தார்

12. இவரது கருத்துக்கள் விசிஷ்டாத்துவைதம் ; (Monism)

13. இவர் பக்தி மூலம் உயிர்கள் இறைவனை அடையலாம் என்று கூறினார்

14. இவரது சீடர் இராமானந்தர், மாதவச்சார்யா மற்றும் வல்லபச்சார்யா

15. பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றே, பரமாத்மாவின் ஒரு பகுதியே ஜீவாத்மா

16. இவர் சைவ சமயத்தில் சேர வேண்டும் என்று சோழ அரசர் கொடுமை படுத்தியதால் ஹொய்சல அமைச்சரிடம் அடைக்கலம் புகுந்தார்

இராமானந்தர்

17. ஆனந்த பாஷ்யா என்ற உரையை எழுதினார்

18. இவர் இராமானுஜரை பின்பற்றினார்

19. 14ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தார்.

20. அலகாபாத்தில் பிறந்தார். இவர் ஸ்ரீ வைஷ்ணவ பிரிவைச் சார்ந்தவர்.

21. இவர் விஷ்ணுவை இராமர் வடிவத்தில் வணங்கினார்

22. அனைத்து வகுப்பினருக்கும் இவர் உபதேசம் வழங்கினார். சாதிமுறையை புறக்கணித்தார்.

23. இவரின் சீடர்கள் 12 பேர்

24. முக்கியமான சீடர்கள்: கீபர், ரவிதாஸ், சேனா, தான மற்றும் பிபா

25. இராமனந்தரின் பெண் சீடர் பத்மாவதி

26. இவரே பக்தி இயக்கத்தின் முதல் சீர்திருத்தவாதி

27. இந்தி மொழி மூலம் பக்தி பிரச்சாரத்தை முதன் முதலில் மேற்கொண்டார்

மத்வர் (1199 – 1278)

28. பிரம்ம சூத்திரம் என்னும் நூலை எழுதினார்

29. இவரது கொள்கை: துவைதம்

30. இவர் வைணவர்

31. இராமானுஜரை பின்பற்றி பக்தி இயக்கத்தை கர்நாடகாவில் வளர்த்தவர் நிம்பார்க்கர்

32. இவர் பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதினார்

33. இதற்கு வேதாந்த பாரி ஜாத சௌரப என்று பெயர்

34. இவரின் சித்தாந்தம்: துவைத துவைதம்

சைதன்யர் (1485 – 1533)

35. வங்காளத்தில் உள்ள நாடியா என்ற ஊரில் பிறந்தார். கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்,  சங்கீர்த்தன முறையை பிரபலப்படுத்தினார். மகா பிரபு என்று அழைக்கப்பட்டார். Gaudiya Vaishnavism எனப்படும்  Bengal Vaishnavism  இவர் தோற்றுவித்தது ஆகும்.

36. கிருஷ்ணதாஸ் கவிராஜ் எழுதிய நூல் சைதன்னிய சரிதம்ருதம் ஆகும். இவை பின்பற்றுபவர்கள் இவரை திருமால் அவதாரமாக கருதுகின்றனர்.

கபீர் (1440 – 1518)

37. அல்லா என்றாலும் ஹரி என்றாலும் ஒன்றே.

38. இவர் ராமானந்தரின் சீடர்

39. கடவுள் ஒருவரே. ஆவரை கல்லிலோ () புனித நூலிலோ காண முடியாது. அன்புள்ளவர்கள் இதயத்தில் தான் காண முடியும்.

40. சாதி, சடங்குகளை இவர் பொருட்படுத்தவில்லை.

41. பிறப்பால் பிராமணர், முஸ்லீம் நெசவாளியால் வளர்க்கப்பட்டார்

42. இவரின் உத்தேசங்களை பங்கா தாஸ் என்பவர் Bijak என தொகுத்துள்ளார்.

43. இவரை பின்பற்றியவர்கள் கபீர் பந்திகள் எனப்பட்டனர்

44. முகமதிய துறவு Pir Tagi என்பவரின் கொள்கையை பின்பற்றினர்.

மீராபாய்

45. இராசபுத்திர இளவரசி

46. விதவையான பின்  Saguna School of Bhaki என்பதன் மூலம் கிருஷ்ண பக்தி பரப்பினார்.

தாது தயாள் 1544 - 1603

47. இவரின் கொள்கையடங்கிய நூல் தாதுராம் கிபாணி

48. இவரின் சீடர்கள் தாது பந்திகள் என்று இயக்கத்தை துவக்கினார்கள்

துளசிதாசர்

49. இவர் சங்கீர்த்தனம் எனப்படும் இசைமுறையின் மூலம் கடவுளின் புகழை பரப்பினர்.

50. இவரின் சீடர்கள் இவரை மகாபிரபு என அழைத்தனர்

51. இராம சரிதமனஸ் என்ற இந்தி இராமாயணத்தை எழுதினார்

52. இவர் எழுதிய முக்கிய நூல்கள் ஜானிமங்கள், பார்வதி மங்கள், ராமாயணம், கீதாவளி, கவிதாவளி, வாயை பத்ரிக்கா போன்ற நூல்களை எழுதினார்.

வல்லபாசாரியார் (1479 – 1531)

53. வல்லபாசாரியார் வாரணாசியில் பிறந்தார்.

54. கிருஷ்ண பக்தர்

55. இவரது தத்துவம் எபிகுரியானித் தத்துவம் போன்றது

56. உயரிய பக்தி வழியாகத் தான் பிரம்மத்துடன் இணையமுடியும் என்ற கருத்து கொண்டவர்.

57. இவரின் தத்துவம்: சுத்த துவைதம்

58. இவரின் மார்க்கம்: புஷ்டி மார்க்கம்

துகாராம் (1608 – 1649)

59. இவர் வக்காரி பிரிசைச் சார்ந்தவர்

60. மராத்தியர்

61. பூனா அருகில் தேகு என்ற கிராமத்தில் பிறந்தார்.

62. பாண்டுரங்கன் எனப்படும் கிருஷ்ணனை அடங்கங்கள் எனப்படும் மராட்டிய மொழி பாடல்களில் பாடினார்

63. முக்கிய சமயத் தலைவர்கள்: நானேஸ்வரா

64. பகவத்கீதையை மராத்திய மொழியில் மொழிபெயர்த்தார்

65. இந்நூல் ஞானேஸ்வரி என்று அழைக்கப்படுகிறது.

நாம்தேவ் 1270 - 1350

66. இவர் மராத்திய மாநிலத்தை சார்ந்தவர்

67. இவர் விஷ்ணுவை வித்தோபா என்ற பெயரிட்டு அழைத்தார்.

68. இவருடைய பாடல்கள் சில சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாகிப் என்ற நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. இவர் நர்குண உபாசகர்.

ஏக்நாத்

69. சதி முறையை ஒழிக்க பாடுபட்டார்

இராமதாசர்

70. நாடெங்கும் ஆசிரமங்களை ஏற்படுத்தினார். மராட்டிய சிவாஜியின் உணர்வைத் தூண்டியவர்.

சூர் தாசர்

71. சகுண பள்ளியை நிறுவியவர்

72. வல்லபச்சார்யாவின் சீடர்

புரந்தர தாசர்

73. கர்நாடகத்தைச் சார்ந்த இவர் கிருஷ்ண பக்தர் ஆவார். கர்நாடக சங்கீத கீர்த்தனைகளை இயற்றியவர். கர்நாடாக சங்கீத பிதாமகன் என்று அழைக்கப்பட்டார்.

தென் இந்தியாவில் பக்தி இயக்கம்:

74. சிவனை வழிபட்டவர்கள் நாயன்மார்கள்

75. மொத்த நாயன்மார்கள் 63 பேர்

76. முக்கிய நாயன்மார்கள்

1) அப்பர் 2) சுந்தரர் 3) மாணிக்கவாசகர்

77. இவர்கள் சமயக் குரவர்கள் எனப்பட்டனர்.

78. அனைத்து நாயன்மார்களின் பாடல்களை தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி

79. தேவராப் பாடல்களை எழுதியவர்கள்: அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர்

80. திருவாசகப் பாடல்களை எழுதியவர் மாணிக்கவாசகர்

81. நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நூல்: பெரிய புராணம். இதனை எழுதியவர் : சேக்கிழார்

ஆழ்வார்கள்

82. விஷ்ணுவை வழிபட்டவர்கள் ஆழ்வார்கள் எனப்பட்டனர்

83. இவர்கள் மொத்தம் 12 பேர்

84. இவர்கள் எழுதிய பாடல்களை நாதமுனிகள் என்பவர் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் என்ற நூலாக தொகுத்ததுள்ளார்

85. ஆழ்வார்கள் 12 பேர்கள்

86. திருப்பாவை பாடல்கள் தமிழ்நாட்டில் மார்கழி மாதத்தில் பாடப்படுகிறது